வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இத்தனை வேறு பாடா? தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:-

பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.

தமிழ்  மொழியில் இத்தகைய சொல்லாக்கமா  !

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில்
திரு.சன்முகம் அவர்கள் 20/02/2020 பகிர்தது

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகை தொகுப்பு

* அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
* உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
* உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
* குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
* தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
* துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
* நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
* நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
* பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
* மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
* மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
* விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில் திரு.உமாதேவ் அவர்கள் 19/02/2020 பகிர்தது 

வியாழன், 13 பிப்ரவரி, 2020

இளைய தலைமுறைக்கான ஆய்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குமரிக்கண்டம் ஆய்வாளர் ஒரிசா பாலு வுடன் கலந்துரையாடல் .

பள்ளிக்கரணை சான் அக்காடமியில்
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள்-

ஸ்ரீகரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்குப்பின்னர். 8.2.2020 , அன்று காலை7.30 மணிக்கு மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் புறப்பட்டு சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும்
சான் அகாடமியை சென்றடைந்தோம்.
எங்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
அங்கு ‘தமிழ்நாட்டின் பாரம்பரியம்’ என்ற பொருளில்  எங்கள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியை ஜானிகா தொகுத்து வழங்கினார். தமிழ்தாய் வாழ்த்து நிகழ்வுக்குப்பின்னர்   இளம் விஞ்ஞானி பார்வதி குமரி அறிவியல் பேரவையின்  இவ்வாண்டு செயல்பாடுகள் குறித்து (2019-2020) தொகுத்து கூறினார்.
பள்ளியின் முதல்வர் திருமதி.சுஜாதா சரவணன் அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்.
குமரி அறிவியல் பேரவையின் நிறுவனர் முள்ளஞ்சேரி மு.வேலைய்யன் அறிமுக  உரை வழங்கி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சான் அகாடமிக்கு நன்றி கூறி,
அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்சியின் சிறப்பு விருந்தினரான ஒரிசா பாலு அவர்களைப் பற்றிய முகவுரையை ஜானிகா கூறிவிட்டு அவரை வரவேற்று பேசினார்.....
ஒரிசா பாலு அவர்கள் தனது உரையை துவங்கினார். தமிழ்நாட்டையும் தமிழர்கள் பண்டைய நாகரீகம்  பற்றியும் பல அரிய உண்மைகளை  ஆதாரங்களுடன் விளக்கினார்.
முதலில் அவர் தனது பெயருடன் தனது ரத்த வகையை சேர்த்திருப்பதன் காரணத்தை தெரிவித்தார். பல வருடங்களுக்கு
முன்னர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இரத்த வகை தெரியாத காரணத்தால், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் உயிரிழக்க நேரிட்டது. இதை உணர்ந்த பாலு அவர்கள் பின்பற்ற துவங்கியவுடன் பலர் இதை பின்பற்றினர். இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன எனக்கூறினார்.
நமது உடல் வெப்பமண்டல காலநிலையை தாங்கும்படி உள்ளது என்றும் தனக்கு மிகவும் விருப்பமான இடம் கன்னியாகுமரி என்பதை தெரிவித்தார்.
குமரிக் கடல் தற்பொழுது லட்சதீவு கடல் என்று அழைக்கப்படுகிறது.
 நாடுகளைப் பற்றி பல சுவையான செய்திகளை தெரிவித்தார்.
 ஐக்கிய நாடுகள் அமைப்பில் 197 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அறிஞர்கள் பலர் உலக நாடுகளுக்குச் சென்று தமிழை பரப்பிய காரணத்தால்
75 நாடுகளில்  தமிழ் பேசுகின்றனர் என்றார்.
நாம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுவதாக நினைத்திருக்கிறோம். ஆனால் 130 நாடுகளில் தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.
218 நாடுகளில் கடவுச்சீட்டு (Passport) பழக்கத்தில் உள்ளது.
111நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ் இமயமலை முதல் மடகஸ்கார் வரை பரவி உள்ளது.பழந்தமிழர்கள் காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர்.
இந்தியாவின் வேர் கன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள
முத்து குளிவயல் என்ற இடத்தில் தான் பண்டைய அறிவியல் அறிஞர்கள் வானிலை ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் வயது ஐந்து கோடி வருடங்களுக்கும் மேல்ஆகும்.பண்டைக்
காலங்களில் சுறா பிடிக்கும் போட்டிகள் நடந்துள்ளன.
அதில் தூத்தூர் மக்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்ற குறிப்பும் கிடைத்துள்ளது என்றார் . வால்மீகி இராமாயணத்தில் ‘மகேந்திரகிரி’
என்ற சொல் காணப்படுகிறது.
தமிழர்கள் அடிப்படை அறிவியலை நன்கு அறிந்திருந்தினர்.
உளியின்  கண்டுபிடிப்பின் மூலம் உலோகங்கள் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்ற  அங்கீகாரம் கிடைத்தது. 1863 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் இடத்தில் முதல் கல்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற பல கைகோடாரிகள் கிடைத்தன.
இதை ‘ Madras Stone Age factory’ என்றுஅழைக்கப்பட்டது.
 பல அதிசயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுதும்கூட            ஆறு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.மலைவாழ் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றார்.கோயம்பத்தூரில்
உள்ள ஆழி ஆறு கடலில் கலக்காது என தெரிவித்தார்...
 35 நாடுகளில் தமிழ் ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அத்திரப்பாக்கம் என்ற ஊர் உள்ளது ,
இங்குதான் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை ஆரம்பித்
திருக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 தொல்காப்பியத்தை கற்பதன் மூலம் பழந்தமிழ் மக்களின்வாழ்க்கை முறைகளை அறிய இயலும் என்று அறிவுறுத்தினார். 1300 தமிழ் Rock Art கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தவர்  திருப்பதியில் இருந்தும் கிடைக்கப்பட்டுள்ளது
என்றார்.
தமிழ் மக்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர். ஒரிசாவை ஆண்ட கலிங்க மன்னன் காரவேளன், தமிழ்நாட்டை போரிட்டு வெற்றிகொள்ள முடியாததால் தமிழ்நாட்டுடன் நட்பு பூண்டார் என குறிப்புகள் உள்ளன .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இவரையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு சிறு பகுதிதான்.
வைகை ஆற்றுப் படுகையில் இருந்து பெரிய கல்சிற்பங்கள் கிடைத்துள்ளது.
1000 வருடங்களுக்கு முன்னர் திருப்பூரில் வாணிக சமயம் என்ற காலம் இருந்துள்ளது. இங்கு வணிகர்கள் கடல்வழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.
கடலுக்கு அடியில் சென்றுவிட்டு திரும்பிவருபவர்கள் திரை மீளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
மீனவ மக்களே பெரும்பாலும் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்திருந்தனர்.
பழந்தமிழ் மக்கள் கப்பல் கட்டும் தொழிலிலும் கடல்வழி வணிகத்திலும் சிறந்துவிளங்கினர்.
42 மரங்களைக் கொண்டு பாய்மர கப்பல்களை உருவாக்கினர், அதில் பயன்படுத்திய கருங்காலி மரம் இடி தாங்கியாக பயன்பட்டது.
எல்லா துறைமுகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. 12,000 க்கும் அதிகமான கடல் வழிகள் இருந்தன.
 தமிழ் மக்கள்தான் முதன்முதலில் மண்பாண்டங்களை உருவாக்கினர்.
அம்மி செய்ய அறிந்திருந்தனர்.
குமரி மாவட்டம் முன்பு கௌரியன் நாடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் ஒரு வித தோடுகளை பணமாக பயன்படுத்தினர்.
குமரி கண்டம் கடல் கோளால் அழியப் பட்டதற்கு மற்றுமொரு ஆதாரம் முட்டம் பகுதியில் கடலுக்குள் காணப்படும் ஆடு மேய்ச்சான் பாறை ஆகும்.
 பண்டைக்காலத்தில் மக்கள் இப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்த்திருந்தனர்  அதனாலேயே இப்பெயர் கிடைத்தது. கலிங்கராஜபுரத்தில்            7 மீ உயரமுள்ள சிவன் கோயில் ஒன்று மண்ணில் புதையுண்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சதீவில் தாவரங்களின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன.
 முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்’  என்ற சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 12,000 தீவுகளில் 9,000 தீவுகள் கடலில் மூழ்கின என்பதாகும்  பழந் தமிழர்களின் கணக்கிடும் திறமையும்ஆச்சரியமானதுதான். 1959 - 1965 வரை 14 நாடுகள் இணைந்து நடத்திய International Indian Ocean Expedition என்ற ஆராய்ச்சி மூலம் தமிழர்கள் பற்றிய பல தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
ஒரிசா பாலு அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சென்று லெமூரியா கண்டம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்....
ராமநாதபுரம் முற்காலத்தில் முகவை என்று அழைக்கப்பட்டது.... முகவை என்ற சொல் பல நாடுகளில்காணப்படுகிறதுதமிழ்நாட்டில் உள்ள கீரை வகைகளில் ஒன்றான புளிச்சகீரை Canof என்னும் இடத்தில் தற்பொழுது காணப்படுகிறது. கேமரூன், மடகஸ்கார், பெல்ஜியம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்து கின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னரே கடன் அட்டைகளை (Debit Card) பயன்படுத்தினர்.
பாண்டியர்கள் ஏதென்ஸ் நாட்டை ஆண்டதற்கான சான்றுகள்கிடைத்துள்ளன. துருக்கியில் அதியமான் என்ற பெயருள்ள இடம் உள்ளது. பழனி என்ற பெயரில் 16 ஊர்கள் உள்ளன.வேனாடு என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஸ்ரீகரிகோட்டாவிலும் உள்ளது.
 பிலிப்பைன்சில் இன்றும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். கொரியா மக்கள் ஆதிகேசவனை வழிபடுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பண்டைக்காலத்தில் காளையை பாண்டி என அழைத்தனர். ஆமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.
கோயில்களில் ஆமைகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சென்னையில்                  திருஆமையூர் என்ற இடம் உள்ளது. உலகத்தில் மொத்தம் 1024 திசைகள் உள்ளன.தமிழ்நாட்டில்தான் அதிகமாக நீரில் மூழ்கும் பெண்கள் இருந்தனர். மணக்குடி என்னும் இடத்தில் முத்துக்கள் அதிகமாக கிடைத்தன.
தெப்பம், நங்கூரம், ஏவுகணை, நீர்மூழ்கிக்கப்பல் போன்றவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனர் தமிழர்கள் என்ற பல செய்திகளை கூறினார்.
இவற்றில் இருந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை நன்கு அறிய முடிந்தது.
எங்களில் ஜானிகா ,காயத்ரி, பார்வதி ஆகியோர்  பின்னுட்டம் வழங்கினோம். பின்னர் பொங்கல் புனிதா வாழ்த்துரை வழங்கினார்

ஒரிசா பாலு  தன்  உரை         யில் தன் பெயருக்கு பின்னால் தன் இரத்த வகையை சேர்த்திருப்பது மக்களிடையே இரத்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என கேள்விக்கு பதிலளித்தார் .
கன்யாகுமரி தனக்கு மிகவும் பிடித்த மான இடம் எனவும்.ஏனெனில் கன்யாகுமரி வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு
நீரில் மூழ்கி இருக்கும் குமரிக் கண்டத்தில் மீனின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது அதனால் மீன்வளம் அதிகம் என்று கூறினார்.
205 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது என ஐநா சபை அறிவித்துள்ளது என்றார்.மேலும் தமிழர்கள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று மிகப்பெரிய பதவிக ளை வகித்து வருகின்றனர்.
இந்தியாவின் தென்பகுதி மக்கள் வானியலில் பழங்காலத்திலேயே ஞானத்தினைப்
பெற்றுள்ளர் என்று கூறினார்.
கன்யாகுமரி தென்மேற்கு வடகிழக்கு  பருவக்காற்றால்  மழை பெறும் பகுதியாகவுள்ளது .
தமிழர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றும் கூறினார்.

நம் தலைநகரமான சென்னையில் பழங்கால நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பர்மா,சீனா,ஓமன் போன்ற நாடுகளில் அகழ்வாராய்ச்சி யில் தமிழ்  கலாச்சாரச் சுவடுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழ்மொழியில் மட்டுமே கடல்வழி பயணக் குறிப்புக்கள் இருப்பதன் மூலமாக பழங்காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வெகுதூரம் சென்று ற்றுள்ளது
 நமக்கு தெரிகிறது என்றார். தொல்காப்பியம் நூலை நாம் படிப்பதால் தமிழ் ஆராய்ச்சிக் கான அறிவினை நாம் பெறலாம் என்று கூறினார்
அதிரம்பாக்கத்தில் 1.5 மில்லியன் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழனது வீரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்
பற்றியும் விரிவாக விளக்கினார்.
மேலும் அவர் ஆங்கிலத்தை கல்வியறிவுக்காவும் தாய்மொழியாம் தமிழினை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியதாக கூறினார்.
பழந்தமிழர்கள் இரும்பு, பட்டுத் துணி, நறுமணப் பொருள் களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவந்த தகவலினையும் கூறினார்.
பாண்டிச்சேரிக்கடலில் பெரிய கடற்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது மிகவும் பழமையானதும் என்றார்.
குமரிக் கண்டத்தினை பற்றிய ஆராய்ச்சிக்கு  மீனவர்கள் பெரிதும் உதவியதாக   கூறினார்

தமிழர்கள்  பல இடங்களில் வாழ்ந்திருந்த காரணத்தால்  தமிழ் வார்த்தை கள்  பல இடங்களில் பயன் படுத்தப்படுத்தபடுகிறது.  ..
ஆமைகள் பற்றிய  அவரது ஆராய்ச்சிபற்றி.விரிவாக விளக்கம்அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை போன்று வெளிநாடுகளில் இருப்பதன் மூலம் பண்டைய தமிழரின்   இடம் பெயர்வை நாம் அறியமுடியும் என்றார்.
நம் நாட்டின் வளத்தினை கண்டே அன்னியர் படையெடுத்து வந்தனர். என்றார்.
மேலும் நம் தமிழக விளையாட்டுகள் இன்றும் வெளிநாடுகளில்  விளையாடப்பட்டு வருகிறது..என்றுரைத்தார்.
இவரது உரையின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் தமிழினத்தினைப்பற்றியும் குமரிக்கண்டத்தினைப் பற்றியும் தெளிந்த அறிவினைப் பெற்றோம்.
ஜாண்ரபிகுமார் நன்றிகூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவிய துர்க்கதிரவியம் அவர்களுக்கு அனைவரும் நன்றியறிதலைத்தெரிவித்தனர். பாலகிருஷ்ணன் பேராசிரியர் சஜிவ் ஜாண்சன் எட்வின்சாம் திருவேங்கடம் சைனிஏஞ்சல் கனகம் விமலா பபிதா ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.ஒரு வரலாற்று ஆய்வாளருடான கலந்துரையாடல் இளையதலைமுறையினருக்கு ஆய்வு சிந்தனையை ஏற்படுத்தியது.
தொகுப்பு:
காயத்திரி
ஜானிகா.

தென்புலத்தார் குழுமத்தின் தொல்லியல் பயில்வோம் குழுவில் பாலு ஐயா  பகிர்ந்தது

சனி, 8 பிப்ரவரி, 2020

கருவூரார் அருளிய தஞ்சை இராசராசேச்சரம்.

(இந்தப் பத்துப் பாடலின் பொருளறிந்தால் அதுவே மனித அல்லல் அனைத்துக்கும் அருமருந்து என்கிறார் கருவூரார்)

உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி
ஒன்றுநூ றாயிர கோடி
அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !
அங்ஙனே அழகிதோ, அரணம்
பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்
பருவரை ஞாங்கர்வெண் திங்கள்
இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.

நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா
நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்
பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்
புகுந்தன போந்தன இல்லை
மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்
றிடுபுனல் மதிகில்வாழ் முதலை
ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
குறிப்பெனோ கோங்கிணர் அனைய
குடைகெழு நிருபர் முடியடு முடிதேய்ந்து
உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)
இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்
வரிசையின் விளக்கலின் அடுத்த
சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்
சுடர்விடு மண்டலம் பொலியக்
காழகில் கமழும் மாளிகை மகளீர்
கங்குல்வாய் அங்குலி கெழும
யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்
ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவரும்மா லவனும் அறிவரும் பெருமை
அடலழல் உமிழ்தழற் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள
அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
குயிலினை மயல்செய்வ(து) அழகோ
தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்
தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்
தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்
நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்
நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னே
கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்
சூழல்மா ளிகைசுடர் வீசும்
எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து
வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்
அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்
அலர்கதிர் அனையவா ழியரோ !
பொங்கழில் திருநீறு அழிபொசி வனப்பில்
புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்
எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

தனியர்ஏத் தனைஓ ராயிர வருமாம்
தன்மையர் என்வயத் தினராம்
கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்
கட்டியர் அட்டஆர் அமிர்தர்
புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்
புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)
இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை
இராசரா சேச்சரத் திவர்க்கே.

சரளமந் தார சண்பக வகுள
சந்தன நந்தன வனத்தின்
இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழு தஞ்சை
இராசரா சேச்சரத் திவரை
அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்
அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்
பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்
பொன்நெடுங் குன்றுடை யோரே.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

எங்க கிழவன் எப்பொழுதும் கெத்து தான்



    அனைவரையும் எதிர்த்து சுதந்திர நாடாக அறிவித்தால் நாலாபுறத்திலும் இருந்து நாலே வாரத்தில் நம்மை வீழ்த்திவிடுவார்கள் என்றார்கள் ஆனால் அடுத்த நாளே #சுதந்திரநாடாக அறிவித்தவன்._

_அரண்மனை கட்டினால் அரசு திவால் ஆகும் என்றனர் அடுத்த ஆண்டே #நாயக்கர்_மஹால் விட பிரம்மாண்டமான அரண்மனையை  #கட்டியவன்._

_உன் நாட்டை பாதுக்காக முடியுமா என்று கேள்வி எழுப்பிய அடுத்த ஆண்டே ரூம்தஸ்கானிடம் சிக்கிய மதுரையை மீட்டு #நாயக்கருக்கு_பிச்சையிட்டவன்._

_நாயக்கரா என அனைத்து பாளையங்களும், மைசூரும் மிரண்டிருந்ந வேளையில் ராணி மங்கம்மாவின் படையை ஓடஓட அடித்து துறத்தி நாயக்கரை #முதல்_போரிலேயே வீழ்த்தியவன்._

_#வீர_சிங்கம் வர்ணிக்கப்படும் தன் எல்லையை திருநெல்வேலி வரை நீட்டியிருந்த #வீரசிவாஜியின் சகோதரனின் படைகளை #தோற்கடித்து அதன் பகுதிகளை ஆக்கிரமித்து தன் #ராஜ்யத்திற்குள் சேர்த்தவன்._

_சோழருக்கு பிறகு கடல்படை உருவாக்கி போரிட்டு பல தீவுகளை பாதுகாத்து #தன்னோடு வைத்திருந்தவன்._

_இந்தியா முழுதும் கப்பம் வசூலித்த டச்சு, போர்த்துக்கீசியர்களிடமே #கப்பம் வசூலித்தவன்_

_தன் சிறு ராணுவத்தை வைத்து நாயக்கர்+மராத்தியர்+68 பாளையக்காரர்ளின் கூட்டுப்படையை தோற்கடித்த #கடைசி_தமிழன பெருமன்னன்._

_இவன் ஆட்சி துவங்கும் முன் நாயக்கருக்கு கப்பம் கட்டும் #பாளையம் ஆனால் இவன் இறக்கும்போது #ஏழு_மாவட்டங்களின் பெரும்பகுதியை ஆண்டவன்._

_தெலுங்கர், கன்னடர் போரில் அவர்களுக்கு எதிராகா தமிழர் படையை களமிறக்கி திகைப்படையவைத்தவன்._

_தன் வரலாற்றில் தோல்வியே அடையாத கடைசி தமிழ் மன்னன்._

_வயதினால் அல்ல மற்றவர்களைவிட திறனில் சிறந்த மூத்தவனாக இருந்ததால் சிறுவயதிலேயே #கிழவன்(தலைவன்) என பட்டப்பெயர் பெற்றவன்._

*_அவர்தான் இரகுநாத #கிழவன்  சேதுபதி ❤_*

_பதிவு : கார்த்திகேயபாண்டியன்_✒

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மீன் வளர்பும் நீர் நிலை ஆலை கழிவுகளால் மாசடைதல்

 

     சர்க்கரை ஆலை கழிவும் மீன்களுக்கு உணவாகச் சிறிய ஏரியிலே 4 &5 லாரி போடுகின்றார்கள் இதனால் இந்த ஆலை கழிவு ஏரியின் நீரை மாசு படுத்தும் மீனை உண்ணும் மக்களுக்கும் நோய்களும் வருடாவருடம் பயன் படுத்துவதால் நிலத்தடி நீரும் பதிக்கப்படும்


     கோழி பன்னை கழிவை மீன்களுக்கு உணவாகப் போடுகின்றார்கள் இதனை உண்ணும் மீன் மற்ற மீனை விடப் பல மடங்கு வேகமாக எடை அதிகரிக்கும் காரணம் கோழிகளுக்குக் கொடுக்கப்படும் ஆண்டி பயாடிக் மற்றும் ஆர்மோம் ஊசியும் கோழியின் மலம் வழியாக வருவதை மீன்களுக்குப் போடுவதுதான் வருடாவருடம் இதனைப் போட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து விவசாயம் அழியும்

சனி, 5 அக்டோபர், 2019

கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!

கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!
June 22, 2019 No Comments

நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்!வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக குடியிருப்புகளையும்,அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு
காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர்.
2.சிஎம்டிஏ,டிடிசிபி உருவாகவில்லை என்றால் நத்தம்தான் இன்றுவரை வீட்டு மனை தேவைகளை நிறைவேற்றி கொண்டு இருக்கும்.ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.

நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள்.இன்னும் ஆழமாக கவனித்து பார்த்தால் ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் இன்றளவும் மக்களிடையே புழங்கி வருவதை காணலாம்.
கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம்நிலங்களை பிரித்து இருப்பர்
உதாரணமாக திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் பழைய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நத்தமாக வகைபடுத்தி சர்வேஎண் 625 என்றும் அதன் விஸ்தீரணம் 6ஏக்கர் என்றும் வைத்து கொள்வோம்.
மேற்படி 6ஏக்கர் பரப்பில் 50 குடும்பம் தனது வீடு , தோட்டம் வழி என 2.5ஏக்கரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீதி இருக்கிற இடங்கள் 3.5 ஏக்கர் காலியாக இருக்கும். இப்படி ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்று கூறுவார்கள் விட்டனர்.
இப்படி நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.இன்னும் மீதம் இருக்கிற இடங்கள் யார் கைபற்றிலும் இல்லாமல் காலியாகவே இருக்கும்
8.மேற்படி 625 சர்வே எண்ணில் 2.5 ஏக்கரில் 50 குடும்பங்கள் இருப்பதாக சொன்னேன் அல்லவா, அந்த 50 குடும்பங்களும் 2.5 ஏக்கர் நத்தம் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து தலா 5 சென்ட் என்று கைப்பற்றுதலில் வைத்து இருக்க மாட்டார்கள். ஒருவர் 10 சென்டுக்கும் , ஒருவர் 8 சென்ட் மற்றொருவர் 4 சென்ட் இன்னொருவர் 1 சென்டுக்கு இன்னொருவர் 2 சென்ட் என்று ஆளுக்கு ஒரு விதமாய் கைப்பற்றுதலிலும் அனுபவித்தலிலும் இருப்பார்கள்

மேற்படி 50 நபர்களும் ஆளுக்கொருவிதமாய் கிரய(விடுதலை/செட்டில்மெண்ட்
பாகபிரிவிணை) பத்திரங்கள் வைத்து வைத்திருப்பார்கள்.சில இடங்களில் கிரைய(விடுதலை/செட்டில்மெண்ட்/பாகபிரிவிணை) பத்திரங்களும் இல்லாமல் பூர்வீக அனுபவத்தில் இருப்பர்.
உங்க வீட்டுக்கு பத்திரம் இருக்கே பட்டா இல்லையா? என்று கேட்டால் இது கிராம நத்தம், பட்டா தேவையில்லை , பட்டா கிடையாது பத்திரம் மட்டும்தான் என்று எல்லாம் சொல்வார்கள்
11.. நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது.அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை.இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது.

12.மேற்படி பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது.நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும்.

13.கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சில ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு , அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.

மேற்படி அரசு கொடுத்த ஒப்படைகள் ஆவணங்கள் கிராம அ.பதிவேடுகளில் நத்தம் கணக்குகளில் இன்று வரை ஏற்றபடவே இல்லை. எல்லா ஒப்படைகளும் முன்பு சொன்னது போல்தான் ஒரே முழுபுலசர்வே எண் தான்.ஒவ்வொரு நில ஒப்படைகளின் மனை உட்பிரிவு செய்து தனி எண்கள் கொடுக்கப்படவில்லை.புலபடத்தில் உட்பிரிவு (Fmb cut) வெட்டி வரையாமலே இருக்கின்றனர்.
15.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது.

16.நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.

உதாரணமாக முன் குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கிராமத்தில் சர்வேஎண் 625 க்கு 50வீடுகள் 2.5 ஏக்கர் பரப்பில் இருந்தது என்று சொல்லி இருந்தேன்.அவை நத்தம் நிலவரி திட்டத்திற்கு பிறகு 625/1, 625 /2, 625/3, 625/4…..625/49,625/50 வரை உட்பிரிவு செய்து நத்தம் புலப்படத்தில் மேற்க்கண்ட 50 உட்பிரிவுகளை குறிப்பிட்டு நத்தம் FMB தயாரிப்பர்.
சர்வே செய்ய வரும்போது யார் யார் நத்தத்தில் அனுபவத்தில் இருந்தார்களோ அல்லது யார் கிரயப்பத்திரங்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பட்டியல் தாயாரிக்கப்பட்டு நத்தம் பதிவேடு உருவாக்கப்பட்டு அந்த மக்களுக்கு நத்தம் பட்டாவும் வழங்கப்பட்டது.
மேலும் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா என இரண்டு படி நிலையான நடைமுறைகள் நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் பின்பற்றபடுகின்றன.
நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டாவில் , பிழைகள் ,தவறுகள் விஸ்தீரண அளவுகளில் சிக்கல்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மனு செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.
21.மேலும் ஒருவர் நத்ததில் 10 சென்ட் அனுபவத்தில் இருந்தால் 10 சென்ட்டுக்கும் நத்தம் பட்டா கொடுக்கமாட்டார்கள்.3 செண்டுக்கோ அல்லது 4 செண்டுக்கோ நத்தம் தோராய பட்டா தருவார்கள்.மீதி இடத்தை அரசு இடமாக அறிவித்துவிடுவர்.அதனை ஆசேபிப்பவர்கள் அரசிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மனு செய்யலாம்.இந்த பட்டா ஒரு தற்காலிக பட்டா ஆகும்.

தோராய பட்டாவில் முழுமையாக விவரங்கள் மக்களிடம் இருந்து வந்த பிறகு தவறுகள் எல்லாம் களைந்து இறுதியான பட்டாவாக கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா ஆகும். இந்த பட்டா தாயாராகும் போதே நத்தம் தூய அடங்கல் பதிவேடும் தயாராகிவிடும்.
1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு நத்தம் FMB நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா போன்ற ஆவணங்கள் உருவாகின. இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும்ஆவணப்படுத்தபட்டன.
இதுவரை கிராம நத்தம் வரலாறு கோர்வை படுத்தி இருக்கிறேன். இனி கிராம நத்தம் நிலத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
கிராம நத்த ஆவணங்களில் FMB தூய அடங்கல் தோராய பட்டா போன்றவை இன்றுவரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.
இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப கட்ட நத்தம் நிலவரி திட்ட சர்வேக்களே செய்யாமல் இருக்கின்றனர். அதனால் நத்தம் FMB நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுகடன் வங்கிகடனுக்கு வாய்ப்பில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கினர்
மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி பட்டாவான நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா நடைமுறை அப்படியே கிடப்பில் இருக்கிறது.
மேலும் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வந்தாலும், அதில் பல தவறுகள் இருக்கிறது. உரிமையாளர் பெயர் தவறுதலாக உள்ளது. உரிமையாளர் கிரைய பத்திரம் வைத்து இருந்தும், வேறு நபர் மீது தூய பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய பட்டாவில் எங்கள் இடத்தை சேர்த்து பக்கத்து வீட்டுக்காரர் தூயபட்டாவில் ஏற்றிவிட்டார்கள். என் இடத்தை புறம்போக்கு என வகைப்படுத்தி விட்டனர். என பல குளறுபடிகள் நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா கொடுத்த சர்வேயிலும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தவறுதலாக நத்தம் பட்டாவில் பெயர் ஏறியவர் அல்லது பெயர் எறியவரின் வாரிசுகள் மேற்படி பட்டாவை வைத்து எங்களுடைய நிலம் என்று வழக்கு போடுகின்றனர். உண்மையான நில உரிமையாளர் மலங்க மலங்க முழித்துகொண்டு நீதிமன்ற வாயில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
நத்தம் நிலவரி திட்ட சர்வே நடக்காத கிராமஙக்ளில் முழு புலத்தின் உட்பிரிவு செய்யபடாத ஒரே சர்வே எண்ணை வைத்து ஒரே இடத்திற்கு வேறு வேறு நபர் பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்பட்ட்டு ஓர் இடம் இரு பத்திரங்கள் என்ற பிரச்சனையாகி இரண்டு நபரும் நீதிமன்றத்தில் மல்லுகட்டி கொண்டு இருக்கிறார்கள்.
31.நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் நிலத்துக்கான பத்திரங்கள் நில உரிமையாளர் வைத்து இருந்தாலும் புறம்போக்கு என நிலவரிதிட்ட சர்வேயில் வகைப்படுத்திவிட்டால் பட்டா இடமாக மாற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவம் இருக்கிறார்கள்.

32.பல கிராம நத்த இடத்தை அரசு இலவசமாகவோ பணம் வாங்கி கொண்டோ ஒப்படையாக வழங்கி இருக்கும்.நத்தம் சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட தனது BACK END கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

33.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா? என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா தூயபட்டாவில் உள்ளதா என பார்க்க வேண்டும்.நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்


நன்றி வாட்சப் குழு குடிமராமத்து தென்புலத்தார்