செல்வமலி தமிழ் நாடு -2
உள் நாட்டு வணிகம் !
ஒரு நாட்டின் வரலாறு அந்நாட்டை அரசாண்ட மன்னர்களுடைய
வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த
குடிமக்களின் வாழ்க்கை சமூக வரலாறும் சேர்ந்ததே. உண்மையான வரலாறு ஆகும் .
சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை
வரலாற்றில் ஓரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது.நெய்தல் தினை வணிகம் பற்றியதே .அவர்களே நெடு நாட்கள் கடற்கரையில் ,கடலுக்கு அண்மையில் வாழ்ந்தார்கள்
தென்னாடு அதிக பரப்பு மூன்று திக்கும் கடலால் சூழப்பட்டது அதில் நெய்தல் தினை என்னும் கடலின் அருகில் வாழ்ந்த மக்கள் .கடலின் தன்மையை அருகில் இருந்து நெடு நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர் .. கடலுடன் நெருங்கி இருந்ததால் கடலிடத்தில் இருந்த அச்சன் சிறுக சிறுக அவர்களிடம் இருந்து விலகியது .
கடலுடன் நட்பு கொண்டார்கள் .அதை அன்பாக நோக்கினார்கள் .கடலும் அவர்களிடம் காதல் பூண்டது
சிறுக சிறுக தைரியம் கொண்டு முதலில் கரையோரம் சென்று பார்த்தனர் .பிறகு ஆழ்கடல்கடந்து சென்று பல நாடுகளைக்கண்டு திரை மீளர்கள் ஆனார்கள் .
அவர்களே பெரு வணிகர்களாகவும் கடல் கடந்த தொடர்பால் ஆயினர் . இதுவே மிக சுருக்கமான நெய்தல் வரலாறு .
அந்தப் பழங்கால வாணிகத்துக்கும் இக்காலத்து
விஞ்ஞான உலக வாணிகத்துக்கும் பெருத்த வேறுபாடுகள்
உள்ளன. ஆனால், அந்தப் பழங்காலத்தவர், அக்காலத்து
சூழ்நிலைகளுக்கும் தக்கபடித்
கரை வாணிகத்தையும் கடல் வாணிகத்தையும் நடத்தினார்கள்.
அவர்கள் கூட்டாகச் சேர்ந்து “சாத்து அமைத்துப்
பெரிய வாணிகத்தை நடத்தினார்கள்.
தரை வாணிகஞ்செய்த வாணிகத் தலைவர் மாசாத்துவர் என்று பெயர் பெற் றனர். கடல் வாணிகத் தலைவா் மாதாய்கர் (மாநாவிகர்)
என்று பெயர் கூறப்பட்டனர். அக்காலத் தமிழகத்திலே பல மாசாத்துவர்களும் பல மாநாய்கார்களும் இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள் .
சங்ககாலத்துத் தமிழரசர்கள் முதலாக அண்மைய மன்னர்கள் வரை தங்களுடைய நாடுகளில்
வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள்;
அவர்கள் தங்களுடைய நாடுகளில் வாணிகக் கப்பல்கள்
வந்துபோகவும் ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் துறைமுகப் பட்டினங்களை அமைத்தார்கள்.
இராக்காலத்தில் இருளில் கடலில்
வருகிற கப்பல்கள் திசை தப்பிப் போகாமலும், துறைமுகத் தை அடையாளப்படுத்திக் காட்டவும் கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள்.
துறைமுகங்களில் உள்ள வாணிகப் பொருள்கள் களவு
போகாதபடி தாக்கல் காவல் வைத்தனர். வாணிகஞ் செய்து பெரும்பொருள் ஈட்டின வணிகப் பெருமக்களுக்கு “எட்டி” என்னும்
சிறப்புப் பெயரும், “எட்டிப்பூ' என்னும் பொற் பதக்கத்தை யும் அளித்துச் சிறப்பினைச் செய்தார்கள்
.அப்படி எட்டிப்பாட்டம் வாங்கியர்களே செட்டிகள் ஆனார்கள் .
தரை வாணிகமும் கடல் வாணிகமும் பெருகவே, அவற்றைச் சார்ந்து
பயிர்தொழில் வளர்ச்சியும் கைத்தொழில் வளர்ச்சியும்
பெருகிப் பொருள் உற்பத்தி அதிகப்பட்டது.
பொருள்களின் உற்பத்தியினாலும் வாணிகத்தினாலும் பொருளா தாரம் உயர்ந்து நாடு செழித்து மக்கள் நல்வாழ்வு வாழ்ந் தாரர்கள். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கும் நாகரிக வாழ்க் கைக்கும் கலைகள் வளர்ச்சிக்கும் ,கோயில்கள் பெருகவும் வாணிகம் முக்கிய காரணமாக இருந்தது.
பண்டைய நாட்களில் கொற்கை, தொண்டி, பூம்புகார், சோபட்டினம் மாமல்ல புரம் அரிக்க மேடு முதலான தமிழ் நாட்டுத் துறைமுகப் பட்டினங்களிலிருந்து
நாவாய்களில் புறப்பட்டுச் சென்ற தமிழ வாணிகர் கிழக்குக் கடல் ஓரமாகவே நாவாய்களைச் செலுத்தி
நெல்லூர், கலிங்கப் பட்டினம், தம்ரலிப்தி (வங்காள தேசத் துறைமுகப் பட்டினம்) முதலான பட்டினங்களுக்குச் சென்றனர். .
பிறகு கங்கையாறு கடலில் .கலக்கிற வாங்க புகர் முகத்தின் ஊடே கங்கையாற்றில் நுழைந்து கங்கைக் கரையில் இருந்த பாடலிபுரம் ,
காசி (வாரணாசி) முதலான அவர்களில் வாணிகஞ் செய்து பெரும் பொருள் ஈட்டினார்கள் .
“கங்கை வங்கம் போகுவர் கொல்லோ,
என்று நற்றிணை (/89:5) கூறுகிறது.
கங்கைக் கரையில்
பாடலிபுரத்தில் தமிழர் வாணிகஞ் செய்த போது, கி மு .
4 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டையரசாண்ட நந்த
அரசர், தங்கஞ்டைய தலைநகரமான பாடலிபுரத்தில் கங்கை யாற்றின் கீழே பெருஞ் செல்வத்தைப் புகைத்து வைத்திருந் குதைப் பற்றி அவர்கள் அறிந்தனர்.
அப்போதைய தமிழ் வணிகர்கள் இந்த நாட்டின் பரந்த பரப்பில் எங்கும் பரவி வணிகம் செய்தனர் .அங்கு நிலவும் செய்திகள் அனைத்தையும் அறிந்திருந்தனர்
தமிழக வாணிகரின் மூலமாக நந்த அரசரின் செல்வப் புதையலைத். தமிழ் நாட்டவர் ௮க் காலத்தில் அறிந்திருந்தார்கள்.
மாமூலனார் என்னும் சங்கப் புலவர் தம்முடைய செய்யுளில். நந்தருடைய நிதியைக் கூறுகிறார்
“பல்புகம் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முகற் கரந்த நிதியங் கொல்லோ ”
(அகம், 265: 4-6)
நந்த அரசரின் செல்வப் புதையலைப் பற்றிய இந்தச் செய்தியை இந்தச் செய்யுளில் இருந்து அறிகிறோம், வடநாட்டுப்பழைய நூல்களில் இந்தச் செய்தி கூறப்படவில்லை,கங்கைக்கரை புதையலைப்பற்றி தமிழ் இலக்கியம் மட்டுமே பேசுகிறது .
தமிழ வாணிகர் கலிங்க நாட்டிலே போய் வாணிகஞ்
செய்தார்கள். அந்த வாணிகச் சாத்து கி மு .மூன்று
நூற்றாண்டிலிருந்து கி .மு., 750 வரையில் நூற்றைம்பது
ஆண்டுகள் அங்குக் தங்கி வாணிகம் செய்தது. அவர்களு
டைய வாணிகம் நாளுக்கு நாள் பெருகிச் செல்வாக்கும்
பலமும் அடைந்தது.
அக்காலத்தில் கலிங்க தேசத்தை
யரசாண்ட காரவேலன் என்னும் அரசன் குமிழ வாணிகரால்
தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும் என்று அஞ்சி
அந்த வாணிகச் சாத்து அழித்து விட்டான்.
அந்தச் செய்தியை அவ்வர௪ன் எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக்
கல்வெட்டெழுத்துச் சாசனத்திலிருந்து அறிகிறோம்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டமுக்கிய கல்வெட்டு இது ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது.
பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது
அதில் உள்ள மிக முக்கிய செய்தி இது ஆகும்
எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார்.
யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார் இதில் ஆவா அரசர்கள் யார் என்று தெரியவில்லை
பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் அல்லது 130 ஆண்டுகளாக தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.என்று பெருமை கொள்கிறது .
அத்தைய தமிர சங்காத்தம் எனும் கூட்டணி தமிழ் வணிகர்களின் கூட்டணியாக இருக்கவே சாத்தியம் உண்டு .
கலிங்கதேசத்தில் வாணிகஞ் செய்த தமிழர் கலிங்க நாட்டுப் பொருள்களைத் தமிழகத்துக்கும் தமிழகத்துப் சாத்துகளைக்
கலிங்க .நாட்டுக்கும் கொண்டு போய் விற்றார்கள்.
கலிங்கநாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட முக் யமான பொருள் பருத்தித் துணி. பெருவாரியாகக் . சுலிங்கத் துணி தமிழ் நாட்டில் இறக்குமதியாயிற்று.
கலிங்கத்திலிருந்து வந்தபடியால் அத்துணி கலிங்கத் துணி என்.று சிறப்பாகப் பெயர் பெற்றது.
பிறகு காலப்போக்கில் கலிங்கம்
என்னும் பெயர் துணிகளுக்குப் பொதுப் பெயராக வழங்கப் பட்டது.
சங்க நூல்களில் துணிக்குப் பெயராகக் கலிங்கம்
என்னும் சொல் வழங்கப்பட்டிருக்கிறது.
கலிங்க நாட்டு.லிருந்து அக்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள் சந்தனக் கல். “
வடவர் தந்த வான் கேழ் வட்டம்.' என்று கொண்டாடப்பட்டிருக்கிறது .
இப்போதைய ஆந்திர நாட்டிலே பேர் போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்) சங்க காலத்திலே தமிழ் வாணிகர் சென்று வாணிகஞ் செய்தனர்.
அங்கிருந்த அமராவதி பெளத்தக்
தூபி இ.மு. 200 இல் தொடங்கி கி.பி. 200 வரையில்
கட்டப்பட்டது.
அந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பலர்
பல வகையில் உதவி செய்தார்கள்.
அப்போது அங்குவாணிகஞ் செய்து கொண்டிருந்த தமிழ் வாணிகரும் அக் கட்டிடம் கட்டுவதற்கு உதவி செய்தனர்.
தமிள (தமிழ)கண்ணன் என்னும் வாணிகனும் அவனுடைய தம்பியாகிய
இளங்கண்ணனும் அவர்களுடைய தங்கையாகிய நாகையும்
அமராவதி தூபி கட்டுவதற்கருக் கைங்கரியம் செய்துள்ளனர் .
கண்ணன் என்ற பெயர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்து இப்போது வரை தொடர்ந்து தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது . இதுவே தமிழின் சீரிளமைக்கு ஒரு சான்றாகும் .
இந்தச் செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல் சாசனத்தினால்
தெரிகிறது. 8$ அடி உயரமும் 8 அடி. 8 அங்குல அகலமும்
உள்ள ஒரு கல்லில் பிரஈமி எழுத்தினால் எழுதப்பட்ட ஒரு சாசனம் இதைக் கூறுகிறது.
இப்போது இந்தக் கல்வெட்டு இங்கிலாந்து நாட்டிற்குக் கொண்டு போகப்பட்டு அங்கு இலண்டன் மாநகரத்துக் காட்சி சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
இதனாலும் கலிங்க நாட்டில் தமிழர் வாணிகஞ் செய்த செய்தி அறியப்படுகிறது.”
இவாறெல்லாம் பரந்த பாரதமெங்கும் பரவி உள் நாட்டு வணிகம் செய்த அந்த இனம் எங்கே போனது ? என்றால் அதுவே இப்போது உள்நாட்டு மீனவர் அல்லது செம்படவர் எனும் சிவன் படையினராக மிஞ்சி இருக்கிறார்கள் .
நெடுங்கடல் தாண்டி இங்குவணிகம் செய்யவந்த பிறகு நம்மை ஆண்டவர்கள் ஆன அயல் நாட்டவர் அனைவரும் தங்களின் முக்கிய எதிரியாக இங்கு நினைத்தது இங்கு வாழ்ந்த சிறந்த மாலுமிகளான தொல் தமிழ் நெய்தல் நிலத்தவரை மட்டுமே அவர்களின் திறமை க்குறித்து அஞ்சினர் .அவர்களை அழித்தால் இன்றி தங்கள் வணிகம் வளராது என்று புரிந்திருந்தனர் .
.அது மூர்கள் எனும் முகமதியர் முதல் அத்தனை ஐரோப்பியர்களுக்கு பொருந்தும்
.அவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு நசுக்கப்பட்ட அவர்கள் பலவாறு சிதறினர் பல்வேறு வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டனர்
.அப்படியும் தைரியமாக தங்களை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்கள் இப்போதைய உள் நா ட்டு மீனவர்கள் இதுவே கடற்கரை ஓரம் வாழும் மீனவர்களுக்கும் பொருந்தும் .இப்போது உள்நாட்டு வணிகத்தைப்பற்றிக்கூறுவதால் உள்நாட்டு பரதவரைக் க்குறிப்பிடுகிறேன் கடல்பரதவரை ப்பற்றி முழுக்க முழுக்க பின்னல் வருகிறது .
உள்நாட்டு பரதவரில் செட்டிகள் உண்டு மணியக்காரர் உண்டு ,நா ட்டார்கள் உண்டு நாயக்கர்கள் உண்டு .
அவர்கள் பொதுவாக இப்போது சிவன்படையினர் என்றும் பர்வத ராஜகுலம் என்றும் இப்போது அ டையாளப்படுத்தப்படுகிறார்கள் .
இதைபற்றி சொன்னால் பெரிய கதை நீளும் இப்போதைக்கு இதை மட்டும் இப்போது குறிப்பிட்டு தமிழ் நட்டு வணிக வரலாற்றிற்கு திரும்புவோம் .அடுத்து தொல் தமிழ் நாட்டின் துறைமுகங்கள் பற்றி காண்போம் .
அண்ணாமலை சுகுமாரன் 23/7/2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக