திங்கள், 15 மார்ச், 2021

கூட்டல் தொன்மை

 இன்று பள்ளியில் கணக்கியலில் கூட்டல், கழித்தல், பெருக்கல் வகுத்தல் போன்ற கணக்கீடுகளை படித்து வருகின்ற நமது பிள்ளைகள் இந்தக் கணக்கீடுகளுக்கு +, -, X, ÷, போன்ற குறியீடுகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தக் கணக்கியல் குறியீடுகள் எல்லாம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிப்பட்டு நமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் பொதுவில் நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கும் நம்பிக்கை. 


+ வடிவத்தில் சந்திக்கும் சாலையை கூட்டு ரோடு என்றும் நாலு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ஊரை கூடலூர் என்பதும் நம் வழக்கம். தமிழ் நாட்டில் பல கூடலூர்கள் உண்டு. அநேகமாக இந்தக் கூடலூர்கள் மலையில் காட்டுப்பாதைகள் கூடும் இடத்தில் தான் அமைந்திருக்கின்றன. இதற்கான ஒன்றிரண்டு எடுத்துக்காட்டுகளாக கம்பம் மலைப்பதியில் உள்ள கம்பம் கூடலூரையும் ஊட்டி-மைசூர் மலைப்பாதையில் உள்ள கூடலூரையும் சொல்லலாம். 


இந்த ஊர்களுக்கு வெள்ளைகாரன் வந்தா பெயர் வைத்தான்? கூடலூர் கிழார் என்ற சங்கப்புலவரின் பெயர் கூடலூரின் தொன்மையை நமக்கு புரிய வைக்கும். இந்தக் குறியீகள் எல்லாம் இங்கிருந்து அங்கு போய், இங்கு தொலைந்து மீண்டும் அங்கிருந்து இங்கு வந்திருக்கின்றன என்பதாக தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


இன்னும் வரும் 


கவிஞர் இலக்கியச்சுடர்

குருசெயச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக