புதன், 18 ஆகஸ்ட், 2021

பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

 பாண்டியரும் ராவணனும்


ராவணனின் காலத்தில் பாண்டிய மன்னன் வலிமையாக இருந்தமையால் அவனோடு போரிட்டு வெல்ல முடியாத ராவணன் அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டான் என்று அவர்களுடைய தளவாய்புரச் செப்பேடு கூறுகிறது. 


தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர்

படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும்


என்று ராவணனோடு சந்து செய்தியையும் மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு எதிராகப் படைசெலுத்தியமையும் கூறப்பெறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் திடீரென்று வந்துவிடவில்லை. காளிதாஸன் தன்னுடைய ரகுவம்சத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.


அஸ்த்ரம் ஹராதா³ப்தவதா து³ராபம் 

யேன இந்த்³ரலோகாவஜயாய த்³ருப்த꞉ .

புரா ஜனஸ்தா²னவிமர்த³ஶங்கீ 

ஸந்தா⁴ய லங்காதி⁴பதி꞉ ப்ரதஸ்தே² . . 6.62 . .


எவரும் வெல்லவொண்ணாத ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பாண்டிய வேந்தன் சிவபெருமானிடமிருந்து பெற்றவன் என்பதனால் ஜனஸ்தானத்தை அழித்து விடுவானோ என்றஞ்சி பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்