ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரானாவிற்கு மருந்து கண்டறிந்து முதன்முதலாக வெற்றிகண்டுள்ளார் பெருத்தமிழ் மருத்துவர் ஐயா திருதணிக்காச்சலம் அவர்கள்


_இது தமிழர் மரபு வழிமுறையை பறைசாற்றும் வெற்றி_👍🏼
_பழந்தமிழர்  வாழ்வியலுக்கான வெற்றி_💚

_சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் கொரானாவால் பாதிக்கப்பட்ட நபர்களை அணுகி இலவசமாக மருந்துகள் அனுப்பி உலகின் #விரைவாக_குணமடைய செய்து கொரானாவிலிருந்து முற்றிலும் விடுப்பட செய்த ஐயா திருதணிக்காசலம் அவர்களுக்கு இனமான பாரட்டுக்கள்...🔥❤🔥_

_ஆங்கில வணிக கும்பலுக்கு சவுக்கடி கொடுத்து தன்னையும் தமிழர் முறையையும் நிருபித்து காட்டியுள்ளார்..._

_மருந்து மற்றும் ஆலோசனை தொடர்ப்புக்கு_
*_சித்தர் க திருத்தணிகாசலம்_*
*_rathnasiddha@gmail.com_*
*_9962812345_*
*_9092888888_*

_மேலும் இது ஏற்க மணிமில்லாத வணிக கும்பலின் அடிமைகள் கடந்து போகவும்..._

https://www.facebook.com/drthiruthani
__எனும் ஐயாவின் முகநூல் கணக்கில் முழுவிபரமும் அதற்கான சான்றும் இருக்கிறது #உதவி மற்றும் சந்தேகங்களுக்கு அவரது முகநூல் முகவரியை அணுகவும்_🤝🏽👍🏼

திங்கள், 16 மார்ச், 2020

அட்ட வீரட்டான தலங்கள்




தமிழ்நாட்டில் உள்ள எட்டு திருத்தலங்களில் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்கள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த எட்டு வீரச் செயல்களையும் அட்ட வீரட்டகாசம் என்றும், எட்டு தலங்களையும் அட்ட வீரட்டான தலங்கள் என்றும் கூறுவது வழக்கம். எட்டு வீரட்டான தலங்களிலும் ஈசனின் பெயர் வீரட்டானேசுவரர் என்பதாகும்.

1) திருக்கண்டியூர்

தஞ்சாவூர் திருவையாறு மார்க்கத்தில், திருவையாற்றுக்கு இரண்டு கி.மீ. முன்பாக இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மங்களநாயகி. இத்தலத்தில் பிரம்மனின் சிரசை ஈசன் தன் சூலத்தால் கண்டனம் செய்தார். அதனால் கண்டனபுரம் என அழைக்கப்பட்டு, மேலும் மருவி கண்டியூர் ஆயிற்று.

2) திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் வழியில், நீடூர் தாண்டி கொண்டால் என்ற இடத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஞானாம்பிகை. இத்தலத்தில், தன் மீது காமபாணம் தொடுத்து நின்ற மன்மதனை ஈசன் சாம்பலாக்கினார். காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை’ என்ற பெயரில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது;

3) திருப்பறியலூர்

மயிலாடுதுறையிலிருந்து திருகடுவூர் செல்லும் வழியில் செம்பனார் கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவியின் பெயர் இளங்கொடி அம்மை. பிரம்மனின் மூத்த குமாரனுமான, அன்னை பார்வதியின் தந்தையுமான தக்ஷனை, சிவபெருமான் வீரபத்திரர் சொரூபமாக) இங்கேதான் தலையைக் கொய்து அழித்தார். இத்தலம் தக்ஷபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

4) திருவழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் பால குஜாம்பாள். கஜாசுரன் என்ற அரக்கனை, ஈசன் ஆயிரம் கோடி சூரியன் திரண்டாற்போன்ற பேரொளி பொங்கும் தோற்றம் கொண்டு தோலை உரித்து மார்பைப் பிளந்து கொன்றார். மாசி மாத மகத்தன்று கஜ சம்ஹார நடனம் விசேஷமாக நடைபெறும்.

5) திருவிற்குடி

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில், நன்னி லத்திற்கு அடுத்த ரயில் நிலையம் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஏலவார்குழலி (பரிமளாம்பிகை). ஜலந்தரன் என்ற அரக்கனை அழித்த தலம். ஈசன் தன் திருவடியால், நிலத்தில் ஒரு வட்டம் கீறினார். சக்கரமாக மாறிய அந்த வட்டத்தைப் பிளந்து எடுக்குமாறு ஜலந்தரனை சவால் செய்தார். சக்கரத்தைப் பிளந்து எடுத்து தலையில் ஆணவத்தோடு வைத்தவுடன் ஜலந்தரன் தலைவெடித்து இரு கூறானது.

6) திருவதிகை

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறைவியின் பெயர் பெரியநாயகி (திரிபுரசுந்தரி). தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அரக்கர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளை அமைத்து முனிவர்களைத் துன்புறுத்தி வந்தனர். ஈசன் பிரம்மாண்டமான தேரில் அமர்ந்து போருக்குச் சென்று அரக்கர்களை அழித்து முப்புரங்களையும் சாம்பலாக்கினார்.

7) திருக்கோவிலூர்

விழுப்புரம் திருவண்ணாமலை மார்க்கத்தில் தென்பெண்ணை யாற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் சிவானந்த வல்லி. ஈசனிடமிருந்தே அருள்பெற்று ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரனை அழித்த இடம் அது. அந்தகாசுரனைக் கீழே தள்ளி மிதித்துக்கொண்டு அவன் மேல் சூலத்தை பாய்ச்சும் நிலையில் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி தோற்றமளிக்கிறார்.

8) திருக்கடவூர் (அ) திருக்கடையூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில், மயிலாடுதுறை தரங்கம்பாடி மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் அபிராமி. எமதர்மனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் மார்க்கண்டேயன் தன்னை சிவலிங்கத்தோடு சேர்த்து கட்டிக்கொண்டான். எமதர்மன் பாசக்கயிற்றை வீச அது லிங்கத்தையும் சுற்றிவிட்டது.

இறைவன் லிங்கத்திலிருந்து வெடித்து எழுந்து எமனைக் காலால் உதைத்து மாய்த்த தலம் இது. கார்த்திக்கை மாதம் சோமவார அபிஷேகம் நடக்கையில் இறைவன் திருமேனியில், எமதர்மன் பாசக்கயிற்றால் இழுத்த போது ஏற்பட்ட தழும்பைக் காணலாம் இக்கோயிலில் தினமும் திருமணங்கள், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சடங்குகள் நடக்கும்.

திருசிற்றம்பலம்

செவ்வாய், 3 மார்ச், 2020

108-ம் அதன் சிறப்புக்களும்

     108ன் சிறப்பு தெரியுமா? அவற்றை பார்ப்போம்
படைத்த கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.

பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத் தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத் தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூ மியில் விட்டத்தைப்.போ ல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதேஎண் ணிக் கையில் பல விஷயங்களும்அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக.நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின்.எண்ணிக் கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது.வருடம் 108 மணி ஓசைகளால்
வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள.வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள்.உள்ளதாக புத்த மதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன்.கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தா னங்கள் என வர்மக்கலை கூறு கிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப்புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜப மாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவ தாக தந்திர சாஸ்திரம் கூறு கிறது.
108 என்பது வரையறைக்கு ட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையைஉணர்த்துகிறது.
“1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் “0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும்உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?ஜபமாலையில்108 அல்லது 54அல்லது 27
மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்தஎண்ணிக்கை களைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).
 நம்முடைய வழி பாடுகளில்,நாம் பயன்படுத்தும் பூஜை பொருட்களெல்லாம் ஒற்றை படையில் இருக்கும்.குத்து விளக்கு இரண்டு,வாழைமரம் கட்டும்போது இருபுறமும் இரண்டு வைப்பார்கள்.ஆனால் சுவாமி படங்கள் ஒற்றை படையில்தான் இருக்கும்.
மாவிலை தோரணங்கள் கட்டப்படும்போது ஒற்றை ப்படை இலைகளாக வைத்துதான் கட்டுவார்கள்.மந்திர சாஸ்திரத்தில் இந்த எண்ணிக்கைகள் 108க்கும் 1008க்கும் மகத்தான மகிமை இருக்கிறது.இந்த 108 முறை மந்திரம் சொல்லப்படும் வேளையில் மந்திர அதிர்வுகளின் சாஸ்வதம்,நாம் இழுக்கின்ற மூச்சுக் காற்றில் கலந்துள்ள பிராணவாயுவோடு சேர்ந்து, இரத்தத்தோடு கலந்து விடுகிறது.
அந்த மந்திரங்களை முழு மையான எண்ணிக்கையில் கூறி பூர்த்தி செய்யும்போது,நம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடைந்து,மந்திர அதிர்வுகளையும் உள்வாங்கி ரத்தத்துடன் உடலின் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது என்று மெய்ஞானிகள் கூறியுள்ளனர்.இதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களையும்,ஒரு நாளின், நான்கு பாதங்களையும் கணக்கிட்டால் வருகின்ற எண்ணிக்கை 108 ஆகும்.அதோடு இந்த பிரபஞ்சமே ஒரு வட்டப்பாதை என்று சொல்லப்படுகிறது.ஒரு ராசி மண்டலம் என்பது 30 பாகையை கொண்டது.12 ராசி மண்டலங்கள் 360 பாகையைக் கொண்டது.நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து இந்த 360 பாகை சுழற்சியை பூர்த்தி செய்கிறது.இந்த உள் அர்த்தத்தை வைத்துதான் நாம் மந்திரங்களை 108 முறை ஜபிக்கிறோம்.
 ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து, புலனைந்து பருவுடல் நுன்னுடல் அறிவுடல் என்னும் உடல்கள் மூன்று ஆக மொத்தம் பதினெட்டு. இந்த பதினெட்டையும் ஒவ்வொரு ஆதாரமாக ஜபித்து கடக்க வேண்டும். ஆதாரங்கள் ஆறு. முதலில் மூலாதாரம் மண் தத்துவம் விநாயகர் அடுத்தது ஸ்வாதிஷ்டானம் நீர் தத்துவம் பிரம்மா, மூன்றாவது மணிப்பூரகம் என்னும் அக்னி தத்துவம் மகாவிஷ்ணு, நான்காவது அநாகதம் வாயு தத்துவம் ருத்ரன், ஐந்தாவது ஆகாய தத்துவம் கண்டம் மகேஸ்வரன், ஆறாவதாக சுழிமுனை நுன் ஆகாயம் என்ற தத்துவம் சதாசிவம். இவ்வாறாக 108 முறை ஜபிக்கும் போது மனம் என்னும் திரை விலகி ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும். அதேசமயம் மந்திரம் உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும் காரணம் புறத்தில் ஜபிக்க பிராணன் விரயமாகிறது. மனமும் உள்ளே ஒடுங்காது சந்தோஷம்.
நாம் தெரிந்து கொள்ளவேண்டும்
திருச்சிற்றம்பலம்
108 என்ற எண்ணில் சூட்சுமம்.
சூரியனும், சந்திரனும் உலகத்தின் இயக்கத்திலும், மனித வாழ்க்கையிலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
நமக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம்,
சூரியனது குறுக்களவின் (விட்டம்) 108 மடங்குகள்  ஆகும்.
அது போலவே, நமக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம்,
சந்திரனது குறுக்களவின் 108 மடங்குகள் ஆகும்.
இதை நோக்கும் போது, 108 என்ற எண்ணில்
ஏதோ இரு சூட்சுமம் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்தச் சூட்சுமத்தை வேத ஞானம் கைக்கொண்டுள்ளது.
மந்திர ஜபங்களைச் சொல்ல வேண்டும் என்றால்,
108 அல்லது அதன் மடங்குகளில் சொல்ல வேண்டும்
என்பது வேத ஞானம்.
அது போலவே வேத வழிபாட்டுக்கான யாக சாலைகளின் அளவிலும்,
இந்த 108 என்னும் எண் வருகிறது.

தென்புலத்தார் தொல்லியல் வாட்சப் குழுவில் திரு காளியப்பன் 02/03/2020 பகிர்ந்தது