வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழ் மாமன்னர்களின் வெற்றி

கண்ணகிக்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க

பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிரங்கி, யானைமீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து

கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் சேரன் செங்குட்டுவனை நான் கண்டதில்லை.

* மௌரிய மன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் இளஞ்சேட் சென்னியை கண்டதில்லை

* குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியை பதிந்த, கடாரம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை கண்டதில்லை.

*பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் பெருஞ்சோற்றுதியனை கண்டதில்லை

*நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி சோழனை கண்டதில்லை

*சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு

எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் கரிகால் பெருவளத்தானை கண்டதில்லை

* கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய நெடுஞ்சேரலாதனை கண்டதில்லை

* புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மனை கண்டதில்லை...

* நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை (63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை

* இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் நரசிம்ம பல்லவனை கண்டதில்லை

*இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் விஜயாலய சோழனை கண்டதில்லை

* காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட மாமன்னன் இராசராசனை கண்டதில்லை.

* தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த பழுவேட்டரையரை கண்டதில்லை
* 12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை மிஞ்சிய வீரமகன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய இராசேந்திர சோழனை கண்டதில்லை.

சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய குலோத்துங்க சோழனை கண்டதில்லை

பிற்கால பாண்டியர்கள் நெல்லூரில் வெற்றி மாமுடியும் வீரமாமுடியும் சூடிய சுந்தரபாண்டியனை கண்டிருக்கவில்லை

மார்க்கோ போலோ வியந்த குலசேகர பாண்டியனை கண்டிருக்கவில்லை இன்னும் பலர் உண்டு

ஆனால் இவர்களை இவர்களின் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை ஒருங்கே கொண்ட எம் தலைவன் பிரபாகரனை, அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.

காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் கரிகால் பெருவளத்தான்.

தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.

இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

 வரலாறென படிக்கும் எம் குழந்தைகள் இந்த மாவீரர்களின் வெற்றிக்கதைகளை படிக்க வேண்டும்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

நாட்டு ரக விதைகள் எனது தோட்டத்தில் கிடைக்கும்.

வாரந்தோறும் புதன்கிழமை மதியம் 3மணி முதல் 5மணி வரை நாட்டு ரக விதைகள் எனது தோட்டத்தில் கிடைக்கும். தேவைப்படுவோர் நேரடியாக வந்தும் பெற்று செல்லலாம். வருவதற்கு முன் 8526366796 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உறுதி செய்துவிட்டு வரவும்.

பரமேஸ்வரன்.
ஊத்துப்பள்ள தோட்டம்,
குட்டியாகவுண்டன்புதூர்,
கொன்றங்கி கீரனூர் அருகே,
ஒட்டன்சத்திரம்.
திண்டுக்கல் மாவட்டம்.

விதைகள் மிக குறைந்த அளவில் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால் தலைமுறைக்கும் விதைகளை அழியாது பார்த்துக்கொள்ளலாம்.

உங்களிடமுள்ள நாட்டு ரக விதைகளை கொடுத்து உங்களுக்கு தேவையான விதைகளை பண்டமாற்று முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். விதைகளை கொரியரிலும் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கின்றோம்.

காய்கறிகள்,கீரைகள்,மூலிகைகள், மரவிதைகள்,பழங்கள், தானியங்கள்,பயிறு வகைகள் என எல்லா நாட்டு விதைகளையும் சேகரிக்கறோம்.

#நாங்கள்_தேடும்_விதைகள்:
திண்டுக்கல் தக்காளி
ஆத்தூர் தக்காளி

பழுபாகல் கிழங்கு
வெள்ளைபாகல்
செவ்வகத்தி

தமிழக கத்தரி ரகங்கள்:
1)கொட்டபட்டி கத்தரி
2)புளியம்பூ கத்தரி
3)பவானி கத்தரி
4)பூனைத்தலை கத்தரி
5)ஏந்தல் கத்தரி
6)வேட்டைமங்கலம் கத்தரி
7)ஆத்தூர் சலங்கை கத்தரி
8)குலசை கத்தரி
9)குளத்தூர் வெள்ளை கத்தரி (மானாவரி கத்தரி)
10)பொய்யூர் கத்திரி
11)சிந்தம்பட்டி பொன்னி கத்தரி
12)புழுதிக்கத்தரி
13)சுண்டக்குடி கத்தரி
14)பவானி நீளவரி கத்தரி
15)தொண்டாமுத்தூர் சம்பா வரி கத்தரி

நாட்டு முருங்கை ரகங்கள்:
1)யாழ்ப்பாண முருங்கை
2)சாவகச்சேரி முருங்கை
3)பால் முருங்கை
4)குடுமியான் மலை முருங்கை
5)வலையபட்டி முருங்கை
6)செம்முருங்கை
7)கொடிக்கால் முருங்கை
8)ஏர்வாடி முருங்கை
9)பேய் முருங்கை அ பொண முருங்கை அ மலை முருங்கை
10)பள்ளபட்டி மானாவரி முருங்கை
11)ஆத்தூர் முருங்கை
13)களி முருங்கை,
14)வலியன் முருங்கை,
15)கட்டை முருங்கை,
16)உலாந்தா முருங்கை (srilanka)
17)கரும்பு முருங்கை
18)மூலனூர் மரமுருங்கை
19)பூனை முருங்கை

நாட்டு ரகங்களில் வெவ்வேறான சுரை, பூசணி, அவரை, பீர்க்கு,
ஒலக்கூர் புடலை
வரிப்புடலை
சாம்பல் புடலை
காந்தாரி மிளகாய் ரகங்கள்
மானாவரி பகுதிக்கான நெல் ரகங்கள்,

என காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மரவிதைகள், பழங்கள், தானியங்கள்,பயிறு வகைகள் என எல்லா நாட்டு விதைகளையும் சேகரிக்கறோம்.
___________________________________
#தற்போது_எங்களிடமுள்ள_மரபு_ரக_விதைகள்.

• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும்.

தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி

கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி  உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி

மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
•  *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்

வெண்டை:
•     *வெண்டைக்காய்
•     *மலை வெண்டை
•     *சிவப்பு வெண்டை

கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்

• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
•  உருட்டு சுரை
• செம்பு சுரை

•  திருச்சி நீள புடலை
•  தேனி நீள புடலை
•  குட்டை புடலை
•   பாப்பனூத்து தரை புடலை
 
• பச்சை பட்டை அவரை
•  பெல்ட் அவரை
•  கோழி அவரை
•  செடி அவரை
•  தம்பட்ட அவரை
•  கொத்தவரை

• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்

• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்

பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை

பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு


மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
•  சிவப்பு முள்ளங்கி

• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி

கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
•     பச்சை முள் தண்டு கீரை
•     கொடி பசலைக்கீரை
•     சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை

• மூலிகைகள்•
• பூனைக்காலி
   தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்

விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது ..
வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.
• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் ஒவ்வொன்றும் 10ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது.
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்.. தமிழகத்திற்குள் கொரியர் செலவு 50ரூபாய்..
மொத்த விதைகள் தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும். 110க்கும் மேற்பட்ட விதைகள் உள்ளன.. எங்களிடமுள்ள மொத்த விதைகளும் தேவைப்படுமாயின் ரூ.1100 என்று கொடுக்கின்றோம்.

விதைகளுக்கு பணம் செலுத்த
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bankbranch:KETHAIURAMBU,ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005

பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு 8526366796 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ...
மின்னஞ்சலில் பணம் செலுத்திய ரசீதுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி

நன்றி..#பரமேஸ்....

தகவல்களுக்கு 8526366796

...!

மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. வாழ்வாதாரம் கருதி விற்க செய்கிறோம்.. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்


வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இத்தனை வேறு பாடா? தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:-

பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.

தமிழ்  மொழியில் இத்தகைய சொல்லாக்கமா  !

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில்
திரு.சன்முகம் அவர்கள் 20/02/2020 பகிர்தது

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகை தொகுப்பு

* அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
* உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
* உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
* குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
* தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
* துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
* நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
* நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
* பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
* மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
* மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
* விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில் திரு.உமாதேவ் அவர்கள் 19/02/2020 பகிர்தது 

வியாழன், 13 பிப்ரவரி, 2020

இளைய தலைமுறைக்கான ஆய்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குமரிக்கண்டம் ஆய்வாளர் ஒரிசா பாலு வுடன் கலந்துரையாடல் .

பள்ளிக்கரணை சான் அக்காடமியில்
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள்-

ஸ்ரீகரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்குப்பின்னர். 8.2.2020 , அன்று காலை7.30 மணிக்கு மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் புறப்பட்டு சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும்
சான் அகாடமியை சென்றடைந்தோம்.
எங்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
அங்கு ‘தமிழ்நாட்டின் பாரம்பரியம்’ என்ற பொருளில்  எங்கள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியை ஜானிகா தொகுத்து வழங்கினார். தமிழ்தாய் வாழ்த்து நிகழ்வுக்குப்பின்னர்   இளம் விஞ்ஞானி பார்வதி குமரி அறிவியல் பேரவையின்  இவ்வாண்டு செயல்பாடுகள் குறித்து (2019-2020) தொகுத்து கூறினார்.
பள்ளியின் முதல்வர் திருமதி.சுஜாதா சரவணன் அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்.
குமரி அறிவியல் பேரவையின் நிறுவனர் முள்ளஞ்சேரி மு.வேலைய்யன் அறிமுக  உரை வழங்கி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சான் அகாடமிக்கு நன்றி கூறி,
அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்சியின் சிறப்பு விருந்தினரான ஒரிசா பாலு அவர்களைப் பற்றிய முகவுரையை ஜானிகா கூறிவிட்டு அவரை வரவேற்று பேசினார்.....
ஒரிசா பாலு அவர்கள் தனது உரையை துவங்கினார். தமிழ்நாட்டையும் தமிழர்கள் பண்டைய நாகரீகம்  பற்றியும் பல அரிய உண்மைகளை  ஆதாரங்களுடன் விளக்கினார்.
முதலில் அவர் தனது பெயருடன் தனது ரத்த வகையை சேர்த்திருப்பதன் காரணத்தை தெரிவித்தார். பல வருடங்களுக்கு
முன்னர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இரத்த வகை தெரியாத காரணத்தால், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் உயிரிழக்க நேரிட்டது. இதை உணர்ந்த பாலு அவர்கள் பின்பற்ற துவங்கியவுடன் பலர் இதை பின்பற்றினர். இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன எனக்கூறினார்.
நமது உடல் வெப்பமண்டல காலநிலையை தாங்கும்படி உள்ளது என்றும் தனக்கு மிகவும் விருப்பமான இடம் கன்னியாகுமரி என்பதை தெரிவித்தார்.
குமரிக் கடல் தற்பொழுது லட்சதீவு கடல் என்று அழைக்கப்படுகிறது.
 நாடுகளைப் பற்றி பல சுவையான செய்திகளை தெரிவித்தார்.
 ஐக்கிய நாடுகள் அமைப்பில் 197 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அறிஞர்கள் பலர் உலக நாடுகளுக்குச் சென்று தமிழை பரப்பிய காரணத்தால்
75 நாடுகளில்  தமிழ் பேசுகின்றனர் என்றார்.
நாம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுவதாக நினைத்திருக்கிறோம். ஆனால் 130 நாடுகளில் தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.
218 நாடுகளில் கடவுச்சீட்டு (Passport) பழக்கத்தில் உள்ளது.
111நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ் இமயமலை முதல் மடகஸ்கார் வரை பரவி உள்ளது.பழந்தமிழர்கள் காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர்.
இந்தியாவின் வேர் கன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள
முத்து குளிவயல் என்ற இடத்தில் தான் பண்டைய அறிவியல் அறிஞர்கள் வானிலை ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் வயது ஐந்து கோடி வருடங்களுக்கும் மேல்ஆகும்.பண்டைக்
காலங்களில் சுறா பிடிக்கும் போட்டிகள் நடந்துள்ளன.
அதில் தூத்தூர் மக்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்ற குறிப்பும் கிடைத்துள்ளது என்றார் . வால்மீகி இராமாயணத்தில் ‘மகேந்திரகிரி’
என்ற சொல் காணப்படுகிறது.
தமிழர்கள் அடிப்படை அறிவியலை நன்கு அறிந்திருந்தினர்.
உளியின்  கண்டுபிடிப்பின் மூலம் உலோகங்கள் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்ற  அங்கீகாரம் கிடைத்தது. 1863 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் இடத்தில் முதல் கல்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற பல கைகோடாரிகள் கிடைத்தன.
இதை ‘ Madras Stone Age factory’ என்றுஅழைக்கப்பட்டது.
 பல அதிசயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுதும்கூட            ஆறு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.மலைவாழ் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றார்.கோயம்பத்தூரில்
உள்ள ஆழி ஆறு கடலில் கலக்காது என தெரிவித்தார்...
 35 நாடுகளில் தமிழ் ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அத்திரப்பாக்கம் என்ற ஊர் உள்ளது ,
இங்குதான் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை ஆரம்பித்
திருக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 தொல்காப்பியத்தை கற்பதன் மூலம் பழந்தமிழ் மக்களின்வாழ்க்கை முறைகளை அறிய இயலும் என்று அறிவுறுத்தினார். 1300 தமிழ் Rock Art கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தவர்  திருப்பதியில் இருந்தும் கிடைக்கப்பட்டுள்ளது
என்றார்.
தமிழ் மக்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர். ஒரிசாவை ஆண்ட கலிங்க மன்னன் காரவேளன், தமிழ்நாட்டை போரிட்டு வெற்றிகொள்ள முடியாததால் தமிழ்நாட்டுடன் நட்பு பூண்டார் என குறிப்புகள் உள்ளன .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இவரையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு சிறு பகுதிதான்.
வைகை ஆற்றுப் படுகையில் இருந்து பெரிய கல்சிற்பங்கள் கிடைத்துள்ளது.
1000 வருடங்களுக்கு முன்னர் திருப்பூரில் வாணிக சமயம் என்ற காலம் இருந்துள்ளது. இங்கு வணிகர்கள் கடல்வழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.
கடலுக்கு அடியில் சென்றுவிட்டு திரும்பிவருபவர்கள் திரை மீளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
மீனவ மக்களே பெரும்பாலும் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்திருந்தனர்.
பழந்தமிழ் மக்கள் கப்பல் கட்டும் தொழிலிலும் கடல்வழி வணிகத்திலும் சிறந்துவிளங்கினர்.
42 மரங்களைக் கொண்டு பாய்மர கப்பல்களை உருவாக்கினர், அதில் பயன்படுத்திய கருங்காலி மரம் இடி தாங்கியாக பயன்பட்டது.
எல்லா துறைமுகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. 12,000 க்கும் அதிகமான கடல் வழிகள் இருந்தன.
 தமிழ் மக்கள்தான் முதன்முதலில் மண்பாண்டங்களை உருவாக்கினர்.
அம்மி செய்ய அறிந்திருந்தனர்.
குமரி மாவட்டம் முன்பு கௌரியன் நாடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் ஒரு வித தோடுகளை பணமாக பயன்படுத்தினர்.
குமரி கண்டம் கடல் கோளால் அழியப் பட்டதற்கு மற்றுமொரு ஆதாரம் முட்டம் பகுதியில் கடலுக்குள் காணப்படும் ஆடு மேய்ச்சான் பாறை ஆகும்.
 பண்டைக்காலத்தில் மக்கள் இப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்த்திருந்தனர்  அதனாலேயே இப்பெயர் கிடைத்தது. கலிங்கராஜபுரத்தில்            7 மீ உயரமுள்ள சிவன் கோயில் ஒன்று மண்ணில் புதையுண்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சதீவில் தாவரங்களின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன.
 முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்’  என்ற சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 12,000 தீவுகளில் 9,000 தீவுகள் கடலில் மூழ்கின என்பதாகும்  பழந் தமிழர்களின் கணக்கிடும் திறமையும்ஆச்சரியமானதுதான். 1959 - 1965 வரை 14 நாடுகள் இணைந்து நடத்திய International Indian Ocean Expedition என்ற ஆராய்ச்சி மூலம் தமிழர்கள் பற்றிய பல தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
ஒரிசா பாலு அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சென்று லெமூரியா கண்டம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்....
ராமநாதபுரம் முற்காலத்தில் முகவை என்று அழைக்கப்பட்டது.... முகவை என்ற சொல் பல நாடுகளில்காணப்படுகிறதுதமிழ்நாட்டில் உள்ள கீரை வகைகளில் ஒன்றான புளிச்சகீரை Canof என்னும் இடத்தில் தற்பொழுது காணப்படுகிறது. கேமரூன், மடகஸ்கார், பெல்ஜியம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்து கின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னரே கடன் அட்டைகளை (Debit Card) பயன்படுத்தினர்.
பாண்டியர்கள் ஏதென்ஸ் நாட்டை ஆண்டதற்கான சான்றுகள்கிடைத்துள்ளன. துருக்கியில் அதியமான் என்ற பெயருள்ள இடம் உள்ளது. பழனி என்ற பெயரில் 16 ஊர்கள் உள்ளன.வேனாடு என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஸ்ரீகரிகோட்டாவிலும் உள்ளது.
 பிலிப்பைன்சில் இன்றும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். கொரியா மக்கள் ஆதிகேசவனை வழிபடுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பண்டைக்காலத்தில் காளையை பாண்டி என அழைத்தனர். ஆமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.
கோயில்களில் ஆமைகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சென்னையில்                  திருஆமையூர் என்ற இடம் உள்ளது. உலகத்தில் மொத்தம் 1024 திசைகள் உள்ளன.தமிழ்நாட்டில்தான் அதிகமாக நீரில் மூழ்கும் பெண்கள் இருந்தனர். மணக்குடி என்னும் இடத்தில் முத்துக்கள் அதிகமாக கிடைத்தன.
தெப்பம், நங்கூரம், ஏவுகணை, நீர்மூழ்கிக்கப்பல் போன்றவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனர் தமிழர்கள் என்ற பல செய்திகளை கூறினார்.
இவற்றில் இருந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை நன்கு அறிய முடிந்தது.
எங்களில் ஜானிகா ,காயத்ரி, பார்வதி ஆகியோர்  பின்னுட்டம் வழங்கினோம். பின்னர் பொங்கல் புனிதா வாழ்த்துரை வழங்கினார்

ஒரிசா பாலு  தன்  உரை         யில் தன் பெயருக்கு பின்னால் தன் இரத்த வகையை சேர்த்திருப்பது மக்களிடையே இரத்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என கேள்விக்கு பதிலளித்தார் .
கன்யாகுமரி தனக்கு மிகவும் பிடித்த மான இடம் எனவும்.ஏனெனில் கன்யாகுமரி வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு
நீரில் மூழ்கி இருக்கும் குமரிக் கண்டத்தில் மீனின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது அதனால் மீன்வளம் அதிகம் என்று கூறினார்.
205 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது என ஐநா சபை அறிவித்துள்ளது என்றார்.மேலும் தமிழர்கள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று மிகப்பெரிய பதவிக ளை வகித்து வருகின்றனர்.
இந்தியாவின் தென்பகுதி மக்கள் வானியலில் பழங்காலத்திலேயே ஞானத்தினைப்
பெற்றுள்ளர் என்று கூறினார்.
கன்யாகுமரி தென்மேற்கு வடகிழக்கு  பருவக்காற்றால்  மழை பெறும் பகுதியாகவுள்ளது .
தமிழர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றும் கூறினார்.

நம் தலைநகரமான சென்னையில் பழங்கால நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பர்மா,சீனா,ஓமன் போன்ற நாடுகளில் அகழ்வாராய்ச்சி யில் தமிழ்  கலாச்சாரச் சுவடுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழ்மொழியில் மட்டுமே கடல்வழி பயணக் குறிப்புக்கள் இருப்பதன் மூலமாக பழங்காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வெகுதூரம் சென்று ற்றுள்ளது
 நமக்கு தெரிகிறது என்றார். தொல்காப்பியம் நூலை நாம் படிப்பதால் தமிழ் ஆராய்ச்சிக் கான அறிவினை நாம் பெறலாம் என்று கூறினார்
அதிரம்பாக்கத்தில் 1.5 மில்லியன் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழனது வீரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்
பற்றியும் விரிவாக விளக்கினார்.
மேலும் அவர் ஆங்கிலத்தை கல்வியறிவுக்காவும் தாய்மொழியாம் தமிழினை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியதாக கூறினார்.
பழந்தமிழர்கள் இரும்பு, பட்டுத் துணி, நறுமணப் பொருள் களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவந்த தகவலினையும் கூறினார்.
பாண்டிச்சேரிக்கடலில் பெரிய கடற்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது மிகவும் பழமையானதும் என்றார்.
குமரிக் கண்டத்தினை பற்றிய ஆராய்ச்சிக்கு  மீனவர்கள் பெரிதும் உதவியதாக   கூறினார்

தமிழர்கள்  பல இடங்களில் வாழ்ந்திருந்த காரணத்தால்  தமிழ் வார்த்தை கள்  பல இடங்களில் பயன் படுத்தப்படுத்தபடுகிறது.  ..
ஆமைகள் பற்றிய  அவரது ஆராய்ச்சிபற்றி.விரிவாக விளக்கம்அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை போன்று வெளிநாடுகளில் இருப்பதன் மூலம் பண்டைய தமிழரின்   இடம் பெயர்வை நாம் அறியமுடியும் என்றார்.
நம் நாட்டின் வளத்தினை கண்டே அன்னியர் படையெடுத்து வந்தனர். என்றார்.
மேலும் நம் தமிழக விளையாட்டுகள் இன்றும் வெளிநாடுகளில்  விளையாடப்பட்டு வருகிறது..என்றுரைத்தார்.
இவரது உரையின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் தமிழினத்தினைப்பற்றியும் குமரிக்கண்டத்தினைப் பற்றியும் தெளிந்த அறிவினைப் பெற்றோம்.
ஜாண்ரபிகுமார் நன்றிகூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவிய துர்க்கதிரவியம் அவர்களுக்கு அனைவரும் நன்றியறிதலைத்தெரிவித்தனர். பாலகிருஷ்ணன் பேராசிரியர் சஜிவ் ஜாண்சன் எட்வின்சாம் திருவேங்கடம் சைனிஏஞ்சல் கனகம் விமலா பபிதா ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.ஒரு வரலாற்று ஆய்வாளருடான கலந்துரையாடல் இளையதலைமுறையினருக்கு ஆய்வு சிந்தனையை ஏற்படுத்தியது.
தொகுப்பு:
காயத்திரி
ஜானிகா.

தென்புலத்தார் குழுமத்தின் தொல்லியல் பயில்வோம் குழுவில் பாலு ஐயா  பகிர்ந்தது

சனி, 8 பிப்ரவரி, 2020

கருவூரார் அருளிய தஞ்சை இராசராசேச்சரம்.

(இந்தப் பத்துப் பாடலின் பொருளறிந்தால் அதுவே மனித அல்லல் அனைத்துக்கும் அருமருந்து என்கிறார் கருவூரார்)

உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.

நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதிகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளீர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்
நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதிர் அனையவா ழியரோ !
பொங்கழில் திருநீறு அழிபொசி வனப்பில்
புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம்
தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆர் அமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
பொன்நெடுங் குன்றுடை யோரே.