புதன், 24 நவம்பர், 2021

கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம் revenue maps can be obtained online

 https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select/buyerForm

 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்  revenue maps can be obtained online

--------------------

https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select 

-------------------

சென்னை--கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.

கணினியில் பதிவேற்றம்

இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத்துறை துவக்கிஉள்ளது.

நில அளவை துறையின், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில், இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்ட கிராம வரைபடம் தொடர்பான விபரங்கள் வரும். இங்கு விண்ணப்பதாரர் தங்கள் பெயர், முகவரி, அடையாள ஆவண விபரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.இதன்பின், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வரைபடத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 200 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்னைகட்டணம் செலுத்தியவுடன் கிராம வரைபடங்களை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு மாதத்தில், 10 வரைபடங்களை மட்டுமே பெற முடியும்.அதேநேரத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் கட்டணம் செலுத்துவதில், சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நில அளவை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Source: dinamalar

Village, town block and district maps will very soon be made available online for the benefit of land buyers, industrialists and realtors.

As part of the reforms aimed at transparency and efficiency in the Revenue Department, the Tamil Nadu government is strengthening its online services. A senior official told The Hindu, “We are designing a portal for the Survey and Settlement Department, and the services through this portal will be launched soon.”

The survey number correlation statements for every district will also be uploaded online, and this is expected to help landowners with the old and new survey/subdivision numbers of a land parcel, the official said.

At present, village maps can be accessed only in person from the taluk offices or a copy of it can be obtained in person from the offices of the Regional Deputy Directors of Survey or the office of the Director of Survey and Settlement in Chennai. As for the survey number correlation statements, only a few districts have uploaded them online.

Village maps primarily help in identifying waterbodies, especially the lesser known channels or streams, and poromboke lands, and in checking the suitability of a land parcel for agriculture. According to the Revenue Department, all 16,721 village maps have been scanned.

சனி, 20 நவம்பர், 2021

கார்த்திகை நாள்

 கார்த்திகை திருநாள் என்பது கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் அறு மீன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் நிலவும் நெருங்கும் நாள்.இந்நாளில் வீடுதோறும் பழந்தமிழர் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதன் காரணம் மறைந்து போய் பின்னாளில் அது முருகனின் கார்த்திகை விழாவாகவும்  சிவன் பிரம்மா மாலன் கதையாகவும்  மாறி இந்து சமய விழாவாக மாறிப்போனது.

தொல்காப்பியம் புறத்திணைஇயல்  35 

பரிபாடல்- 10, 11

மலைபடுகடாம் -10, 99-101

புறநானூறு- 229

நற்றிணை - 58, 202

அகநானூறு 141, 185

களவழி நாற்பது -17

என சங்கநாட்களில் கொண்டாடப்பட்ட கார்த்திகை விளக்கு ஒளி நாள் சங்கம் மருவிய காலத்தில் காரணம் மாறி கொண்டாடப்பட்டதை முத்தொள்ளாயிரம் சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்கள்  பதிவு செய்துள்ளன.பிற்பாடு பக்தி இலக்கிய காலத்தில் சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு காரணம் மாறிக் கொண்டாடப் பட்டதை திருமந்திரம்  தேவார கபாலீச்சுரப்பதிகம் திருவெம்பாவை பெரியபுராணம்  அருணகிரியார் பாடல்களில் காண முடிகிறது.

சங்க நாட்களில் நமது முன்னோர்கள் கொண்டாடிய இந்தப் பழமை விழாவின் காரணம் தற்போது நமக்குப் புரிபடவில்லை. உழவுக்கு உறுதுணையான வடகிழக்குப் பருவமழையினை வரவேற்க வீடு தோறும் விழக்கேற்றி கொண்டாடி  இருக்கலாம். ஆரல் இறால் எரிநாள் அழல் ஆ அல் அளகு அறுமீன் எனக் கடுந்தமிழ்பெயர் கொண்ட இந்நாளில் அனைவருக்கும் தொல்லியலாளர் நாராயணமூர்த்தியின்  கார்த்திகை விளக்கொளிநாள் வாழ்த்துகள்.💥