வியாழன், 23 ஏப்ரல், 2020

இந்தச் சொல்லுக்கு ஏன் இந்தப் பொருள் ? (துணுக்கு விளக்கம்)

இரா. திருமாவளவன்

 0. அம்மான்> மாமன் = அம்மா அல்லது அம்மையின் உடன் பிறந்தவர்
 0. அத்தை > அத்தன் = அப்பா/ தந்தை >> தந்தையின் உடன்பிறந்தவள் ( அம்மை > அம்மான்/ அத்தன்> அத்தை)
 0. மருமகன்> குடும்பத்திற்குப் பொருந்திய மகன் ( மருவிய மகன்) மகளின் கணவன்
 0. மருமகள்> குடும்பத்திற்குப் பொருந்திய மகள் ( மருவிய மகள் ) >> மகனின் மனைவி
 0. மாமன் > மருவிய அம்மான்
 0. மாமி > மாமன் மனைவி
 0. அண்ணன் > தமக்கும் மேலான அகவையுடைய உடன் பிறந்தான். அண் = மேல்
 0. தம்பி = தமக்குப் பின்னால் பிறந்தவன் >> தம் பின்> தம்பின்> தம்பி
 0. தங்கை > தம் பின் பிறந்த சிறியவள் , இளைவள் ( கை = சிறிய) >>> தம் + கை = தங்கை
 0. தா > கையை முன்னே தள்ளி, நீட்டிப் பெறுவது / கொடுப்பது( முன் தள்ளல் பொருள்) 
 0. மா = பெரிய , உல்> முல்> மல் = திரட்சிப் பொருள், திரண்டது பருக்கும். உல்> முல்> முழு > முகு > மிகு, முகு> மகு > மகம்= பருமை , மகம் >மக> மா, ( மகன்> மான் எனத் திரிதல் போல்) மா = பெருமை, பருமை
 0. மாரி > கரிய மழை முகிலிலிருந்து பொழியும் மழை ( உல் = கருமை பொருள் வேர். உல்>முல்>மல்>மால்= கரிய முகில், மால்>மார்> மாரி)
 0. மயிர் > கரிய தலை முடி ( உல்>முல்>மல்>மய்>மை = கண்ணுக்குப் பூசும் கருமை நிறம்; மய்>மயிர் )
 0. அயிர் > நுண்ணிய மணல் ( உல்>அல்= நுண்மைப் பொருள் வேர். உல்>அல்>அய்>அயிர் )
 0. நிலா > ஒளி வீசும் துணைக்கோள் ( உல்>நுல்= ஒளிப் பொருள் வேர். உல்>நுல்> நில்>நிலா, நில்>நிலவு )
 0. காரி >கரிய படலம் சூழ்ந்த கோள். ( உல்>குல்= கருமைப் பொருள் வேர். உல்>குல்>கல்>கர்>கரி>காரி. < கல்>கலி>சனி ~ வடமொழித் திரிபு)
 0. கரி > கரிய நிற யானை ( உல்>குல்>கல்>கரி)
 0. சாவு > உயிரற்று உடல் சாய்தல் நிலை. ( உல்>சுல்= வளைவு பொருள் வேர். உல்>சுல்>சல்>சால்>சாய்>சாய்வு>சாவு.  சாவு >சா= இறப்பு)
 0. சூரியன்> சுரீர் எனக் குத்தும் வெப்ப ஒளி வீசும் கோள். உல்>சுல்>சுர்>சுரீர். சுர்>சூர்>சூரி> சூரியன்)
 0. பூனை > கால்களால் அடிக்கடி தன் முகத்தைத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் விலங்கு. ( பூசு>பூசை > பூனை . )
 0. உழவு> நிலத்தைக் குத்திக் கிளறி பயிர் செய்தல்( உல்> துளைத்தல் பொருள் வேர். உல்>உழ்>உழு>உழவு)
 0. வா> சென்று மீண்டும் திரும்புகை. அள்>வள்= வளைதல் கருத்து வேர். வள்>வர்>வரு> வருகை. வள்>வர்>வார்> வா = வளைந்து வருதல்)
 0. முள்ளம் பழம்> முள் நிறைந்த பழம். ~ டுரியான். ( உல்= கூர்மை பொருள் வேர். உல்>முல்>முள்> முள்+அம்= முள்ளம்)
 0. புரை > துளை, உல்= துளைத்தல் கருத்து, உல்>புல்> புர்>புரை ( புரை bore)
 0. புல்> மூங்கில் ( உள்ளே துளை உள்ளது) உல்> புல்=>துளை
 0. புல்லாங்குழல்> புல் + ஆம் + குழல்= மூங்கிலால் செய்யப்பட்ட குழல்
 0. குழல்> உள் துளையுடைய தூம்பு. உல்>குல்> துளைத்தல் பொருள் வேர். குல்> குழ்>குழல்
 0. தூம்பு> உள் துளையுடைய குழாய். உல்>துள்>தும்>தும்பு>தூம்பு( tube)
 0. சுழியம்> வெறுமை வட்ட அடையாளம்; zero, உல்>சுல்= வளைவுப் பொருள் வேர், சுல்>சுழ்>சுழி>சுழியம்
 0. சிவம்> சிவப்பு நிற இயற்கைத் தீயின் நிறத்தன்மை, உல்> வெப்பக் கருத்து வேர், உல்>சுல்>செல்>செம்> செம்மை>செவ்வை>செவ்வம்>சிவ்வம்>சிவம்
 0. சிவப்பு> தீயின் நிறம், சுல்>செல்>செம்>செம்மை> செவ்வை> சிவ்வை>சிவம்>சிவப்பு.
 0. சிவப்பு>சிகப்பு ( வ> க திரிபு முறை)
 0. சேய்> செந்நிறம், சுல்>செல்>சேல்>சேய்
 0. சேயோன்> செந்நிறக் கதிரவன், சுல்>செல்>சேல்>சேய்> சேயோன்
 0. சொலிப்பு> ஒளிர் விடுதல், சுல்>சொல்>சொலிப்பு
 0. முருகன் > இளமை வடிவினன். உல்> தோன்றல் கருத்து வேர். தோன்றுவது இளமையாகி இளமைக் கருத்தைத் தரும். உல்>முல்>முள்>முரு>முருகு= இளமை. முருகு>முருகன் = இளமையன்
 0. குமரன்> இளமையானவன். உல்>கும்>குமரன். ( கும்= திரட்சிப் பொருள் வேர். இளமையானது  வலிவுடையதாய் விளங்கும்)
 0. குமரி > உருண்டு திரண்டு வலிவுற்று விளங்கும் இளம்பெண். உல்>குல்>கும்>குமரி.
 0. உயரம் > மேல் நோக்கி முன் இயங்கியிருப்பது. உல்> முன்செலல் கருத்து வேர். உல்>உய்>உயர்>உயரம்.
 0. உயிர்> முன்னோக்கி  உந்தி இயங்கிக்கொண்டிருப்பது. உல்>உய்>உயிர். உயிருடைய ஒன்று இயங்கும் வளரும்.
 0. காளான்> கரிய நிறமுடைய பூக்காத் திணை. உல்>கல்= கருமை கருத்து வேர். உல்>குல்>கல்>கள்>காள்>காளான்
 0. காளி> வெப்பம் மிகுந்த கரிய வறண்ட பாலைத் திணை இயற்கைத் தன்மை. உல்>குள்>கள்>காள்>காளி.
 0. அந்தணன்> அகத்தைத் தணித்தவன். ஆசை வெறிகொண்டைலையாது அடங்கி இருப்பவர். அகம் + தணன்> அம்+ தணன் = அந்தணன். அகம்> அம்.
 0. ஆல மரம் > அகன்று விரிந்த மரம். அகல்> ஆல். அகலம்>ஆலம். அகல மரம் > ஆல மரம்.
 0. தென்னை மரம்> வளைந்த மரம். உல்> துள்> வளைவு பொருள் வேர். உல்>துல்>தெல்>தென்> தென்னு = வளைவு . தென்>தென்னை= ஓங்கி உயர்ந்து வளைந்த மரம்
 0. மேற்கு > மேல் நோக்கிய மலையுள்ள திசை. உல்>முல்>மேல்> மேற்கு.
 0. கிழக்கு> மேற்கின் எதிர்புறமாய் கீழ்நோக்கிய திசை. உல்>குல்> தாழ்வு, படுப்பு பொருள் வேர். உல்>குல்>கீழ்>கீழ்க்கு> கிழக்கு.
 0. மண்> சேர்ந்திருப்பது. உல் = சேர்தல் கருத்து வேர். உல்>முல்>முள்>முண்>மண்.
 0. மணம்> பொருந்திய , இசைந்த வாசனை, இரு உள்ளங்கள் பொருந்திய கலியாணம். திருமணம். உல்>முள்>முண்>மண்.
 0. கலகம்> எதிரிகள் சேர்ந்து பொருதுவது. கைகலப்பது. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>கல்>கலவு> கலகம்
 0. கலாம்> கலகம். உல்>குல்>கல்>கலாம்
 0. போர்> இரு நாடுகள் சேர்ந்து பொருதுவது. உல்>புல்>பொல்> பொர்> போர்( war)
 0. களவு> மறைந்து செய்யும் திருடு. உல்> குல்> குள்>கள்= கருமை கருத்து வேர். கருமை>> இருட்டு. இருட்டில் ஒளி இல்லாததால் உரு மறையும். இவ்வாறு உருமறைந்து யாருக்கும் தெரியாமல் செய்யும் திருடு. குள்>கள்>களவு.
 0. கள்ளம்> உள்ளத்துள் மறைவாய் கிடக்கும் தீய உணர்வு. உல்> குல்>குள்>கள்>கள்ளம்.
 0. கரவு > கரிய நிறம் மறைவுணர்வுக்குக் குறியீடாகி மறைவான தீய எண்ணத்திற்கு ஆகி வந்து கரவானது. கரவு> மறைவான தீய எண்ணம். உல்>குல்>கல்>கர்>கரி> கரவு
 0. காயம்> கரியதான வானம். உல்>குல்>கல்>கய்>காய்>காயம். ( ஆகாயம்> ஆகாசம்( வடமொழி )
 0. வெப்பம் > சூடு. சூரிய ஒளி வெண்மை நிறமாகவும் இருத்தலால் வெள்ளை சூட்டுக்கும் ஆகி வந்தது. உல்> முல்>மில்> விள்> வெள்> வெய்> வெய்ம்மை> வெம்மை. வெம்பு>வெப்பு> வெப்பம்.
 0. கரம்> கடும் வெயிலில் உழவு தொழில் செய்தமையால் கருத்த கை. உல்>குல்>கல்>கர்>கரம்
 0. குளம்> நிலத்தில் குடைவாய் கிடக்கும் தாழ்பகுதியில் தேங்கும் நீர் நிலை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> குளம்
 0. அடுப்பு > சமையல் செய்வதற்கு உணவைச் சூடேற்றும் கருவி. உல்> சேர்தல் , தொடுதல், பொருந்துதல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது தீயாகும், குத்தும் எரிக்கும் ; கருக்கும் . உல்> அல்> அள் = கூர்மை, வெப்பக் கிளைக் கருத்து. அள்> அட்டு=  வெப்பம். அள்>அடு = சேர்தல், மோதல், >> மோதுவது வெப்பமாவதால் வெப்பப் பொருளுமாகியது. அள்> அடு = அடுப்பு .
 0. அட்டை = சேர்ந்து அடுக்கப்பட்டு திண்மையாகிய தாள். உடலில் ஒட்டி குருதி உறிஞ்சும் உயிரி. உல்= சேர்தல் கருத்து வேர், உல்> அல்>அள்> அடு > அட்டு > அட்டை.
 0. பசை > ஒட்டி இரு பொருள்களைச் சேரச்செய்யும் பொருள். உல்> சேர்தல், பொருந்தல் கருத்து வேர். உல்> புல்= சேர்தல், பொருந்துதல் ; உல்>புல்>பல்> பய்> பயை>பசை.
 0. பற்று > சேர்தல், ஒட்டுதல். தொற்றுதல்; உல்>புல்>பல்> பற்று ( பற்று > பற்றி> பத்தி)
 0. பல்லி> சுவரில் , நிலத்தில் பற்றி நகரும் உயிரி. உல்> புல்>பல்> பல்லி
 0. உடை > உடலில் ஒட்டி ஏற்றவாறு பொருந்த அணியும் ஆடை. உல்> சேர்தல் கருத்து வேர். உல்> உள்> உடு> உடை.
 0. உடுப்பு > உல் = சேர்தல் கருத்து வேர். உல்>உள்> உடு> உடுப்பு
 0. உடும்பு > சுவரை உறுதியாய்ப் பற்றிப் பிடித்து நகரும் உயிரி. உல்> உடு> உடும்பு
 0. ஊர்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> ஊர்.
 0. ஊர்வன> நிலத்தோடு பொருந்தி ஒட்டி நகரும் உயிரிகள். உல்> உர்> ஊர்> ஊர்வன.
 0. உறைவிடம்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> உறு > உறை > உறைவு > உறைவு இடம் > உறைவிடம்
 0. உறவு > பொருந்திய சேர்ந்த ஒட்டிய தொடர்பு. உல்> உர்> உறு > உறவு
 0. உறவினர் > ஒட்டிய தொடர்பினர். உல்> உறு>உறவு>உறவினர்
 0. தொடர்பு > ஒட்டிச் சேர்ந்திருக்கும் உறவு. உல்> துல்> துள்> தொள்> தொடு > தொடர்> தொடர்பு
 0. தொடரி > ஒட்டிச் சேர்ந்து நீட்சிபடும் பொருள். ( சங்கிலி) உல்> துல்> துள்>தொள்>தொடர்> தொடரி
 0. தொடை > இடுப்போடு காலை சேர்த்துத் தொடுத்திருப்பது/ பாக்களில் சீர்களையும் அடிகளையும் இணைப்பது. உல்> துள்>தொள்> தொடு>தொடை
 0. தொடுப்பு > கள்ள உறவு / தொடர்பு . உல்> தொள்> தொடு > தொடுப்பு
 0. தொடலை > பூக்களால் இணைக்கப்பெற்ற மாலை . உல்> தொள்> தொடு > தொடல்> தொடலை
 0. நடு > உள்ளே அளவாய்ப் பொதிந்த பகுதி/ புள்ளி. உல் > துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்> நள்> நடு.
 0. நள்ளிரவு > நடு இரவு ( இரவு 12 மணி) உல்>துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்>நள்= நடு. நள்> நள்ளிரவு
 0. நண்பகல்> நடுப்பகல்.  உல்>துளைத்தல் கருத்து . உல்> நுள்> நள்> நண்பகல்.
 0. உள்ளங்கை = கையின் உட்பகுதியாய் விளங்கும் நடுப்பகுதி.உல்>துளைத்தல் கருத்து     உல்> உள்>உள்ளம்> உள்ளங்கை.
 0. அகம்> உட்குடைவாய் உள்ள வீடு. உள் பொதிந்த உள்ளம். உல்> அல்>அகு> அகம். நடுவிடம்.
 0. அங்கை > உள்ளங்கை. அகம்= உள்பொதிந்ததால் அளவுற்று நடுவிடமானது. உல்> அல்>அகு>அகம்> அகம் கை> அகங்கை> அகம்>> அம் எனத் திரிந்து அங்கை ஆனது.
 0. நயன்> நடுவானத் தன்மை. நயன்மை. உல்>நுல்>நல்> நய்> நயன். ( நயன்> நயம்> நியம்> நியாயம்> ஞாயம்>> வடமொழி) நயன்> நயன்மை ( தமிழ்) நியாயம்/ ஞாயம் ( வடத்திரிபு)
 0. பேய்> பே எனும் அச்சக் குறிப்பு. பேபே.. என விழித்தல். அச்சத்தால் ஆக்கிக் கொண்ட உருவகம். பே>பேய்
 0. பேதை> பே அச்சக் குறிப்பு. பே> பேது= அறியாமை, பே>பேது>பேதை = அறியாமை உடையவர்.
 0. பேதலிப்பு > அறியாமையாலும் அச்சத்தாலும் நிலைத் தடுமாறல். பே> பேது > பேதலிப்பு
 0. பேக்கு> பே= அச்சக் குறிப்பு. அச்சத்தால் அறியாமை உண்டாகும். அத்தகு அறியாமை பேக்கு என்னப்பட்டது.
 0. பேக்கான் > பே>பேக்கு> பேக்கான். அச்சத்தின் நிமித்தமாய் அறியாமையுற்று அறிவு முடமான ஆள்
 0. பேமானி> பே>பேமானி அறிவு குன்றிய மாந்தன்
 0. அரத்தம்> சிவப்பு நிறத்திலான குருதி. உல்> சேர்தல் கருத்து வேர். சேர்ந்தது உராசும், குத்தும், துளைக்கும். வெப்பம் உருவாகுதற்கு இவ்வினை இன்றியமையாதது . இதனால் உல்> எரிதல் கருத்தாகியது. உல்>அல்>அர்= எரிவது செந்நிறமாதலால் சிவப்பு நிறக் கருத்தாயிற்று. அர்>அரம்> சிவப்பு நிறம். அர்>அரம்> அரத்தம் = சிவப்பு நிறக் குருதி.
 0. அரம்பம்> அறுக்கும் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>உர்>அர் = துளைப்பது பொருள்களை வெட்டும், பகுக்கும், துளையிடும். அர் > பொருள்களை வெட்டும் கருத்துக் கிளைக் கருத்து வேர். அர்> அரம் = பொருள்களை அராவி வெட்டும், தீட்டும் கருவி. அர்>அரம்>அரம்பம் = பொருள்களை அறுக்கும் கருவி.
 0. அரிமா = கூரிய நகங்களாலும் , பற்களாலும் ஏனைய உயிரினங்களைக் குத்திக் குதறிக் கொல்லும் விலங்கு. உல் > துளைத்தல் கருத்து வேர். உல்> உர்>அர்> அரி > அரிமா
 0. அரன் > செந்நிறமான சிவன். உல்= எரிதல் கருத்து வேர். எரிவது சிவக்கும். சிவந்தவன் சிவன். உல்>உர்>அர் > செந்நிறக் கருத்து. அர்> அரன் = செந்நிறமான சிவன்.
 0. உடன்> சேர்ந்திருத்தல், இணைந்திருத்தல் பொருளைத் தரும் வேற்றுமை உருபு. உல் > சேர்தல் கருத்து வேர். உல்> உள் > உடு> உடன்.
 0. ஓடு > இணைந்திருத்தல் வேற்றுமை உருபு. உள்>சேர்தல்  , பொருந்துதல் கருத்து வேர். உல்> உள்> ஒள்> ஒடு> ஓடு.
 0. கண்> பக்கம், இடம், நெருங்கல் எனும் பொருள் தரும் வேற்றுமை உருபு. உல்> கூடல், நெருங்கல் கருத்து வேர். உல்> குல்> குள்> கள்> கண் . “அவன்கண் கொடு”
 0. பால்> பக்கம் எனும் பொருளை உணர்த்தும் சொல் . வேற்றுமை உருபு. உல்> பொருந்துதல், நெருங்கல், சேர்தல், துளைத்தல் கருத்து வேர். உல்>புல்> துளைத்தல் கருத்து. புல்> புகு> பகு>பகல்> பால் = பகுப்பு. பகுக்கப் பட்டது பகுதியாகும். ஒன்றாக இருந்தது பகுக்கப்பட்டதாயினும் அருகே இருப்பதால் பக்கம் , அருகு எனும் பொருளைத் தந்தது. அவன் பால் கொடு  எனின் அவனிடத்து நெருங்கிக் கொடு எனவாகும்.
 0. ஐ > பக்கம், சேர்தல், உயர்வு, நுட்பம் முதலானப் பொருளைத் தரும். இரண்டாம் வேற்றுமை உருபு. உல்> அல் = நெருங்கல் கருத்து வேர். உல்>அல்>அய்> ஐ = சார்ந்த பொருள் தரும் வேற்றுமை உருபு. “மரத்தை வெட்டினான்”. ( மரத்தைச் சார்ந்தால்தான் , பொருந்தினால்தான் வெட்ட முடியும்.
 0. கு = சேர்தல் பொருள் நான்காம் வேற்றுமை உருபு. உல்> குல் = சேர்தல், பொருந்துதல், நெருங்கல். உல்>குல்> கு... ஈறு மறைந்து வேற்றுமை உருபானது. வீட்டுக்குச் சென்றான்.
 0. அது > உடமைப் பொருள் வேற்றுமை உருபு. ஒருமையைக் குறித்தது. உல்> சேர்தல் பொருள் வேர். உல்> அல்>அது. அவனது புத்தகம்.
 0. கள் > பன்மை பொருள் சாரியை. உல்> சேர்தல் , கூடல் கருத்து தரும் வேர். உல்>குல்>குள்>கள் = பன்மை விகுதி. சேர்ந்தன; அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டு கூடுவன. படங்கள் , வீடுகள் .
 0. கணம் > கூட்டத் தொகுதி. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கள்>கண்>கணம். சிவகணம். தூக்கணங் குருவி. தொங்கும் வகையில் தொகுதியாகக் கூடு கட்டும் குருவி.
 0. கணக்கு > எண்களைக் கூட்டியும் பெருக்கியும் செய்யும் எண்ணியம். உல்>குல்= சேர்தல், கூட்டல் கருத்து. உல்>குல்>கல்>கள்>கண்>கணம்>கணக்கு.
 0. கடம் > உள் குடைவாக உள்ள குடம் போன்ற தாளக் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> கள்>கடு>கடம். உள் குடைந்து துளைத்தக் குடம்.
 0. குடம்> உள் குடைவாக உள்ள மட்பானை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>குடு>குடம்.  ( உல்>குள்>குடு>குடுவை)
 0. மாத்திரை > கால அளவு. உல்> பொருந்துதல் கருத்து வேர். உல்>முல்> முத்து. பொருந்துதல். முத்து> மத்து= பொருந்தி, தேய்த்துக் கடையும் கோல். உல்>மல்> மால்>மாத்தல்= பொருத்தி ஒப்பிட்டு அளத்தல். பொருத்தமுற மதிப்பிடல். மால்>மா> மாத்திரை = காலத்தை பொருத்தமுற மதிப்பிடல்.
 0. மதி > காலத்தை அளக்கப் பயன்படும் துணைக்கோள். உல்>முல்>மல்> மதி
 0. நெருப்பு> தேய்த்தலால் உருவான தீ. உல்> சேர்தல், தேய்த்தல், துளைத்தல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது எரியும். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>நுல்>நுர்= ஒளி. நுல்> நெல் = ஒளி. உல்>நுல்>நெல்>நெர்>நெருப்பு.
 0. கலம்> உட்குடையப்பட்ட ஏனம். உல்= துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>கல்> கலம்.
 0. பட்டயம்> தட்டி பட்டையாக்கப் பெற்ற ஆவணம். உல்= பொருத்தல், மோதல் கருத்து வேர். உல்> புல்> புள்> பள்> பட்டு > பட்டை >> ஓங்கி பட்டென அடித்தலால் பட்டையானது. பட்டையான தகட்டில் எழுதப்பெற்ற உரிமை ஆவணம்.
 0. பட்டா > நிலப்பட்டா. பட்டையத்தில் எழுதப்பெற்ற நில உரிமை ஆவணம். ( grand)
 0. தட்டை> தட்டப்பெற்றுப் பட்டையாக்கப் பெற்ற ஏனம். உல்> துல்> துள்> தள்> தட்டு. தட்டு> தட்டை. ( உல்= பொருந்தல், மோதல் கருத்து வேர்)
 0. துணி> துணிக்கப் பெற்ற பஞ்சு நெயவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைத்தலால் பொருள்கள் சிதைந்து பிரியும். உல்> தும்> துண்> துணி.
 0. துண்டு > வெட்டப்பட்ட தனிப்பகுதி. உல்> துல்>தும்> துண்> துண்டு. துண்டுத் துணி ( towel) இறைச்சித் துண்டு. துண்டு + அம் = துண்டம். இறைச்சித் துண்டம்.
 0. கிளி > உணவைக் கிள்ளுவது போல்  கொத்தித் தின்னும் பறவை. உல்> குல்= குத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கிள்> கிளி.
 0. கிள்ளை = கிளி. உல்>குல்>குள்>கிள் >கிள்ளை
 0. புழு> ஓட்டைப் போட்டுச் சென்று உணவுண்ணும் உயிரி. உல்> புல்= துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>புழு
 0. பல்> உணவை கூர்மையால் வெட்டி சிதைக்கும் வாயுறுப்பு. உல்> புல்= கூர்மை, குத்துதல் , துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>பல்.
 0. பலா> பருத்த பழம். பெரிதாய் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உல்= திரட்சி பொருள் வேர். உல் > புல்> பல்> பல. பல்> பலா . பல்> பர்> பருமை.
 0. சில்லி = சிறிய கற்கள், சிறுத்த பொருள் , சில்லி மூக்கு. உல்> துளைத்தல் பொருள் வேர். துளைக்கப் படுவது சிதைந்து சிறுக்கும். உல்>இல்> சில் = சிறுமைப் பொருள் அடி. சில்> சில்லி
 0. சிறுமை > அளவில் குறுகிய வடிவு, குறுகிய பண்பு. உல்>இல்>சில்>சிறு> சிறுமை
 0. சிட்டு> சிறிய பறவை, சிறியது. உல்>இல்>சில்> சிள்>சிட்டு.
 0. சிட்டை = சிறிதாய்த் துண்டு செயப்பெற்ற தாள். உல்> இல்> சில்> சிள்> சிட்டு> சிட்டை
 0. சீட்டு = சிறியதாய் நறுக்கப் பெற்ற தாள் துண்டு. உல்> இல்> சில்> சிள் > சிட்டு > சீட்டு
 0. அல்லி = இரவில் பூக்கும் மலர். உல் > அல் = கருமைப் பொருள் வேர். அல்= கருமையான இரவு. அல்லி = இரவில் பூக்கும் மலர்.
 0. பிணி > தொற்றும் நோய். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>புல்> புள்> பிள்> பிண்>பிணி.
 0. நோய்> உடலை நலியச் செய்யும் நோவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைக்கப்பட்ட பொருள் மெலியும் , நலியும், சிதையும். உல்>நுல்>நொல்> நொலி>நலி. உல்>நுல்>நொல்>நொய்>நோய்.
 0. நஞ்சு> உயிரை நலியச் செய்து சிதைக்கும் பொருள். உல்> துளைத்தல் கருத்துவேர். உல்>நுல்> நல்>நய்> நைந்து. நல்> நய்>நய்ந்து> நய்ஞ்சு> நஞ்சு
 0. பாசை> கரப்பான் பூச்சி. பசை போல் ஒட்டி அரிக்கும் பூச்சி. உல்= பொருந்துதல், சேர்தல், ஒட்டுதல் கருத்து வேர். உல்> புல்>பல்>பய்>பயை> பசை>பாசை
 0. கரப்பான்> கரிய இருட்டில் மறைந்து வாழும் பூச்சி. உல்> குல்>கல்= கருமைப் பொருள் வேர். கல்> கர்>கரு. கல்> கர்>கரப்பு> கரப்பான்.
 0. கரா> நீரில் மறைந்து வாழும் முதலை. உல்> குல்>கல்>கர்>கரா. ( croc)
 0. முதலை > தலையை நீட்டி முந்தித் தள்ளிக்கொண்டிருக்கும் ஊருயிரி ( ஊரி). உல்= முற்படுதல் கருத்து வேர். உல்> முல்> முது> முதல்> முதலை.
 0. எருமை > கரிய நிறமுடைய மா. உல்> இல்> இரு>இருமை> எருமை.

தொடரும்

இரா. திருமாவளவன்

புதன், 15 ஏப்ரல், 2020

மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கோறனி நோய் (கொரோனா- COVID 19) தொடர்பான கலைச்சொற்கள் :

இனிய வணக்கம் நண்பர்களே!

1. Lockdown > பொதுமுடக்கம்
2. Stethoscope > நாடிமானி
3. Thermometer> வெப்பமானி
4. Plasters > மருந்தொட்டி
5. Dropper > சொட்டி
6. Dropping bottle> சொட்டல் புட்டி
7. Stretcher> தூக்குப் படுக்கை
8. Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
9. Mask > முகக்கவரி
10. Facial mask > முகக் கவரிழை
11. Surgical mask > அறுவை முகக்கவரி
12. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
13. First ait kit box  > முதலுதவி பொருட்பேழை
14. Blood bag > குருதிப்பை
15. Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்
16. Self monitor > தற்காணிப்பு
17. Middle East Respiratory Syndrome > நடுக்கிழக்கு சளிக்காய்ச்சல்  நோய் ( MERS- CoV)
18. Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல்  நோய் ( nCoV)
19. Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை)
20. asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
21. Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
22. communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
23. coronavirus > கோறனி நச்சில்
24. Virus >  நச்சில்
25. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல்  கோறனி நச்சில் 2.
26. COVID-19 > கொவிட் 19 (>> கோ.ந. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19)
27. epidemic > குறுந்தொற்றி/ வட்டாரப் பிணி
28. epidemiologist > கொள்ளைநோயியலர்
29. Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
30. exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை)
31. exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
32. exponential curve > அடுக்குக்குறிக் கோடு
33. flatten the curve >வளைச்சமனாக்கல்
34. furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு)
35. herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
36. immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்)
37. incubation period > நுண்ணி அரும்பல் காலம்
38. incubation > நுண்ணியரும்பல்
39. Microorganism > நுண்ணி
40. isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
41. Self-isolation > தன் தனிமை
42. mitigation > தணிப்பு
43. Social distance > கூடல் இடைவெளி
44. antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
45. antimicrobial > நுண்ணியெதிரம்
46. case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பீடு
47. circulatory system > குருதிச்சுற்று முறைமை
48. clinical trial > பண்டுவ முயல்வு
49. community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் )
50. confirmed case > உறுதி நேர்வு
51. CT scan > கணினி மெய்யூடி
52. DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
53. encephalitis > மூளைக்காய்ச்சல்
54. enzyme > நொதியம்
55. epidemiology > கொள்ளை நோயியல்
56. GenBank > மரபியல் தரவகம்
57. immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
58. immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
59. Morbidity rate > நோயியல் அளவீடு
60. outbreak > வெளிப்பரவல்/ வெடிப்பரவல்/ கடும்பரவல்
61. pathogen > நோய்நுண்ணி
62. personal protective equipments  (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
63. pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
64. preexisting conditions > கட்டுமீறிய  உடல்நிலை
65. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
66. PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
67. pulmonary > நுரையீரல் சார்
68. physical distancing > தீண்டல் தவிர்ப்பு
69. respirator > மூச்சுக்கவரி             
70. screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
71. shelter in place > உள்ளிருப்பு
72. ventilator > மூச்சுப்பொறி
73. WHO > உலக நலவியல் நிறுவனம்
74. zoonotic > விலங்கத்தொற்றி
75. Close contact > நெருக்கத் தொடர்பு
76. cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்)
77. Communicable disease > தொற்று நோய்
78. Communicable > தொற்றக்கூடிய
79. Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
80. community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்)
81. mortality > இறப்புநிலை/ இறப்பியல்
82. upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று
83. Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
84. Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
85. Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு
86. Treatment > பண்டுவம்/ மருத்துவம்
87. Voluntary> தன்னார்வலர்
88. Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
89. Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
90. Index case > குறியீட்டு நேர்வு
91. Index patient > குறியீட்டு நோயர்
92. Patient zero > முதற்பிணியர்
93. Contact tracing > தொடர்பர்  துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
94. Super spereader > பாரிய பரப்பாளர்
95. Front line workers > முனைமுகப் பணியாளர்/ முன்னணிப் பணியாளர்கள்
96. Infection precautions > தொற்று தடுப்புப்பணி/ முன்நடவடிக்கைகள்
97. CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
98. Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
99. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
100. Red zone > சிவப்பு வளாகம்
101. Yellow zone > மஞ்சள் வளாகம்
102. Green zone > பச்சை வளாகம்
103. Critical > கடுமை/ கடுநிலை
104. High risk > உயரிடர் / கடும் இடர்
105. term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
106. Moratorium > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
107. Unsung heroes > மறை நாயகர் (பின்னணிச் செயல்வீரர் /  பின் களப்பணி நாயகர்கள் )
108. One off > ஓரோக்கால்
109. Agglutination  - ஒட்டுத்திரள்
110. Antibody - காப்பி / நோவெதிரி ( உடலில் தொற்றும் நச்சில்களையோ , குச்சியங்களையோ எதிர்த்து உடலைக் காக்கும் காப்பிகள் அல்லது காவலிகள்  / நோய் எதிர்ப்பாற்றல் )
111. Antigen - காப்பாக்கி ( உடலைக் காக்கும் காப்பிகளை உருவாக்குபவை, காப்பிகளை ஆக்குபவை)
112. Case fatality rate (CFR) > நோயர் இறப்பு மதிப்பீடு/ வீதம்
113. Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
114. Elective surgerie > பாணிப்பறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத்  தள்ளி வைத்தல்/ முறையான அணியத்திற்காக காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை )
115. Epidemic> குறுந்தொற்றி/ வட்டாரப்பிணி
116. Flattening the curve > வளைவைச் சமனாக்கல் ( நோயர் எண்ணிக்கை கூடும் வேளை குறிவில்     ஏறிக்கொண்டுச் செல்லும் வளைவை, நோயர் எண்ணிக்கையைக் குறைத்துச் சமனாக்குதல் )
117. Essential activities > இன்றியமையா நடவடிக்கைகள்
118. Essential government functions> இன்றியமையா அரசு நிகழ்ச்சிகள்
119. Fomite > தொற்றுவி ( தொற்றுக் கருவி / நச்சில்கள் தொற்றக் கூடிய ஏது பொருட்கள்)

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

வானியல் அடிப்படையில் வருடத் துவக்கம்


365 நாட்கள் கொண்டதே ஓர் ஆண்டு என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.  ஆனால் ஆண்டுத் துவக்கம் சித்திரை முதல்நாளா? அல்லது தை முதல் நாளா? என்பதில்தான் கருத்துவேறுபாடு.
ஆண்டு என்பது பூமியின் சுழற்சிக் காலமாகும்.  பூமியிலிருந்து பார்க்கும் போது, சித்திரை முதல்நாளோ அல்லது தைமுதல் நாளோ எதுவாகினம் சரி.  அன்று, வான்வெளியில் சூரியன் ஏதேனும் ஒரு நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து இருக்கும்.  தினமும் சிறிது சிறிதாகக் கிழக்குநோக்கி நகர்ந்து,365 நாட்களில் 360 பாகை பயணித்து, ஓராண்டு முடிவில் மீண்டும் முன்பிருந்த அதே நட்சத்திரக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்து விடும்.  இந்த வானியற்  கருத்திலும் யாருக்கும் மாற்றுக் கருத்து கியைடாது.

“விண்ஞான” அறிவியல் அடிப்படையில் -
பூமியில் இருந்து பார்க்கும் போது,
தை முதல் நாளில் சூரியன் மகரராசியில், உத்திராடம் நட்சத்திரத்தில் 2ஆம் பாகத்தில் காணப்படும்.
சித்திரை முதல் நாளில்  சூரியனானது,  ஆடு (மேஷம்) இராசியில், முதல் நட்சத்திரமான அசுபதி நட்சத்திரத்தில் 1ஆம் பாகத்தில் காணப்படும்.
மகரராசியை எந்தவொரு தமிழ் இலக்கியமும் தலைராசி எனக் குறிப்பிட வில்லை. ஆனால்,  முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரனின் நெடுநல்வாடையில் “ஆடு” தலையாக (முதன்மையாக)க் குறிப்பிடப் பெற்றுள்ளது.

நெடுநல்வாடை ...
.... நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக                             160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்            165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு ....

பண்டைத் தமிழ் இலக்கியமான நெடுநல்வாடையை அடிப்படையாகக் கொண்டால் ஆடு(மேஷ) இராசியை முதல் இராசியாகக் கொள்ள வேண்டியுள்ளது.  ஆட்டிற்குத் (மேஷத்திற்கத்) தமிழில் வருடை என்றொரு பெயரும் உண்டு.  வருடை என்ற பெயர் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ளது.   ஆடு அல்லது வருடை ( மேஷ ) இராசியில் முதல் நட்சத்திரம் அசுபதி நட்சத்திரமாகும்.  ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ஆம் நாள் இந்த நட்சத்திரத்தில் சூரியனான் காணப்படும்.  மேஷராசியில் அல்து ஆடுராசியில் அல்லது வருடை இராசியில் சூரியன் தோன்றத் துவங்கும் நாளே வருடத்தின் துவக்க நாளாகும்.  ஒவ்வொரு நாளும் ஒருபாகை என்ற அளவில் சிறிது சிறிதாக ஒவ்வொரு நட்சத்திரமாக நகர்ந்து சென்று, 365 நாட்கள் கழித்து மீண்டும் சூரியனானது மேஷஇராசியில் உள்ள அசுபதி நட்சத்திரத்திற்கே வந்து விடும்.
ஆடு (மேஷ) இராசியில் அசுபதியில் துவங்கும் நட்சத்திரக் கட்டத்தை ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகர் சந்நிதியின் நிலைக்கதவின் நெற்றியில் சிற்பமாகச் செதுக்கியும் வைத்துள்ளனர்.
மேற்கண்ட “வானியல் ” அடிப்படையிலும், தமிழரின் நெடுநல்வாடையின் அடிப்படையிலும் தமிழருடைய ஆண்டுப் பிறப்பு என்பது சித்திரை முதல் நாளே ஆகும்.

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இரண்டும் வேறுவேறானவை. இவற்றை ஒன்றாக்கினால் காலப்போக்கில் நாம் நமது இந்த இரு பண்பாடுகளில் ஏதேனும் ஒன்றை இழந்து விட நேரிடும்.
பொங்கலும் புத்தாண்டும் ஒன்றானால்,
(1) நாளடைவில் உழவர் திருநாள் என்பது மறைந்துவிடும்.
(2) பொங்கலிடுவது தமிழ்ப்புத்தாண்டிற்கானது என்றாகி விடும்.
(3) பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்கும் ஏறுதழுவுதலுக்கும் தொடர்பு இல்லை என்று வரும்.
(4) அதன் பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்குப் பொங்கல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகி விடும்.
எனவே அன்புத் தமிழர்களே நமது முன்னோர் ஆய்ந்தறிந்து கண்ட மரபுவிழா நாட்களை மாற்ற முயல்வதைத் தவிர்ப்போம்.

சித்திரை 1 அன்று வருடப்பிறப்பு என்பது இது வானியல் அடிப்படையில் ஆனது. முதல் இராசியான ஆடு (மேஷ)இராசியில் சூரியன் தோன்றும் நாளான சித்திரை 1 அன்று வருடப் பிறப்ப் கொண்டாடப் படுகிறது.
இது எந்தவொரு மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, புலமையின் அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ அமைந்தது அல்ல. வானியல் அடிப்படையில் அமைந்தது. எனவே இதுவே உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான வருடப்பிறப்பு ஆகும். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் இதுவே உலகில் உள்ள உயிர்களுக் கெல்லாம் பொதுவான வருடப் பிறப்பு ஆகும்.

வருடையில் (மேஷராசியில்) சூரியன் தோன்றும் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாடுவோம்.
https://letters-kalairajan.blogspot.com/2019/01/blog-post_15.html

அனைவருக்கும் சாரிவரி தமிழ்வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள்.
அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்...
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
சாரிவரி, சித்திரை 1, செவ்வாய்க் கிழமை.

வியாழன், 9 ஏப்ரல், 2020

ஒரே உச்சரிப்புள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள்


பறி                - pluck
பரி                 - horse

பணி             - job
பனி               - Ice, dew

பறந்த           - fly
பரந்த            - broad

பள்ளி           - school
பல்லி            - lizard

பழி                - revenge
பலி               – sacrifice

பாலம்           - bridge
பாளம்           - block

பால்              - milk
பாழ்               - ruin

புலி                - tiger
புளி                - tamarind

பினை           - mix
பிணை         - bail

பெரும்          - huge
பெறும்          - receive

போளி           - dessert
போலி           - duplicate

பொரி            - roast
பொறி           – engrave,
                           machine

பேண்             - sustain
பேன்              – head lice

மறி                 - block 
மரி                  - dead

மனை            - home
மணை           - seat

மலை              - hill
மழை               - rain

மாரி                 - rain
மாறி                – alternate,
                              change

மான்                - deer
மாண்              - pride

முன்னால்       - front 
முன்னாள்       - ex, ago

மூலை              - corner 
மூளை              - brain

வழி                   - path 
வலி                  - pain

வழு                   - defect
வலு                  - strenth

வலை               - net
வளை               - bend

வாழை             - banana 
வாளை            – fish, sword

வாள்                - sword
வால்                - tail
வாழ்                 - live

வாழி                - prosper
வாளி               - bucket

வானம்            - sky
வாணம்           - rocket

விளக்கு           - lamp,explain 
விலக்கு           – exempt,
                              avoid

விளக்கினார் - explain 
விலக்கினார் - disband,
                             exclude

விலா               - costa
விழா                - festival

விழை              - aspire
விளை             - cultivate

விளி                 - call
விழி                  - awake

விளங்கு          - shine 
விலங்கு          - animal

வெல்லம்         - jaggery 
வெள்ளம்         - flood

வேலை             - job
வேளை             - during, day

கள்              – toddy
                        (alcohol drink ) 
கல்              - stone

கறி             – curry, meat
கரி              - charcoal

கழகம்        - association
கலகம்       - riot

கனி           - fruit
கணி          - calculate

கன்னி       - virgo   
கண்ணி    - trap

கழி             - pole 
களி            - rejoice

கறுத்து      - black
கருத்து      – opinion, abstract

கணம்       - moment
கனம்         - weight

கறை         - stain
கரை          - bank

கணை      – cough /rickets
கனை        - roar

களை        - weed
கலை        - art

காலை      - morning 
காளை      - bull

கிளி           - parrot 
கிலி           - fear
கிழி            - tear

கிளவி       - word 
கிழவி        – old woman

கீரி              - mangoose
கீறி             - scratch

குளம்         - pond 
குலம்         - race

குரல்          - tone 
குறள்         - couplet

குளவி        - wasp
குழவி         - infant

குழம்பு        - curry
குளம்பு       - horse shoe

குழி             - ditch
குளி            - bathe

குழை          - mix 
குலை         – disband, bunch

குறை          - abate
குரை           - bark

கூரை          - ceiling
கூறை         - wedding saree

கூரிய          - sharp 
கூறிய         - told

கொல்லும்  - fatal 
கொள்ளும் - adapt

கொல்லை  - backyard 
கொள்ளை  - robbery

கோல்           – staff 
கோள்           – planet

கோலம்        - decoration 
கோளம்        - globe

கோலி          - marble
கோழி          - chicken

சளி               - cold 
சலி               - dejected

சிரை            - shave 
சிறை           - jail

சொறி         - scall
சொரி          - pour

சோளம்       - corrn
சோழம்       – ancient country

தண்மை     - kindness
 தன்மை       - quality

தலை           - head 
தழை            - sprout

தனி              - lonely
தணி            - extinguise

தரி               - wear 
தறி              – loom

தணி           - extinguish 
தனி             - alone

தாள்            - paper
தாழ்             - latch

தாலி           – mangal sutra 
தாழி           – pig pot

துறை         - department 
துரை          - name

தோல்         - skin 
தோள்         - shoulder

திறை         - tax 
திரை          - curtain

நீளம்           - length
நீலம்           - blue

களைத்தல் - tired
 கலைத்தல் - disband