புதன், 17 மார்ச், 2021

சித்த மருத்துவத்தில் நோய்களின் எண்ணிக்கை

 அகத்தியர் ரத்தின சுருக்கம் என்ற சித்த மருத்துவ நூலில் 62 வகை நோய்களின் அடிப்படையில், மனிதர்களுக்கு 4448 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

1. வாத நோய்- 84

2. பித்த நோய்- 42

3. சிலேத்தும நோய் - 96

4. தனூர் வாயு- 300

5. கண் நோய்- 96

6. காச நோய்- 7

7. பெரு வயிறு- 8

8. சூலை நோய்- 200

9. பாண்டு- 10

10. சிலந்தி நோய்- 60

11. குன்மம்- 8

12. சந்தி நோய்- 76

13. எழுவை (கழலை)நோய்- 95

14. சுர நோய்- 64

15. மகோதரம் நோய்- 7

16. தலையில் வீக்கம்- 5

17 உடம்பு வீக்கம்- 16

18. பிளவை நோய்- 8

19. படுவன்நோய்- 11

20. தொப்புள் நோய்- 7

21. பீலி நோய்- 8

22. உறுவசியம்- 5

23. கரப்பான் நோய்- 6

24. கெண்டை நோய்- 10

25. குட்ட நோய்- 20

26. கதிர் வீச்சு நோய்- 3

27. பல்-ஈறு நோய்- 6

28. சோகை- 16

29. இசிவு- 6

30 மூர்ச்சை- 7

31. சூலை நோய்- 48

32. மூலம்- 9

33. அழல் நோய் - 10

34. பீனிசம்- 76

35. நஞ்சுக் கடி- 76

36. நாக்கு-பல் நோய்- 76

37. கிரகணி நோய்- 25

38. மாலைக் கண்- 20

39. அதிசாரம்- 25

40. கட்டி- 12

41. கிருமி நோய்- 6

42. மூட்டு நோய்- 30

43. முதிர்ந்த கீல் நோய்- 20

44. கக்கல் (வாந்தி) நோய்- 5

45. கல் அடைப்பு- 80

46. வாயு நோய்- 90

47. திமிர்ப்பு நோய்- 10

48. விப்புருதி- 18

49. மேக நீர்- 21

50. நீர் நோய்- 5

51. நஞ்சுவாகம்- 16

52. செவி நோய்- 10

53. விக்கல்- 10

54. அரோசிகம்- 5

55. மூக்கு நோய்- 10

56. கடிநஞ்சு- 500

57. காயம், குத்து வெட்டு - 700

58. கிரந்தி- 48

59. பறவை நஞ்சு நோய்- 800

60. புறநீர்க் கோவை- 200

61. உதடு நோய்- 100

62. பிள்ளை நோய்–100. சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 8903635949, 04258-226495

பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள நாட்களின் தமிழ்ப் பெயர்கள்

 பண்டைய பண்டையர் எனும் தொல்பாண்டியர்கள் சந்திரகுல மரபைச்சார்ந்தவர்கள்.அஃதொப்ப தமிழர்களும் சந்திரனையே காலம் காட்டு பொருளாகக் கொண்டிருந்தனர்.எனவேதான் சந்திரனின் நாளோட்டக்கணக்கை தமிழில் நுட்பமாக கோடினர்.

குமரிவாழ் தமிழர்கள் இதனையே கறுத்த உவா என்றும் வெளுத்த உவா என்றும் குறிப்பிட்டனர்.தூய தமிழில் குறிப்பிடப்பட்ட நாள்கணக்கை வடமொழிச்சொற்களை தந்திரமாக புகுத்தி தமிழை மண்மறையச் செய்தது காலத்தின் சதி.

நிலவிலுள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்

 சொல்லாடல்காண்போம்.

பிரதமை- ஒன்றாம் வளர்பிறை

துதியை - இரண்டாம் வளர்பிறை

திரிதியை - மூன்றாம் வளர்பிறை

சதுர்த்தி - நான்காம் வளர்பிறை

பஞ்சமி - ஐந்தாம் வளர்பிறை

சஷ்டி - ஆறாம் வளர்பிறை

சப்தமி - ஏழாம் வளர்பிறை

அட்டமி - எட்டாம் வளர்பிறை

நவம் - ஒன்பதாம் வளர்பிறை 

தசமி - பத்தாம் வளர்பிறை

ஏகாதசி - பதினொன்றாம் வளர்பிறை

துவாதசி - பனிரெண்டாம் வளர்பிறை

திரயோதசி - பதிமூன்றாம் வளர்பிறை

சதுத்தசி - பதினான்காம் வளர்பிறை

பஞ்சதசி - பதினைந்தாம் வளர்பிறை.


இவையே ஏக் ,தோ, திரி Three, சார் பாஞ்ச் சே சாட் /சாத் அட்8 நவ்9 தஸ்10/தச்+மி யவ்/ஏகாதஸ் துவா த்ரயம் சலூரம் பின்ஸ.  .......... வடமொழி எண்ணைக்குறிக்கும் சொற்களுடன் "சே" & "மே" உஸ்ஸே உஸ்மே சேர்த்தால் (ஸே-சே-சி) (மே-மி) திதி தேதி தேத் Date கிடைக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள வர்மவித்வான்களின் வீடுகளில் இன்றும் "ஒண்ணாம் பெறை ரெண்டாம் பெறை மூணாம்பெறை(பிறை) எனும் தூயதமிழ் நாளேட்டின் தொல் நீட்சியையே பின்பற்றிவருகிறார்கள்.....

முகநூலில் வர்மாணி

https://m.facebook.com/story.php?story_fbid=126891419344547&id=100060710675086&sfnsn=wiwspmo

திங்கள், 15 மார்ச், 2021

கூட்டல் தொன்மை

 இன்று பள்ளியில் கணக்கியலில் கூட்டல், கழித்தல், பெருக்கல் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை படித்து வருகின்ற நமது பிள்ளைகள் இந்தக் கணக்கீடுகளுக்கு +, -, X, ÷, போன்ற குறியீடுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கணக்கியல் குறியீடுகள் எல்லாம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிப்பட்டு நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் பொதுவில் நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கும் நம்பிக்கை. 


+ வடிவத்தில் சந்திக்கும் சாலையை கூட்டு ரோடு என்றும் நாலு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ஊரை கூடலூர் என்பதும் நம் வழக்கம். தமிழ் நாட்டில் பல கூடலூர்கள் உண்டு. அநேகமாக இந்தக் கூடலூர்கள் மலையில் காட்டுப்பாதைகள் கூடும் இடத்தில் தான் அமைந்திருக்கின்றன. இதற்கான ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளாக கம்பம் மலைப்பதியில் உள்ள கம்பம் கூடலூரையும் ஊட்டி-மைசூர் மலைப்பாதையில் உள்ள கூடலூரையும் சொல்லலாம். 


இந்த ஊர்களுக்கு வெள்ளைகாரன் வந்தா பெயர் வைத்தான்? கூடலூர் கிழார் என்ற சங்கப்புலவரின் பெயர் கூடலூரின் தொன்மையை நமக்கு புரிய வைக்கும். இந்தக் குறியீகள் எல்லாம் இங்கிருந்து அங்கு போய், இங்கு தொலைந்து மீண்டும் அங்கிருந்து இங்கு வந்திருக்கின்றன என்பதாக தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


இன்னும் வரும் 


கவிஞர் இலக்கியச்சுடர்

குருசெயச்சந்திரன்