சனி, 2 மார்ச், 2019

மூக்கன், மூக்கையா, மூக்காயி, தவுடன் பெயர்க் காரணம்


மூக்கன், மூக்கையா, மூக்காயி
முதலில் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட, மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு  மூக்குக் குத்தி, மூக்கையா, மூக்கன், மூக்காயி என்று பெயர் வைக்கின்றனர்.

தவுடன்
முதல் இரண்டும் பெண்ணாகப் பிறக்க மூன்றாவதாக ஆண் பிறந்தால், அல்லது முதல் இரண்டும் ஆணாகப் பிறந்து இறக்க,
மூன்றாவதாகவும் ஆண் பிறந்தால், மூன்றாவதாகப் பிறந்த அந்த ஆண்பிள்ளை நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டி, அவனைத் தானம் கொடுத்து விடுவார்கள்.  பின்னர் தவிட்டைக் கொடுத்து, பண்டமாற்று முறையில்  அவனை வாங்கிக் கொள்வார்கள்.
தவிட்டுக்கு வாங்கியபின் அவனுக்குத் தவிடன் (தவுடன்) என்று பெயர் வைப்பார்கள்.

நான்காவதாகப் பெண் பிறந்தால்
முதல் மூன்று குழந்தைகளும் பிறந்து உயிருடன் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, நான்காவதாகப் பெண் பிறந்தால் நாதாங்கிக்கும் (  nā-tāṅki   n. நா² +. Hasp of alock, staple; clincher of a chain; பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையுறுப்பு.  )  வழி இருக்காது  என்று சொல்லி,  அதவாவது நாதாங்கிகூட இல்லாத வீட்டில் வாழும் நிலை ஏற்படும் என்கின்றனர்.
எனவே, நான்காவதாகப் பெண் குழந்தை பிறந்தவுடன், குழந்தை பிறந்த வீட்டின் நாதாங்கியைக் கழட்சி எடுத்து யாரிடமாவது விலைக்கு விற்றுவிடுகின்றனர்.

நான் கூறுவது சரியா?
ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?
இதற்கான காரண காரியம் என்ன?

https://kalairajan26.blogspot.com/2018/03/blog-post.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்