சனி, 24 ஜூலை, 2021

சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கையின் வணிகம்

 செல்வமலி  தமிழ் நாடு -2 


உள்  நாட்டு வணிகம் ! 


ஒரு நாட்டின்‌ வரலாறு  அந்நாட்டை அரசாண்ட மன்னர்களுடைய 

 வரலாறு மட்டும்‌ அன்று, அந்நாட்டில்‌ வாழ்ந்த 

குடிமக்களின்‌ வாழ்க்கை சமூக  வரலாறும்‌ சேர்ந்ததே. உண்மையான வரலாறு ஆகும் . 


சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கை 

வரலாற்றில்‌ ஓரு பகுதி வாணிகத்தைச்‌ சார்ந்தது.நெய்தல் தினை வணிகம் பற்றியதே .அவர்களே நெடு நாட்கள் கடற்கரையில் ,கடலுக்கு அண்மையில் வாழ்ந்தார்கள் 


தென்னாடு அதிக பரப்பு மூன்று திக்கும் கடலால் சூழப்பட்டது அதில் நெய்தல் தினை என்னும் கடலின் அருகில் வாழ்ந்த மக்கள் .கடலின் தன்மையை அருகில் இருந்து நெடு நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர் .. கடலுடன் நெருங்கி இருந்ததால் கடலிடத்தில் இருந்த அச்சன் சிறுக சிறுக அவர்களிடம் இருந்து விலகியது .


கடலுடன் நட்பு  கொண்டார்கள் .அதை அன்பாக நோக்கினார்கள் .கடலும் அவர்களிடம் காதல் பூண்டது 


சிறுக சிறுக  தைரியம் கொண்டு முதலில் கரையோரம் சென்று பார்த்தனர் .பிறகு ஆழ்கடல்கடந்து  சென்று பல நாடுகளைக்கண்டு திரை மீளர்கள் ஆனார்கள் .


அவர்களே பெரு வணிகர்களாகவும் கடல் கடந்த தொடர்பால் ஆயினர் . இதுவே மிக சுருக்கமான நெய்தல் வரலாறு .


அந்தப்‌ பழங்கால வாணிகத்துக்கும்‌ இக்காலத்து 

விஞ்ஞான உலக வாணிகத்துக்கும்‌ பெருத்த வேறுபாடுகள்‌ 

உள்ளன. ஆனால்‌, அந்தப்‌ பழங்காலத்தவர்‌, அக்காலத்து 

 சூழ்நிலைகளுக்கும்‌ தக்கபடித்‌ 

கரை வாணிகத்தையும்‌ கடல்‌ வாணிகத்தையும்‌ நடத்தினார்‌கள்‌. 


அவர்கள்‌ கூட்டாகச்‌ சேர்ந்து “சாத்து அமைத்துப்‌ 

பெரிய வாணிகத்தை நடத்தினார்கள்‌.

 தரை வாணிகஞ்செய்த வாணிகத்‌ தலைவர்‌ மாசாத்துவர்‌ என்று பெயர்‌ பெற்‌ றனர்‌. கடல்‌ வாணிகத்‌ தலைவா்‌ மாதாய்கர்‌ (மாநாவிகர்‌) 

என்று பெயர்‌ கூறப்பட்டனர்‌. அக்காலத்‌ தமிழகத்திலே பல மாசாத்துவர்களும்‌ பல மாநாய்கார்களும்‌ இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள் .


சங்ககாலத்துத்‌ தமிழரசர்கள்‌ முதலாக அண்மைய மன்னர்கள் வரை  தங்களுடைய நாடுகளில்‌ 

வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள்‌; 

அவர்கள்‌ தங்களுடைய நாடுகளில்‌ வாணிகக்‌ கப்பல்கள்‌ 

வந்துபோகவும்‌ ஏற்றுமதி இறக்குமதி செய்யவும்‌ துறைமுகப்‌ பட்டினங்களை அமைத்தார்கள்‌.

 

இராக்காலத்தில்‌  இருளில் கடலில்‌ 

வருகிற கப்பல்கள்‌ திசை தப்பிப்‌ போகாமலும்‌, துறைமுகத்‌ தை அடையாளப்படுத்திக் காட்டவும்‌ கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள்‌. 


துறைமுகங்களில்‌ உள்ள வாணிகப்‌ பொருள்கள்‌ களவு 

போகாதபடி தாக்கல் காவல்‌ வைத்தனர்‌. வாணிகஞ்‌ செய்து பெரும்‌பொருள்‌ ஈட்டின வணிகப்‌ பெருமக்களுக்கு “எட்டி” என்னும்‌ 

சிறப்புப்‌ பெயரும்‌, “எட்டிப்பூ' என்னும்‌ பொற்‌ பதக்கத்‌தை யும்‌ அளித்துச்‌ சிறப்பினைச்‌ செய்தார்கள்‌


.அப்படி எட்டிப்பாட்டம் வாங்கியர்களே செட்டிகள் ஆனார்கள் .


 தரை வாணிகமும்‌ கடல்‌ வாணிகமும்‌ பெருகவே, அவற்றைச்‌ சார்ந்து 

பயிர்தொழில்‌ வளர்ச்சியும்‌ கைத்தொழில்‌ வளர்ச்சியும்‌ 

பெருகிப்‌ பொருள்‌ உற்பத்தி அதிகப்பட்டது. 

பொருள்‌களின்‌ உற்பத்தியினாலும்‌ வாணிகத்தினாலும்‌ பொருளா தாரம்‌ உயர்ந்து நாடு செழித்து மக்கள்‌ நல்வாழ்வு வாழ்ந்‌ தாரர்கள்‌. நாட்டு மக்களின்‌ நல்வாழ்வுக்கும்‌ நாகரிக வாழ்க்‌ கைக்கும்‌ கலைகள் வளர்ச்சிக்கும் ,கோயில்கள் பெருகவும் வாணிகம்‌ முக்கிய காரணமாக இருந்தது. 


 பண்டைய நாட்களில் கொற்கை, தொண்டி, பூம்புகார்‌, சோபட்டினம்‌ மாமல்ல புரம் அரிக்க  மேடு  முதலான தமிழ்‌ நாட்டுத்‌ துறைமுகப்‌ பட்டினங்களிலிருந்து 

நாவாய்களில்‌ புறப்பட்டுச்‌ சென்ற தமிழ வாணிகர்‌ கிழக்குக்‌ கடல்‌ ஓரமாகவே நாவாய்களைச்‌ செலுத்தி 


நெல்லூர்‌, கலிங்கப்‌ பட்டினம்‌, தம்ரலிப்தி (வங்காள தேசத்‌ துறைமுகப்‌ பட்டினம்‌) முதலான பட்டினங்களுக்குச்‌ சென்றனர்‌. .

பிறகு கங்கையாறு கடலில்‌ .கலக்கிற வாங்க புகர்‌ முகத்தின்‌ ஊடே கங்கையாற்றில்‌ நுழைந்து கங்கைக்‌ கரையில்‌ இருந்த பாடலிபுரம்‌ , 

காசி (வாரணாசி) முதலான அவர்களில்‌ வாணிகஞ்‌ செய்து பெரும் பொருள் ஈட்டினார்கள் .

 

“கங்கை வங்கம்‌ போகுவர்‌ கொல்லோ, 

என்று நற்றிணை (/89:5) கூறுகிறது. 


கங்கைக்‌ கரையில்‌ 

பாடலிபுரத்தில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த போது, கி மு . 

4 ஆம்‌ நூற்றாண்டில்‌ மகத நாட்டையரசாண்ட நந்த 

அரசர்‌, தங்கஞ்டைய தலைநகரமான பாடலிபுரத்தில்‌ கங்கை யாற்றின்‌ கீழே பெருஞ்‌ செல்வத்தைப்‌ புகைத்து வைத்திருந்‌ குதைப்‌ பற்றி  அவர்கள் அறிந்தனர்‌. 


அப்போதைய தமிழ் வணிகர்கள் இந்த நாட்டின் பரந்த பரப்பில் எங்கும் பரவி வணிகம் செய்தனர் .அங்கு நிலவும் செய்திகள் அனைத்தையும் அறிந்திருந்தனர் 

 தமிழக வாணிகரின்‌ மூலமாக நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைத்‌. தமிழ்‌ நாட்டவர்‌ ௮க்‌ காலத்தில்‌ அறிந்திருந்தார்கள்‌. 

மாமூலனார்‌ என்னும்‌ சங்கப்‌ புலவர்‌ தம்முடைய செய்யுளில்‌. நந்தருடைய நிதியைக்‌ கூறுகிறார் 


“பல்புகம்‌ நிறைந்த வெல்போர்‌ நந்தர்‌ 


சீர்மிகு பாடலிக்‌ குழீஇக்‌ கங்கை 


நீர்முகற்‌ கரந்த நிதியங்‌ கொல்லோ ” 


(அகம்‌, 265: 4-6) 


நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைப்‌ பற்றிய இந்தச்‌ செய்‌தியை இந்தச்‌ செய்யுளில்‌ இருந்து அறிகிறோம்‌, வடநாட்டுப்‌பழைய நூல்களில்‌ இந்தச்‌ செய்தி கூறப்படவில்லை,கங்கைக்கரை புதையலைப்பற்றி தமிழ் இலக்கியம் மட்டுமே பேசுகிறது .  


தமிழ வாணிகர்‌ கலிங்க நாட்டிலே போய்‌ வாணிகஞ்‌ 

செய்தார்கள்‌. அந்த வாணிகச்‌ சாத்து கி மு .மூன்று 

நூற்றாண்டிலிருந்து கி .மு., 750 வரையில்‌ நூற்றைம்பது 

ஆண்டுகள்‌ அங்குக்‌ தங்கி வாணிகம்‌ செய்தது. அவர்களு 

டைய வாணிகம்‌ நாளுக்கு நாள்‌ பெருகிச்‌ செல்வாக்கும்‌ 

பலமும்‌ அடைந்தது. 

அக்காலத்தில்‌ கலிங்க தேசத்தை 

யரசாண்ட காரவேலன்‌ என்னும்‌ அரசன்‌ குமிழ வாணிகரால்‌ 

தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும்‌ என்று அஞ்சி 

அந்த வாணிகச்‌ சாத்து அழித்து விட்டான்‌. 


அந்தச்‌ செய்தியை அவ்வர௪ன்‌ எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக்‌ 

கல்வெட்டெழுத்துச்‌ சாசனத்திலிருந்து அறிகிறோம்‌. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டமுக்கிய  கல்வெட்டு இது  ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது.


 பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது


அதில் உள்ள மிக முக்கிய செய்தி இது ஆகும் 


 எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். 


யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார் இதில் ஆவா அரசர்கள் யார் என்று தெரியவில்லை 


பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் அல்லது 130 ஆண்டுகளாக  தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.என்று பெருமை  கொள்கிறது .


அத்தைய தமிர  சங்காத்தம் எனும் கூட்டணி தமிழ் வணிகர்களின் கூட்டணியாக இருக்கவே சாத்தியம்  உண்டு .


கலிங்கதேசத்தில்‌ வாணிகஞ்‌ செய்த தமிழர்‌ கலிங்க நாட்டுப்‌ பொருள்களைத்‌ தமிழகத்துக்கும்‌ தமிழகத்துப்‌ சாத்துகளைக் 

கலிங்க .நாட்டுக்கும்‌ கொண்டு போய்‌ விற்றார்கள்‌. 

கலிங்கநாட்டிலிருந்து தமிழ்‌ நாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்ட முக்‌ யமான பொருள்‌ பருத்தித்‌ துணி. பெருவாரியாகக்‌ . சுலிங்கத்‌ துணி தமிழ்‌ நாட்டில்‌ இறக்குமதியாயிற்று. 


கலிங்‌கத்திலிருந்து வந்தபடியால்‌ அத்துணி கலிங்கத்‌ துணி என்‌.று சிறப்பாகப்‌ பெயர்‌ பெற்றது.

 

பிறகு காலப்போக்கில்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ பெயர்‌ துணிகளுக்குப்‌ பொதுப்‌ பெயராக வழங்கப்‌ பட்டது. 


சங்க நூல்களில்‌ துணிக்குப்‌ பெயராகக்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ சொல்‌ வழங்கப்பட்டிருக்கிறது. 


கலிங்க நாட்டு.லிருந்து அக்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள்‌ சந்தனக்‌ கல்‌. “


வடவர்‌ தந்த வான்‌ கேழ்‌ வட்டம்‌.' என்று கொண்டாடப்பட்டிருக்கிறது .


இப்போதைய ஆந்திர நாட்டிலே பேர்‌ போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்‌) சங்க காலத்திலே தமிழ்‌ வாணிகர்‌ சென்று வாணிகஞ்‌ செய்தனர்‌. 


அங்கிருந்த அமராவதி பெளத்தக்‌ 

தூபி இ.மு. 200 இல்‌ தொடங்கி கி.பி. 200 வரையில்‌ 

கட்டப்பட்டது. 


அந்தக்‌ கட்டிடத்தைக்‌ கட்டுவதற்குப்‌ பலர்‌ 

பல வகையில்‌ உதவி செய்தார்கள்‌. 

அப்போது அங்குவாணிகஞ்‌ செய்து கொண்டிருந்த தமிழ்‌ வாணிகரும்‌ அக்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கு உதவி செய்தனர்‌. 

தமிள (தமிழ)கண்ணன்‌ என்னும்‌ வாணிகனும்‌ அவனுடைய தம்பியாகிய 

இளங்கண்ணனும்‌ அவர்களுடைய தங்கையாகிய நாகையும்‌ 

அமராவதி தூபி கட்டுவதற்கருக்‌ கைங்கரியம்‌ செய்துள்ளனர்‌ . 


கண்ணன் என்ற பெயர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்து இப்போது வரை தொடர்ந்து தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது . இதுவே தமிழின் சீரிளமைக்கு ஒரு சான்றாகும் .


இந்தச்‌ செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல்‌ சாசனத்தினால்‌ 

தெரிகிறது. 8$ அடி உயரமும்‌ 8 அடி. 8 அங்குல அகலமும்‌ 

உள்ள ஒரு கல்லில்‌ பிரஈமி எழுத்தினால்‌ எழுதப்பட்ட ஒரு சாசனம்‌ இதைக்‌ கூறுகிறது. 


இப்போது இந்தக்‌ கல்வெட்டு  இங்கிலாந்து நாட்டிற்குக்  கொண்டு போகப்பட்டு அங்கு இலண்‌டன்‌ மாநகரத்துக்‌ காட்சி சாலையில்‌ வைக்கப்பட்டிருக்கிறது. 


இதனாலும்‌ கலிங்க நாட்டில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த செய்தி அறியப்படுகிறது.” 


 இவாறெல்லாம் பரந்த பாரதமெங்கும் பரவி  உள்  நாட்டு வணிகம் செய்த  அந்த இனம் எங்கே போனது  ? என்றால் அதுவே இப்போது உள்நாட்டு மீனவர் அல்லது செம்படவர் எனும் சிவன் படையினராக மிஞ்சி இருக்கிறார்கள் .


நெடுங்கடல் தாண்டி இங்குவணிகம் செய்யவந்த பிறகு நம்மை ஆண்டவர்கள்  ஆன  அயல் நாட்டவர் அனைவரும் தங்களின் முக்கிய எதிரியாக இங்கு நினைத்தது இங்கு வாழ்ந்த சிறந்த மாலுமிகளான தொல் தமிழ் நெய்தல் நிலத்தவரை  மட்டுமே அவர்களின் திறமை க்குறித்து அஞ்சினர் .அவர்களை அழித்தால் இன்றி தங்கள் வணிகம் வளராது என்று புரிந்திருந்தனர் .

.அது மூர்கள் எனும் முகமதியர் முதல் அத்தனை ஐரோப்பியர்களுக்கு பொருந்தும் 


.அவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு நசுக்கப்பட்ட அவர்கள் பலவாறு  சிதறினர் பல்வேறு வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டனர் 


.அப்படியும் தைரியமாக தங்களை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்கள் இப்போதைய உள் நா ட்டு மீனவர்கள்  இதுவே கடற்கரை ஓரம் வாழும் மீனவர்களுக்கும் பொருந்தும் .இப்போது உள்நாட்டு வணிகத்தைப்பற்றிக்கூறுவதால் உள்நாட்டு பரதவரைக் க்குறிப்பிடுகிறேன்  கடல்பரதவரை ப்பற்றி முழுக்க முழுக்க பின்னல் வருகிறது .


உள்நாட்டு பரதவரில்  செட்டிகள் உண்டு மணியக்காரர் உண்டு ,நா ட்டார்கள் உண்டு நாயக்கர்கள் உண்டு .

அவர்கள் பொதுவாக இப்போது சிவன்படையினர்  என்றும் பர்வத ராஜகுலம் என்றும் இப்போது அ டையாளப்படுத்தப்படுகிறார்கள் .


இதைபற்றி  சொன்னால் பெரிய கதை நீளும் இப்போதைக்கு இதை மட்டும்  இப்போது குறிப்பிட்டு தமிழ் நட்டு வணிக வரலாற்றிற்கு திரும்புவோம் .அடுத்து தொல்  தமிழ் நாட்டின் துறைமுகங்கள் பற்றி காண்போம் .


அண்ணாமலை சுகுமாரன் 23/7/2021

சனி, 10 ஜூலை, 2021

துபாய்கு ஏற்றுமதி

 50 வகையாக   சர்வதேச  இயற்கை வேளாண்மை  சான்றிதழ் பெற்ற பொருட்கள்   துபாய்க்கு தொடர்ந்து  ஏற்றுமதி செய்து வருகிறோம்..


இயற்கை வேளாண்மை செய்யும் உழவர் கள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு தெரிய படுத்தவும். அவர் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்.


 நன்றி  நம்மண் 


தொடர்புக்கு : 

 

info@nammann.com,

nammannorganic@gmail.com,

www.nammann.com

Whatsapp : +919092098811,  9787305169


நன்றி.

புதன், 16 ஜூன், 2021

சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:


 நவக்கிரக தர்க்க சோதிடம்.

சோதிட ரத்தினக் களஞ்சியமாலை .

சங்கராசாரியர் சோதிடம்.

இரேகை சாத்திரம்.

நவக்கிரக சிந்தாமணி.

தொடு குறி சாத்திரம்.

சகாதேவர் தொடு குறி சாத்திரம்.

ஆருட நூல்.

ஆஸ்தான கோலாகலம்.

சாதக பாரி சாதம்.

சீதா சக்கரம்.

மரண கண்டிகை.

அலகு நூல்.

சூடாமணி உள்ளமுடையான்.

வானியல் (அண்டத்தியற்கை யோசனை)

கிரகண கணிதம்.

பஞ்சாங்கம்.

சர நூல்.

சோதிடம் கணிப்பு.

சோதிடம் பலன் கூறுதல்.

சோதிடம் – நாடி.

சோதிடம் – முகூர்த்தம்.

கனவு – நிமித்தமும்.

வால்மீகர் தீப சூத்திரம்.

சந்தனக் கயறு .

பஞ்சபட்சி சாத்திரம்.

கவுளி காதல் சாத்திரம்.

சகாதேவர் நூல்.

நட்சத்திர ஆருடம்.

பல்லி சாத்திரம்.

சாக சந்திரிகை .

அட்டவர்க்கப் பலன் –

கனவுகளின் பயன் .

மரணக் குறிப்பு.

ஒட்டியம்.

சத்தியாரூடம்.

சோதிட அரிச்சுவடி .

சோதிடக் களஞ்சியம்.

சோதிட க்ரக சிந்தாமணி.

சோதிடச் சுருக்கம்.

சோதிடச் செய்திகள்.

சோதிட சங்கிரக சாராவலி.

சோதிட சங்கிரகம்.

சோதிட சந்திரகாவியம்.

சோதிட சாஸ்திரம்.

சோதிட சிகாமணி.

சோதிட சிந்தாமணி.

சோதிடத் திரட்டு .

சோதிட தசப் பொருத்தம்.

சோதிட நூல்.

சோதிட நூற்குறிப்பு.

சோதிட நூற் றிரட்டு.

சோதிட பாவங்கள்.

சோதிட பிந்து .

சோதிடம் பல சாத்திரம்.

சோதிடம் பல திரட்டு.

சேரிடம் பல மாலை .

சோதிடம் யோக பலன்.

சோதிட மஞ்சரி .

சோதிடரத்தினம் .

சோதிட ரத்தினமாலை .

சோதிட லட்சணம்.

சோதிப்பத்து.

அங்கத்துடிப்புகளும் பலன்களும்

அதிர்ஷ்ட நியுமரலாஜீ ஜோதிடம்

அனுபோக ஜாதக ரகசியம்

ஆயுள் பாவங்கள்

எண்கணித சோதிடத்தில் கர்ம எண்

எளிய ஸ்ரீஜோதி முழுமையான நூல்

க்ரந்தாகூர சமஸ்க்ருத பாலபாடம்

கர்ம எண்

காலக்கண்ணாடி

கிரக அவஸ்தைகள்

குதிரை பந்தய லாவணி

கெளசிக சிந்தாமணி

கேரளா சோதிடம்

கைரேகை ஜோதிட ஞானம்

சந்தான தீபிகை

சந்திரகாவியம்

சாதக கணிதாமிர்தம்

சிற்ப சாத்திர செய்தி அடைவு

சுந்தரசேகரம்

சூடாமணி உள்ள முடையான்

சோதிட அகராதி

சோதிட ஆனந்த களிப்பு

சோதிட கோட்சார சிந்தாமணி

சோதிட வாசகம் 2

தமிழ் மாத பிறந்தவர்களின் பலன்கள்

தஜ க நீலகண்டேயம்

நியூமரலாஜீ

நீயூமரலாஜீ 1

பஞ்சாங்க கணனம் – 1

பஞ்சாங்க கணனம் – 2

பஞ்சாங்க கணனம்

பீரங்கி முனிவர் ஜோதிடம் 300

பிரஞ் ஞான தீபிகை

புத்ரபாவம்

புலிப்பாணி சோதிடம் -300

பெண்கள் ஜாதகமும் பலனும்

பெரிய சோதிட சாதக கணித பாலசிட்சை

பெரிய ஜோதிட சில்லறைக்கோர்வை

மச்சமுனி ஜோதிடம்

மனையடி சிற்ப சிந்தாமணி

ஜாதக பாஸ்கரன்

யோகப் பொருளகராதி

ராசி நட்சத்திரங்கள்

ராமசேகரம்

வானவியல் மூலமும் வரலாறும்

விதி விளக்கம்

விவாக வியாக்கினம்

வீமகவி

ஜாதக உண்மை திறவுகோல் – 2 ம் பாகம்

ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி

ஜெயமுனி

ஜோதிட திறவுகோல்

ஜோதிட பால போதினி

ஜோதிட வாசகம்

ஜோதிட பேரகராதி

ஜோதிடராகலாம்

ஜாதக கணித சாகரம்

தொகுதி 1 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 3 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 5 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 6 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

நவரச சுருதிகள்

பாராசரியம் திசா புக்தி பாடல்கள் மட்டும்

கௌசிக சிந்தாமணி

ஜோதிட ரத்னா திரட்டு

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு

வர்க்க பலன் தரும் யோகங்கள்

பணமழை

பிரம்மரிஷி வாக்கியம்

பஞ்சாங்க ரகசியம்

ஜாதக சாகரம் தொகுதி - 1

ஜாதக சாகரம் தொகுதி - 2

பராசரர் ஹோரை பாவகபலன்

விவாக விஞ்ஞானம்

களத்திர பாவம்

ஜோதிடமும் மருத்துவமும்

வழிபாடும் பரிகாரமும் ,

இறையாற்றல் யந்திரங்கள் ,

ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை ,

தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை

திருமணப்பொருத்தம் ,

செவ்வாய் தோஷமும்,பொருத்தமும்

புத்திர பாவம்

ஜோதிட விதி விளக்கம்

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 1

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 2

ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி

நல்ல நாள் பார்ப்பது எப்படி

அனுபோக ஜாதக ரகசியம்

30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி

ஜோதிஷமும் சங்கீதமும்

கணித முருக சேகரம்

தொழில் மலர் 1௦ ஆம் பாவம்

ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்

அனுபோக ஜாதக ரகசியம்

பராசரர் ஹோரை பாவக பலன்கள்

களத்ர பாவம்

ஜோதிடத்தில் யோகாத யோகங்கள் தொகுதி RS

ஜோதிடத்தில் யோகாதியோகங்கள் தொகுதி

ஜோதிட விதி விளக்கம்

புத்திர பாவம்

ஜோதிட ரத்தினா திரட்டு

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

திருமண யோகம்

ஜாதக தேஷ் மார்க்கா

ஜோதிடம் என்றால்

மணிகண்ட கேரளம்

இனிய நல்வாழ்க்கை வழி காட்டி

கிரகங்களும் உணவு வகைகளும்

சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் RS

நவ கிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள்

ஜாதகமும் ஜோதிடமும்

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும்

உங்கள் வருவாய் யோகம் எப்படி

உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80

12 ராசிக்காரர்களின் காமம் காதல் வாழ்க்கை –

மச்சங்களின் அதிர்ஷ்ட பலன்கள்

ஜோதிடத்தில் மங்கையர் ஜாதக மகிமை

உங்கள் ஜாதகம் பேசுகிறது


பஞ்சாங்கம்


துன்மதி வருட சபரி பஞ்சாங்கம்

துன்மதி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்


எண் கணிதம்


வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்

அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள்


துருவ கணிதம்


சகோதர தத்துவநாடிதுருவகணிதம

ஜோதிட பலன் தரும் துருவ கணிதம்

ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்

தெயவங்களின் ஜாதகமும்

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு


நாடி :


கார்க்கேயர் நாடி

சகாதேவநாடி

சகாதேவர் சோதிட நாடி

பதிணென் சித்தர்களின் நாடி சாஸ்திரம்

சப்த ரிஷி நாடி கன்யா லக்னம்

சப்த ரிஷி நாடிமேஷ லக்னம்

சுகர் நாடி

நாடி ஜோதிடம்

நாடிச் சக்கரம்

புஜண்டர் நாடி முதற் பாகம்

கந்தர்நாடி

பிறவியை அறியும் பிருகு நாடி பலன்

பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்

சூரியசந்திர நாடிமுறையில் தொழில் நிர்ணயம்

ஜீவன காரகன் சனி

நாடி ஜோதிட விதிகள்

நாடியில் பிரசன்னம்


வாஸ்து :


வாஸ்து ஐஸ்வர்யங்கள்

வர்த்தக வாஸ்து

வரைபடமும் வாஸ்தும்

வாஸ்து களஞ்சியம்

சிற்ப சாஸ்திர மெனும் மனையடி

வாஸ்து டிப்ஸ்

இனியவை இருபது வாஸ்து

மனையியல் வாஸ்து


பிரசன்னம் & ஆரூடம் :


அகத்தியர் ஆரூடம்

அகத்தியர் பஞ்சபட்சி ஆரூடம்

அனுபோக ஆரூட சிந்தாமணி

அஷ்டதிக் ஆருடம்

ஆஞ்சநேயர் ஆரூடசாஸ்திரம்

ஆரூட அலங்காரம்

கந்தராரூடம்

சாமக்கோள் ஆரூடம்

நட்சத்திர ஆரூட சிந்தாமணி

பட்சி ஆரூடம்

பாய்ச்சிகை ஆருடம்

வராகி ஆருடம்

வால்மீகர் ஆரூடசாஸ்திரம்

வான்மீகர் ஆரூடம் – 40

ஜெயமுனிவர் ஆரூட சாஸ்திரம்

ஸ்ரீ கணேச ஆரூட தீபிகை

ப்ரசன்ன ஆரூடம்

ஹோரா பிரசன்ன ஜோதிடம்

மச்ச முனி ஆருடம்

புலிப்பாணி கஸ்ட நாஸ்ட ஜாதக கணிதம்

அனுபவ ஆருடம்

ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி


சாஸ்திரங்கள் :


கூப சாஸ்திரம்

வராகர் ஒரா சாத்திரம்

அகத்தியர் தற்க சாத்திரம்

கப்பல் சாத்திரம்

களவு காணும் சாஸ்திரம்

குருநாடி சாஸ்திரம்

கெ வுளி சாஸ்திரம்

சர்வ பிராயண சாஸ்திரம்

சாமுத்ரிகா லட்சணம்

சாஸ்திரமும் மழையும்

அகத்தியர் சாமுத்ரீகா லட்சணம்

தும்ம நூல் சாஸ்திரம்

நந்தி நூல் ரேகை சாஸ்திரம் – 110

பாச்சிகை சாஸ்திரம்

பூமிசாஸ்திரம்

மச்ச சாஸ்திரம்

மனைக் குறி சாஸ்திரம்

முக்கால ரேகை சாஸ்திரம்

ருது நூல் சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

விவாக சாஸ்திரம்


பஞ்ச பட்சி:


சுக்கும பஞ்ச பட்சி

நிமிஷப் பஞ்சபட்சி

பஞ்ச பட்சி

சுருக்கு பஞ்சபட்சி


ஆன்மிகம் மற்றும் சாஸ்த்திரம்


ஆகாமிய கர்மா

திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங்கள்

சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்—RS

நவதிருப்பதி வழிகாட்டி

அறியாதவை ஆனால் அறியக் கூடியவ

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்யக்

கூடாததும் பழக்க வழக்கங்கள்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்

விதுர நீதி

108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி

சனி பகவானும் பரிகாரமும்

சர்வ தேவதா வசியம்

ஸ்ரீ விநாயகர் கவசம்

அனுமன் சாலிசா

கனக தாரா ஸ்தோதறம்

குபேர லக்ஷ்மி

பைரவர் வழிபாடு

அம்மன் டிக்ஷன்ரி

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

நவ திருப்பதி


பரிகாரகம்


பதினெண் சித்தர்களின் பரிகார தொகுப்புகள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3

சிவா மஹா மந்திரம்

நவக்கிரக மஹா மந்திரம்

27 நட்சத்ர காயத்ரி மந்திரங்கள்

செவ்வாய் தோஷம்

ஸ்ரீ குரு பகவான் வழிபாடு சுலோகம்

சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

தினசரி வழிபாட்டு துதிகள்

மகத்தான எளிய தமிழ் மந்திரங்கள்

எளிய தெய்வப் பரிகாரங்கள்


விடுபட்ட நூல்கள் :


ஜ்யோதிஷ ஞான போதினி

சிற்றம்பலசேகரம்

சோதிடகளஞ்சியம்

ஸ்ரீபதி ஜாதக சந்திரிகை விளக்கம்

அருட் கொடி சிற்ப சாஸ்திரக் கண்ணாடி

காக்கையர் சிற்பம்

சாத காலங்காரம்

குரு – சிஷ்ய சம்வாத ஹஸ்த இரேகை

அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்

சினேந்திர மாலை

அநு பவ ஹஸ்த ரேகை சாஸ்திரம்

பெரிய வருஷாதி நூல்

சோதிட அரிச்சுவடி முதல் பாகம்

நந்தி தேவர் சோதிடமர்மம்

ஜாதக கணிதம் முதல் பாகம்

அனுபவ கை ரேகை விஞ்ஞானம்

கைரேகை விளக்கம்

சோதிட பிரச்சாரம்

சோதிட பராக்கிரமம்

கைறேகைக் களஞ்சியம்

ஜாதக ராஜ மனோரஞ்சிதம்

ஜோதிட ஆராய்சி திரட்டு

கைரேகைக் கலை

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி

செவ்வாய், 15 ஜூன், 2021

மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக் குறிப்பு

 இச்செய்தி  திரு செந்தில் வேல் அவர்கள் இட்ட பதிவு  மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக்  குறிப்பே . 









பண்டேயா - பாண்டிமா தேவி 

தடாதகைப் பிராட்டி. 


        இச்செய்தி இன்டிகா என்ற நூலில்  கிமு 320 அளவில் எழுதப்பட்டுள்ளது .  சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் எழுதிய நூல் அது . இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் அவர் பாண்டிய நாட்டைப்பற்றிய பல செய்திகளைச் சொல்கிறார் . பெண்ணால் ஆளப்பட்டது என்பது அவற்றுள் ஒன்று . இதே காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம் தமிழகத்தின் வணிக மதிப்பை மட்டுமே சொல்கிறது . ஆனால் இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றே ஆய்வாளர் மதிப்பிடுகின்றனர் . ஆனால் , மெகஸ்தெனிஸ்  இந்தியா வருவதற்கு முன்பே தமிழகத்தைப்பற்றி மிகுதியாகக் தெரிந்து வைத்துள்ளார் என்று புரிகிறது . ஏனெனில் மகதத்தை கிரேக்கர் அறிவதற்கு முன்பே அவர்கள் தமிழகத்தை அறிவார்கள் .


      கிமு 1000 அளவிலேயே சாலமன் அரசர் காலத்திலிருந்தே கிரேக்கர் பொனீசியர் வழியே தமிழகத்துடன் வணிகம் செய்து வந்தனர் . கிமு 500 அளவிற்குப் பிறகு கிரேக்கர் நேரடி வணிகம் செய்தனர் . மிளகு  ,  முத்து  ,  சந்தனம்  , ஏலம் வணிகத்தில் கடல் கொள்ளாத பாண்டிய நாட்டுத் துறைமுகங்களே பெரும் பங்காற்றின  .  கொற்கை அப்போது பெரு நகரமாக  --  துறைமுகமாக இன்னும் மேற்கே பலகாத தொலைவு பரந்திருந்தது  .   பெருநகர் புகார்  -- காவிரிப்பூம்பட்டினம் போல   பரந்து விரிந்த நகரம் .  ஆதிச்சநல்லூர் பல நூறு ஆண்டுகள் கொற்கையின  இடுகாடாக இருந்த இடமே . அத்தகைய  பெருநகரம் இல்லாமல் ஆதிச்சநல்லூர் போன்ற 113 ஏக்கர் விரிந்த இடுகாடு இருக்க முடியாது  . மேலும் பல்வேறு  உலக இனமக்கள் அங்கு தாழிகளில் புதைக்கப்பட்டிருந்த கரணம் அதுவே . 


        எனவே ,  பாண்டிய நாடு கடல் வணிகத்தால் மேலைநாடுகளில் புகழ் பெற்றிருந்தது . கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சுமேரிய  அசூர் பணிபால் என்ற மன்னன் ஏடுகளில் பாண்டியநாடு பாடே என்றும் , தலைநகர் கூடல் கூடே என்றும் குறிக்கப்படுவதாக ரொமிலா தாபர் குறிப்பிட்டு பாண்டியரின் பெருமைக்கு அவர்கள் நாகரிகப் பாங்கே காரணம் என்கிறார் .  பாண்டிய நாட்டுடன் தங்களுக்குரிய நட்புறவால் தோன்றிய மரபுச் செய்திதான் கிரேக்கர் அறிந்திருந்த பாண்டேயா கதை .  கிரேக்கர் தங்களுக்குள் இத்தகைய தொன்மத்தைப் பெற்றிருந்தும் தெளிவாகிறது . இதில் வரும் கிராகிளிஸ் கிரேக்க நாட்டு வீரர் அல்ல . கிரேக்கர் தாங்களறிந்த எல்லா வீரர்களையும்  ஹர்குலிஸ்  ,  ஹிராகிளிஸ் என்று ஒப்பீட்டுப் பெயர் கொடுத்து அழைப்பர் . அத்துடன் அல்லி அரசாணி நாடோடிப்  பாடல்  கதை  ,  அர்ஜூனன் பிற்காலக் கதை  ,  பாண்டிய நாட்டின் நமக்குத் தெரியாத மறந்துபோன பெரு வீரரான மன்னன் வரலாறு  ,  பேரரசி தடாதகைப் பிராட்டி வரலாறு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை . தடாதகை வரலாற்றைத் தமிழர் தொன்மமாகத் தொடரவிட்டிருந்தால் தமிழர் வரலாற்றுத் தொன்மம் ஆகி இருக்கும் .


       மதுரை மீனாட்சியை பிராமணியப்படுத்த தடாதகையார் வரலாற்றை அவருக்கு மூன்று  மார்பகங்கள் இருந்தன என்ற அபத்தப்  புராணக்  கதையாக மாற்றி பிராமணீயப் புராணிகர்கள் வரலாற்றை அழித்துவிட்டனர் . தடாதகை ஆணுக்குச் சமமான மறக்குலப்பெண் ஆகவே நாணம் அறியாதவர் அவர் எந்த ஆண்டவனைக் கண்டு நாணம் அடைகிறாரோ அப்போது பெண்மை பெறுவார் என்பதே உண்மைத் தமிழரது  தொன்மமாக இருக்க முடியும் . தடாதகை படைநடத்திச் சென்ற இடங்கள் அவரது தொன்மக் கதையில் உள்ளன . அதன் வருணனை கடல் கொண்ட பாண்டிநாட்டின் இலங்கை உட்பட கிழக்கு நிலப்பகுதியே என்பதில் ஐயமில்லை . அப்போது இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே சதுப்பு நிலங்களும் , காடுகளும் , மணற்பாங்கான பாலைகளும் இருந்தன என்று தெரிகிறது  .  பாண்டிச்சேரிக்குக் கிழக்கில் கடலில்  அணந்துபோன எரிமலை வாய்கள் இருப்பதாக கடற்தரை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர் . அத்தகைய பெருவீரப் பெண்மணியான தடாதகைப் பிராட்டியையே பாண்டேயா என்று மெகஸ்தெனிஸ் குறிப்பது  என்பது என் கருத்து  . அவரது தந்தை புகழ் பெற்றதொரு மாமன்னர் ஆக இருக்க  வேண்டும் . மெகஸ்தனிஸ் இன்டிகா  குறிப்பின் அடிப்படை இதுதான் . தடாதகைப் பிராட்டியே பண்டேயா என்ற பெயரில் மெகஸ்தெனிஸ் குறிக்கிறார் . 


     இன்னொரு செய்தி :  சங்க காலப் பாடல்களைத்  தங்கள் அரசர்கள் , தங்கள் நாட்டு நலம் , தமக்குப் பிடித்த  பாடல்  , தமக்குப் பெரும்புலவர் என்று தோன்றிய சிலர் என்றில்லாமல் ,  தொன்மையான படல்களையும் ,  திணை துறை என்ற வேறுபாடு இன்றி எண்ணிக்கை  பார்க்காமல் அப்போது கிடைத்த அனைத்துப் பாடல்களையும் பல தொகுதிகளாகத் தொகுத்து வைத்திருந்தால் பழம்பாடல்கள் அழியாது காப்பாற்றப் பட்டிருக்கும் . தமிழக வரலாறு விளக்கம் பெற்றிருக்கும்  . 

பூர்ண சந்திர ஜீவா முக நூலில்

சூன் -16, சின்ன மருதுவின் "ஜம்புத்தீவு பிரகடனம்"

ஜே.கோர்லே என்னும் ஸ்காட்லாந்தியர் 1813 ஆம் ஆண்டு எழுதிய "MAHRADU" என்ற இந்நூல், இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கில நூலாகும். மருதரசர்கள் 1801 யில் மறைந்த பின்பு 

12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த நூலாகும். மருதரசர்களின் வரலாற்றை பதிவு செய்த நூல்களில் மிக பழமையான நூல். 


சின்ன மருதுவின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அறிக்கையை முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக் கிறது. இந்த அறிக்கையைக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலா வின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்காகஸ் என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் ஒப்பாக சின்ன மருதுவின் சுதந்திரப் பிரகடனத்தை ஒப்பிடுகிறார்.


அந்த ஆங்கில நூலில்  14 முதல் 26 வரை உள்ள பக்கங்களில் பதிவிடப்பட்ட சின்ன மருதுவின் ஜம்புத்தீவு பிரகடனத்தின் தமிழாக்கத்தின் பகுதியை தமிழ்க் கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த ஆங்கில நூலை தமிழில் தந்தவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், 

பேரா நா.தர்மராசன் அவர்கள் ஆவார். 


ஜே.கோர்லேவின் "MAHRADU"  

நூலில் இருந்து.....

--------------------------------------------------------

1800 ஆம் ஆண்டில் திப்பு மரணமடைந்து மைசூரைக் கைப்பற்றிய பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு எல்லா திசைகளிலும் மனித நேயத்துக்கு எதிரான முறையில் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தபொழுது, சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்த பிறகு, அவர்களுடைய உடைமைகளை தான் கைப்பற்றியதோடு, வீரர்களை கொள்ளையடிக்க அனுமதித்த காலத்தில் மருது என்ற பாளையக்காரர் வாழ்ந்தார். அவர் பழமையான கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மதுரைப் பிராந்தியத்தில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய ஒரு பகுதியை ஒட்டிய கணிசமான ஒரு பிரதேசத்தை மூதாதையர்களிடமிருந்து பெற்றிருந்தனர்.


அரசுகளும், பேரரசுகளும் சரிந்து கொண்டிருக்கிற காலத்தில் வறுமை மற்றும் துன்பத்தால் மருது பரம்பரையில் படிப்படியாக வளம் குன்றியது. மருது சிறந்த பண்பாளர் கண்ணியமானவர். கிழக்கிந்திய கம்பெனியுடன் (இந்தியாவில் அவரது அரசுகளுடன் என்று குறிப்பிடுவது பொருந்தமானது) பல போர்களில் அவர் ஈடுபட்டார். ஒவ்வொரு சண்டையிலும் அவர் தோல்வியடைந்தாலும் கம்பெனி இராணுவத்திற்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. கடைசியில் கம்பெனிக்குக் கப்பம் கட்டுகின்ற தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு கம்பெனி அரசாங்கம் அவருடைய ஆட்சிப் பிரதேசத்தைக் குறைத்தது. அதிகமான கப்பம் வசூலித்தது. அவமதிப்பான ஆணைகளை அனுப்பியது மற்றும் கொடுங்கோன்மையான இதர வழிகளையும் கடைப்பிடித்தது. மருது தன்னுடைய முன்னோர்களின் அதிகாரத்தை இழந்து அவர்களின் நிழலாக மாறினார்.


மருது, தன்னுடைய படிப்படியான வீழ்ச்சியைப்பற்றி அடிக்கடி சிந்தித்தார். பொதுமக்களும் நாள்தோறும் புகார் செய்தார்கள். அவருடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றாலும் அதை மறுபடியும் பெறுவதற்கு மற்றொரு முயற்சியை செய்ய அவரால் முடியாது. தன்னுடைய கெளரவத்தை சிறிதும் குறையாத அளவில் மரபுரிமையாக தன்னுடைய சந்ததியினரிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய மதமும், கல்வியும் கற்பித்திருந்தன. திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது வலிமையான குடும்பம் மற்றும் நாட்டின் எல்லா அரசர்களும் ஆங்கிலேயர்களின் காலடியில் கிடப்பதைப் பார்த்தார். ஒரு கெட்ட நேரத்தில் மருது பின்வரும் பிரகடனத்தை எழுதினார். கோட்டைகளின் முன் வாயில்களிலும் நாட்டிலுள்ள பொது இடங்களிலும் அதை ஒட்டச் செய்தார்.


"நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரகடனத்தை கவனமாகப் படிக்க வேண்டும். 


ஜம்பு தீபத்திலுள்ள எல்லாச் சாதியினர், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


கர்நாடகத்தின் அரசராகிய முகம்மது அலி நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர் களுக்கு இடத்தைக் கொடுத்து இப்பொழுது விதவையைப் போல ஆகிவிட்டார். ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறி இந்த நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் இங்கு வசிப்பவர்களை நாய்களாக்க் கருதி அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதியினரிடம் ஒற்றுமை யில்லை. நட்புணர்ச்சியில்லை. சுதேசி அரசர்கள், ஐரோப்பியர்களின் மோசடி களைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து நாட்டை முற்றாக அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.


இந்த இழிபிறவிகளால் ஆளப்படுகின்ற இராஜ்ஜியங்களில் வசிப்பவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள். வயிற்றுக்குச் சோறில்லை. அவர்கள் துன்பப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம். கர்நாடக நவாப், திருமலை நாயக்கர் பரம்பரையில் விசுவநாத நாயக்கர் (தஞ்சாவூர்) ஆகியோர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சிறிதும் பாதிக்கப்படாதபடி தங்களது பரம்பரை உரிமையைப் பெறுவார்கள். அவருடைய இராஜ்ஜியங் களில் ஐரோப்பியர்களின் அதிகாரம் ஒழிந்து போவதால் நவாப்புகள் ஆட்சியில் இருந்ததைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.


இழிபிறவிகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு பாளையத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள எல்லோரும் ஆயுதங்களோடு ஒன்று சேர வேண்டும். அப்பொழுது ஏழைகளுக்கும் துன்பமடைந்தவர் களுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் யாராவது இந்த இழிபிறவிகளின் ஆணைகளை நிறைவேற்றி நாய்களைப் போல மகிழ்ச்சியடைந்தால் அவர்கள் கருவறுக்கப்படவேண்டும். இந்த இழிப்பிறவிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்கள் ஆகியோர் மீசை வைத்திருப்பவர்கள், வயலில் அல்லது மற்ற இடங்களில் பாடுபடுபவர்கள், இழிபிறவிகளிடம் வேலை செய்கின்ற சுபேதார்கள், ஜமீன்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் முதல் கட்டத்தில் தங்களுடைய  வீரத்தைக் காட்டட்டும். அதாவது இந்த இழிபிறவிகளை எங்கு பார்த்தாலும் கொல்லட்டும். இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் நிம்மதி அனுபவிக்க மாட்டார்கள். 

இதை மறவாதீர்கள்! இதை 

பின்பற்றாதவனுடைய மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். அவன் உணவு ருசியில்லாமல் போவதுடன் ஊட்டமளிக்காது. அவர் மனைவி சோரம் போவாள். அவனுடைய குழந்தைகள் இழிப்பிறவிகளுக்குப் பிறந்த பிறவிகளாகக் கருதப்படும்.


ஐரோப்பியர்களால் இரத்தம் கலப்படமாகாத எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இதை யார் படித்தாலும் அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டாலும் இதை எழுதி தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி இதை எழுதாதவர்கள், சுற்றறிக்கையாக  இதை அனுப்பாதவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை செய்தவர்களாகக் கருதப் படுவார்கள். நரகத்தின் எல்லா தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதைச் செய்யாத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்த பாவியாக இருப்பான். இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து இந்தப் பிரகடனத்தை கிழிப்பவர்கள் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்த குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் இந்த பிரகடனத்தைப் படித்து இதைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.


                                                        இப்படிக்கு

                                           மருதுபாண்டியன்,

                               பேரரசர்களின் ஊழியன்          ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு ஜென்ம எதிரி.


சீரங்கத்தில் வசிக்கின்ற புரோகிதர்கள் மற்றும் புண்ணியவான்களுக்கு மருது பாண்டியன் உங்களின் பாதங்களில் விழுந்து பலமுறை வணங்குகிறேன். தென்னாட்டு அரசர்கள், கோட்டைகளையும், மாதா கோயில்களையும், ஆலயங் களையும், தொழுகையிடங்களையும் கட்டினார்கள். அந்த மாபெரும் அரசர்களின் வழிவந்த பாளையக்காரர்கள், இந்த இழிப்பிறவிகளின் அநீதியான நடவடிக்கையால் வறுமையில் வாடுகிறார்கள். எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இழிநிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர் நீங்கள். இந்தப்பணி வென்றிட..... என்னை ஆசிர்வதியுங்கள்."


இதைப் படித்த பொழுது இதே மாதிரியான பிரகடனத்தை நான் எங்கோ படித்திருந்ததாக உணர்ச்சி ஏற்பட்டது. ஆம்! சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்ரி கோலாவின் தலைமையில் வந்த ரோமானியப் படையெடுப்பாளர் 

களை எதிர்த்துப் போர் புரியுங்கள் என்று கலடோனியா தளபதியான கால்காகஸ் தன்னுடைய படைவீரர்கள் முன்னால் நிகழ்த்திய உரை என் நினைவிற்கு வந்தது. மனித இயல்பு எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். அன்னியர்கள் எல்லோரும் கொடியவர்கள்; பணத்தாசை உள்ளவர்கள், உண்மையான வீரர்களுக்குரிய பெருந்தன்மை அவர்களுக்கு இருக்காது என்று எடுத்துக்காட்டுவது மருது பாண்டியரது பிரகடனத்தின் முக்கியமான நோக்கமாகும். கால்காகஸ்ஸின் நோக்கமும் அதுவே. அவர் ரோமானியர் களின் காட்டுமிராண்டித்தனம், பேராசை, ஊதாரித்தனம் ஆகியவற்றை வன்மையாக கண்டனம் செய்கிறார். தன்னுடைய நாட்டு மக்களின் முன்னோர்களின் நினைவு களைக் கூறி அவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசி அவனது ஆண்மையைத் தூண்டுகிறார். "ஆயுதங்கள் வீரர்களுக்குப் பெருமை சேர்கின்றன. இப்பொழுது கோழைகளுக்கு கடைசிப் புகலிடமாக இருக்கின்றன" என்றார்.


பிரிட்டனில் வசிக்கின்ற மிகச் சிறந்த மனிதர்களாகிய நாம், அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து நெடுந்தூரத்தில் வசிக்கின்ற நாம், அந்த அடிமைகளைப் பார்க்காததன் மூலம் நமது கண்களை மாசு படியாமல் காப்பாற்றிக் கொண்ட நாம்,  இத்தகையக் கொடுஞ்செயல்களை அனுமதிக்கலாமா?  படையெடுப்பாளர் களின் ஆணவத்திற்கு நாம் அடிபணிய மாட்டோம். இவர்கள் உலகத்தைக் கொள்ளையடித்தவர்கள், நாடுகளைச் சூறையாடிய பிறகும் கடல்களைத் தாண்டிச் சென்று கொள்ளையடிக் கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் நசுக்குகிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் அவர்கள் அலைகிறார்கள். செல்வத்தையும்,  வறுமையையும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் பார்க்கிறார்கள். போலியான உரிமைகளைச் சொல்லிக் கொள்ளையடித்தும், மனிதர்களைப் படுகொலை செய்தும் அவர்கள் பேரரசுகளை உருவாக்குகிறார்கள். 

அவர்கள் அதைச் சமாதானம் என்கிறார்கள். நம்முடைய அன்புப் புதல்வர்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்து வெளிநாடுகளில் சண்டை போட அனுப்புகிறார்கள்.


நம்முடைய மனைவியர்களையும், புதல்வியர்களையும் நாம் மிகவும் நேசிக்கிறோம். அவர்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்குத் தப்பினால், நட்பு என்ற முகமூடியால் காயப்படுத்தபடுகிறார்கள். நம்முடைய சொத்துக்களைக் கப்பம் என்ற பெயரில் அள்ளிக்கொண்டு போகிறார்கள். நாம் விளைவித்த தானியங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். சவுக்கடியாலும், கடுஞ்சொற்களாலும் நம்முடைய வலிமையை அழிக்கிறார்கள். அடிமைகள் முதலில் விலைக்கு வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த எஜமானர்கள் அவர்களுக்கு உணவு தருகிறார்கள். சீரழிந்து போன பிரிட்டன் அடிமையாக இருப்பதற்கும் அந்த அடிமைத்தனம் நீடிப்பதற்கும் கப்பம் கட்டித் திருப்தியடைகிறது.


இனிமேல் தப்பமுடியும் என்கிற நம்பிக்கை அழிந்துவிட்டது. ஏனென்றால் தம்மிடம் எஞ்சியிருக்கின்ற வீரமும், சுதந்திர உணர்ச்சியும் நம்முடைய மூர்க்கத்தனமான எஜமானர்களிடம் அதிக வெறுப்பைத் தூண்டுகிறது. ஆகவே, "அன்பார்ந்த சகோதரர்களே! சுதந்திர உணர்ச்சி இனிமேலும் இழக்காமல் காப்பாற்றியுள்ள நீங்கள் கலிடோனியாவைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இன்னுயிர்களை அர்ப்பணிப்போம் என்று அறிவியுங்கள். ரோமானியர்கள், அமைதிக் காலத்தில் ஆணவத்தோடு நடந்து கொள்வதைப் போல, வீரத்தோடும் போர் புரிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய பிரிவினைகளும், வேற்றுமைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. எதிரிகளின் தவறுகளைப் பயன்படுத்தி அவர்களது இராணுவம் வெற்றி பெறுகிறது. வெற்றிதான் அந்த இராணுவத்தை சேர்த்து வைத்திருக்கிறது. தோல்வி யடைந்தால் அவர்கள் விரைவில் சிதறிப் போய் விடுவார்கள்."


பேராண்மை எனப்படுவது சுதேசியிடம் தான் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலே தரப்பட்ட உரை, 19 ஆம் நூற்றாண்டின் ஆன்மாவைத் தூண்டக்கூடியது. ஆனால் நமது தத்துவ ஞானிகளால் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அதை பிரதியெடுக்க முடியாது. கவனமுள்ள வாசகர்கள் இந்த வீர உரைக்கும் மருதுபாண்டியருடைய பிரகடனத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். தன்னம்பிக்கையும் பெருமிதமும் உள்ள ஒரு வீரரை இந்தப் பிரகடனத்தில் பார்க்கலாம். மறுபக்கத்தில் இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டு, பூமியில் அழுத்தப்பட்டுள்ள ஒரு வீரரின் வேதனைக் குரலை கேட்கிறோம்.


நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட நண்பர், இந்த பிரகடனத்தின் பிரதியை என்னிடம் தந்தார். இந்தியாவில்  நம்முடைய பிரதேசங்களில் வசிக்கின்ற சுதேசிகளில் எண்ணற்றவர்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஆங்கிலேயர் களிடமிருந்து இந்தச் சிந்தனைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மருது தனக்கு எதிராக வீசுகின்ற சூறாவளிக் காற்றை எதிர்த்து நின்று கொண்டு இதை முழங்குகிறார். மற்றவர்கள் இதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். ஆனால் என்னுடைய கருத்து அதற்கு எதிரானது.


இந்தப் பிரகடனத்தைப் பற்றிய செய்தி ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. அவர் உடனே அதைப் பிரதியெடுத்து தலைமை அதிகாரிக்கு மிக அவசரமாக அனுப்பினார். தேசத் துரோகம்! கலகம்! என்று அவர்கள் கூக்குரலிட்ட்டார்கள். மருதுவையும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் அனைவரையும் கேவலமான முறையில் ஒழிப்பதற்கு உத்தரவுகள் உடனடியாக வெளியிடப் பட்டன. மருதுபாண்டியர் மிகவும் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டபடியால் மருது இந்தப் பிரகடனத்தைத் தயாரித்தார் என்று நான் கூறவில்லை. மருது இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நற்பண்புகளையெம், இனிமையான சுபாவத்தையும் அவமதித்துவிட்டார் என்று ஒத்துக்கொள்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மருது குடும்பத்திற்கு நடந்த மிகவும் பயங்கரமான கொடுமையை யாரும் கற்பனையில் கூட நியாயப்படுத்த முடியாது.


                                            "ஜே.கோர்லே"

                                            ‎         (1813)

----------------------------------------------------------------------

அகமுடையார் வரலாற்று 

மீட்புப் பணியில்..... 


சோ.பாலமுருகன் 


புலனம் (WhatsApp) எண் : 94429 38890.

*சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                                 *-யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் காணோம்....*


🌹🌹🌹👌🏽👍🙏🏻

திங்கள், 14 ஜூன், 2021

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கூறும் அறிவுரைகள்.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.


(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)


2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.


(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)


3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.


(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 


4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....


(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)


5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...


(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)


6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....


(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

---------------------


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!


► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!


நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 


ஓடுவது முள் அல்ல..! 

நம் வாழ்க்கை...