பண்டைய பண்டையர் எனும் தொல்பாண்டியர்கள் சந்திரகுல மரபைச்சார்ந்தவர்கள்.அஃதொப்ப தமிழர்களும் சந்திரனையே காலம் காட்டு பொருளாகக் கொண்டிருந்தனர்.எனவேதான் சந்திரனின் நாளோட்டக்கணக்கை தமிழில் நுட்பமாக கோடினர்.
குமரிவாழ் தமிழர்கள் இதனையே கறுத்த உவா என்றும் வெளுத்த உவா என்றும் குறிப்பிட்டனர்.தூய தமிழில் குறிப்பிடப்பட்ட நாள்கணக்கை வடமொழிச்சொற்களை தந்திரமாக புகுத்தி தமிழை மண்மறையச் செய்தது காலத்தின் சதி.
நிலவிலுள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்
சொல்லாடல்காண்போம்.
பிரதமை- ஒன்றாம் வளர்பிறை
துதியை - இரண்டாம் வளர்பிறை
திரிதியை - மூன்றாம் வளர்பிறை
சதுர்த்தி - நான்காம் வளர்பிறை
பஞ்சமி - ஐந்தாம் வளர்பிறை
சஷ்டி - ஆறாம் வளர்பிறை
சப்தமி - ஏழாம் வளர்பிறை
அட்டமி - எட்டாம் வளர்பிறை
நவம் - ஒன்பதாம் வளர்பிறை
தசமி - பத்தாம் வளர்பிறை
ஏகாதசி - பதினொன்றாம் வளர்பிறை
துவாதசி - பனிரெண்டாம் வளர்பிறை
திரயோதசி - பதிமூன்றாம் வளர்பிறை
சதுத்தசி - பதினான்காம் வளர்பிறை
பஞ்சதசி - பதினைந்தாம் வளர்பிறை.
இவையே ஏக் ,தோ, திரி Three, சார் பாஞ்ச் சே சாட் /சாத் அட்8 நவ்9 தஸ்10/தச்+மி யவ்/ஏகாதஸ் துவா த்ரயம் சலூரம் பின்ஸ. .......... வடமொழி எண்ணைக்குறிக்கும் சொற்களுடன் "சே" & "மே" உஸ்ஸே உஸ்மே சேர்த்தால் (ஸே-சே-சி) (மே-மி) திதி தேதி தேத் Date கிடைக்கும்.
குமரி மாவட்டத்தில் உள்ள வர்மவித்வான்களின் வீடுகளில் இன்றும் "ஒண்ணாம் பெறை ரெண்டாம் பெறை மூணாம்பெறை(பிறை) எனும் தூயதமிழ் நாளேட்டின் தொல் நீட்சியையே பின்பற்றிவருகிறார்கள்.....
முகநூலில் வர்மாணி
https://m.facebook.com/story.php?story_fbid=126891419344547&id=100060710675086&sfnsn=wiwspmo
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக