சனி, 20 நவம்பர், 2021

கார்த்திகை நாள்

 கார்த்திகை திருநாள் என்பது கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் அறு மீன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் நிலவும் நெருங்கும் நாள்.இந்நாளில் வீடுதோறும் பழந்தமிழர் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதன் காரணம் மறைந்து போய் பின்னாளில் அது முருகனின் கார்த்திகை விழாவாகவும்  சிவன் பிரம்மா மாலன் கதையாகவும்  மாறி இந்து சமய விழாவாக மாறிப்போனது.

தொல்காப்பியம் புறத்திணைஇயல்  35 

பரிபாடல்- 10, 11

மலைபடுகடாம் -10, 99-101

புறநானூறு- 229

நற்றிணை - 58, 202

அகநானூறு 141, 185

களவழி நாற்பது -17

என சங்கநாட்களில் கொண்டாடப்பட்ட கார்த்திகை விளக்கு ஒளி நாள் சங்கம் மருவிய காலத்தில் காரணம் மாறி கொண்டாடப்பட்டதை முத்தொள்ளாயிரம் சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்கள்  பதிவு செய்துள்ளன.பிற்பாடு பக்தி இலக்கிய காலத்தில் சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு காரணம் மாறிக் கொண்டாடப் பட்டதை திருமந்திரம்  தேவார கபாலீச்சுரப்பதிகம் திருவெம்பாவை பெரியபுராணம்  அருணகிரியார் பாடல்களில் காண முடிகிறது.

சங்க நாட்களில் நமது முன்னோர்கள் கொண்டாடிய இந்தப் பழமை விழாவின் காரணம் தற்போது நமக்குப் புரிபடவில்லை. உழவுக்கு உறுதுணையான வடகிழக்குப் பருவமழையினை வரவேற்க வீடு தோறும் விழக்கேற்றி கொண்டாடி  இருக்கலாம். ஆரல் இறால் எரிநாள் அழல் ஆ அல் அளகு அறுமீன் எனக் கடுந்தமிழ்பெயர் கொண்ட இந்நாளில் அனைவருக்கும் தொல்லியலாளர் நாராயணமூர்த்தியின்  கார்த்திகை விளக்கொளிநாள் வாழ்த்துகள்.💥

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக