வியாழன், 13 பிப்ரவரி, 2020

இளைய தலைமுறைக்கான ஆய்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குமரிக்கண்டம் ஆய்வாளர் ஒரிசா பாலு வுடன் கலந்துரையாடல் .

பள்ளிக்கரணை சான் அக்காடமியில்
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள்-

ஸ்ரீகரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்குப்பின்னர். 8.2.2020 , அன்று காலை7.30 மணிக்கு மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் புறப்பட்டு சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும்
சான் அகாடமியை சென்றடைந்தோம்.
எங்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
அங்கு ‘தமிழ்நாட்டின் பாரம்பரியம்’ என்ற பொருளில்  எங்கள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியை ஜானிகா தொகுத்து வழங்கினார். தமிழ்தாய் வாழ்த்து நிகழ்வுக்குப்பின்னர்   இளம் விஞ்ஞானி பார்வதி குமரி அறிவியல் பேரவையின்  இவ்வாண்டு செயல்பாடுகள் குறித்து (2019-2020) தொகுத்து கூறினார்.
பள்ளியின் முதல்வர் திருமதி.சுஜாதா சரவணன் அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்.
குமரி அறிவியல் பேரவையின் நிறுவனர் முள்ளஞ்சேரி மு.வேலைய்யன் அறிமுக  உரை வழங்கி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சான் அகாடமிக்கு நன்றி கூறி,
அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்சியின் சிறப்பு விருந்தினரான ஒரிசா பாலு அவர்களைப் பற்றிய முகவுரையை ஜானிகா கூறிவிட்டு அவரை வரவேற்று பேசினார்.....
ஒரிசா பாலு அவர்கள் தனது உரையை துவங்கினார். தமிழ்நாட்டையும் தமிழர்கள் பண்டைய நாகரீகம்  பற்றியும் பல அரிய உண்மைகளை  ஆதாரங்களுடன் விளக்கினார்.
முதலில் அவர் தனது பெயருடன் தனது ரத்த வகையை சேர்த்திருப்பதன் காரணத்தை தெரிவித்தார். பல வருடங்களுக்கு
முன்னர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இரத்த வகை தெரியாத காரணத்தால், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் உயிரிழக்க நேரிட்டது. இதை உணர்ந்த பாலு அவர்கள் பின்பற்ற துவங்கியவுடன் பலர் இதை பின்பற்றினர். இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன எனக்கூறினார்.
நமது உடல் வெப்பமண்டல காலநிலையை தாங்கும்படி உள்ளது என்றும் தனக்கு மிகவும் விருப்பமான இடம் கன்னியாகுமரி என்பதை தெரிவித்தார்.
குமரிக் கடல் தற்பொழுது லட்சதீவு கடல் என்று அழைக்கப்படுகிறது.
 நாடுகளைப் பற்றி பல சுவையான செய்திகளை தெரிவித்தார்.
 ஐக்கிய நாடுகள் அமைப்பில் 197 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அறிஞர்கள் பலர் உலக நாடுகளுக்குச் சென்று தமிழை பரப்பிய காரணத்தால்
75 நாடுகளில்  தமிழ் பேசுகின்றனர் என்றார்.
நாம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுவதாக நினைத்திருக்கிறோம். ஆனால் 130 நாடுகளில் தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.
218 நாடுகளில் கடவுச்சீட்டு (Passport) பழக்கத்தில் உள்ளது.
111நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ் இமயமலை முதல் மடகஸ்கார் வரை பரவி உள்ளது.பழந்தமிழர்கள் காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர்.
இந்தியாவின் வேர் கன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள
முத்து குளிவயல் என்ற இடத்தில் தான் பண்டைய அறிவியல் அறிஞர்கள் வானிலை ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் வயது ஐந்து கோடி வருடங்களுக்கும் மேல்ஆகும்.பண்டைக்
காலங்களில் சுறா பிடிக்கும் போட்டிகள் நடந்துள்ளன.
அதில் தூத்தூர் மக்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்ற குறிப்பும் கிடைத்துள்ளது என்றார் . வால்மீகி இராமாயணத்தில் ‘மகேந்திரகிரி’
என்ற சொல் காணப்படுகிறது.
தமிழர்கள் அடிப்படை அறிவியலை நன்கு அறிந்திருந்தினர்.
உளியின்  கண்டுபிடிப்பின் மூலம் உலோகங்கள் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்ற  அங்கீகாரம் கிடைத்தது. 1863 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் இடத்தில் முதல் கல்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற பல கைகோடாரிகள் கிடைத்தன.
இதை ‘ Madras Stone Age factory’ என்றுஅழைக்கப்பட்டது.
 பல அதிசயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுதும்கூட            ஆறு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.மலைவாழ் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றார்.கோயம்பத்தூரில்
உள்ள ஆழி ஆறு கடலில் கலக்காது என தெரிவித்தார்...
 35 நாடுகளில் தமிழ் ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அத்திரப்பாக்கம் என்ற ஊர் உள்ளது ,
இங்குதான் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை ஆரம்பித்
திருக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 தொல்காப்பியத்தை கற்பதன் மூலம் பழந்தமிழ் மக்களின்வாழ்க்கை முறைகளை அறிய இயலும் என்று அறிவுறுத்தினார். 1300 தமிழ் Rock Art கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தவர்  திருப்பதியில் இருந்தும் கிடைக்கப்பட்டுள்ளது
என்றார்.
தமிழ் மக்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர். ஒரிசாவை ஆண்ட கலிங்க மன்னன் காரவேளன், தமிழ்நாட்டை போரிட்டு வெற்றிகொள்ள முடியாததால் தமிழ்நாட்டுடன் நட்பு பூண்டார் என குறிப்புகள் உள்ளன .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இவரையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு சிறு பகுதிதான்.
வைகை ஆற்றுப் படுகையில் இருந்து பெரிய கல்சிற்பங்கள் கிடைத்துள்ளது.
1000 வருடங்களுக்கு முன்னர் திருப்பூரில் வாணிக சமயம் என்ற காலம் இருந்துள்ளது. இங்கு வணிகர்கள் கடல்வழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.
கடலுக்கு அடியில் சென்றுவிட்டு திரும்பிவருபவர்கள் திரை மீளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
மீனவ மக்களே பெரும்பாலும் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்திருந்தனர்.
பழந்தமிழ் மக்கள் கப்பல் கட்டும் தொழிலிலும் கடல்வழி வணிகத்திலும் சிறந்துவிளங்கினர்.
42 மரங்களைக் கொண்டு பாய்மர கப்பல்களை உருவாக்கினர், அதில் பயன்படுத்திய கருங்காலி மரம் இடி தாங்கியாக பயன்பட்டது.
எல்லா துறைமுகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. 12,000 க்கும் அதிகமான கடல் வழிகள் இருந்தன.
 தமிழ் மக்கள்தான் முதன்முதலில் மண்பாண்டங்களை உருவாக்கினர்.
அம்மி செய்ய அறிந்திருந்தனர்.
குமரி மாவட்டம் முன்பு கௌரியன் நாடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் ஒரு வித தோடுகளை பணமாக பயன்படுத்தினர்.
குமரி கண்டம் கடல் கோளால் அழியப் பட்டதற்கு மற்றுமொரு ஆதாரம் முட்டம் பகுதியில் கடலுக்குள் காணப்படும் ஆடு மேய்ச்சான் பாறை ஆகும்.
 பண்டைக்காலத்தில் மக்கள் இப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்த்திருந்தனர்  அதனாலேயே இப்பெயர் கிடைத்தது. கலிங்கராஜபுரத்தில்            7 மீ உயரமுள்ள சிவன் கோயில் ஒன்று மண்ணில் புதையுண்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சதீவில் தாவரங்களின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன.
 முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்’  என்ற சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 12,000 தீவுகளில் 9,000 தீவுகள் கடலில் மூழ்கின என்பதாகும்  பழந் தமிழர்களின் கணக்கிடும் திறமையும்ஆச்சரியமானதுதான். 1959 - 1965 வரை 14 நாடுகள் இணைந்து நடத்திய International Indian Ocean Expedition என்ற ஆராய்ச்சி மூலம் தமிழர்கள் பற்றிய பல தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
ஒரிசா பாலு அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சென்று லெமூரியா கண்டம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்....
ராமநாதபுரம் முற்காலத்தில் முகவை என்று அழைக்கப்பட்டது.... முகவை என்ற சொல் பல நாடுகளில்காணப்படுகிறதுதமிழ்நாட்டில் உள்ள கீரை வகைகளில் ஒன்றான புளிச்சகீரை Canof என்னும் இடத்தில் தற்பொழுது காணப்படுகிறது. கேமரூன், மடகஸ்கார், பெல்ஜியம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்து கின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னரே கடன் அட்டைகளை (Debit Card) பயன்படுத்தினர்.
பாண்டியர்கள் ஏதென்ஸ் நாட்டை ஆண்டதற்கான சான்றுகள்கிடைத்துள்ளன. துருக்கியில் அதியமான் என்ற பெயருள்ள இடம் உள்ளது. பழனி என்ற பெயரில் 16 ஊர்கள் உள்ளன.வேனாடு என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஸ்ரீகரிகோட்டாவிலும் உள்ளது.
 பிலிப்பைன்சில் இன்றும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். கொரியா மக்கள் ஆதிகேசவனை வழிபடுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பண்டைக்காலத்தில் காளையை பாண்டி என அழைத்தனர். ஆமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.
கோயில்களில் ஆமைகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சென்னையில்                  திருஆமையூர் என்ற இடம் உள்ளது. உலகத்தில் மொத்தம் 1024 திசைகள் உள்ளன.தமிழ்நாட்டில்தான் அதிகமாக நீரில் மூழ்கும் பெண்கள் இருந்தனர். மணக்குடி என்னும் இடத்தில் முத்துக்கள் அதிகமாக கிடைத்தன.
தெப்பம், நங்கூரம், ஏவுகணை, நீர்மூழ்கிக்கப்பல் போன்றவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனர் தமிழர்கள் என்ற பல செய்திகளை கூறினார்.
இவற்றில் இருந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை நன்கு அறிய முடிந்தது.
எங்களில் ஜானிகா ,காயத்ரி, பார்வதி ஆகியோர்  பின்னுட்டம் வழங்கினோம். பின்னர் பொங்கல் புனிதா வாழ்த்துரை வழங்கினார்

ஒரிசா பாலு  தன்  உரை         யில் தன் பெயருக்கு பின்னால் தன் இரத்த வகையை சேர்த்திருப்பது மக்களிடையே இரத்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என கேள்விக்கு பதிலளித்தார் .
கன்யாகுமரி தனக்கு மிகவும் பிடித்த மான இடம் எனவும்.ஏனெனில் கன்யாகுமரி வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு
நீரில் மூழ்கி இருக்கும் குமரிக் கண்டத்தில் மீனின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது அதனால் மீன்வளம் அதிகம் என்று கூறினார்.
205 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது என ஐநா சபை அறிவித்துள்ளது என்றார்.மேலும் தமிழர்கள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று மிகப்பெரிய பதவிக ளை வகித்து வருகின்றனர்.
இந்தியாவின் தென்பகுதி மக்கள் வானியலில் பழங்காலத்திலேயே ஞானத்தினைப்
பெற்றுள்ளர் என்று கூறினார்.
கன்யாகுமரி தென்மேற்கு வடகிழக்கு  பருவக்காற்றால்  மழை பெறும் பகுதியாகவுள்ளது .
தமிழர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றும் கூறினார்.

நம் தலைநகரமான சென்னையில் பழங்கால நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பர்மா,சீனா,ஓமன் போன்ற நாடுகளில் அகழ்வாராய்ச்சி யில் தமிழ்  கலாச்சாரச் சுவடுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழ்மொழியில் மட்டுமே கடல்வழி பயணக் குறிப்புக்கள் இருப்பதன் மூலமாக பழங்காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வெகுதூரம் சென்று ற்றுள்ளது
 நமக்கு தெரிகிறது என்றார். தொல்காப்பியம் நூலை நாம் படிப்பதால் தமிழ் ஆராய்ச்சிக் கான அறிவினை நாம் பெறலாம் என்று கூறினார்
அதிரம்பாக்கத்தில் 1.5 மில்லியன் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழனது வீரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்
பற்றியும் விரிவாக விளக்கினார்.
மேலும் அவர் ஆங்கிலத்தை கல்வியறிவுக்காவும் தாய்மொழியாம் தமிழினை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியதாக கூறினார்.
பழந்தமிழர்கள் இரும்பு, பட்டுத் துணி, நறுமணப் பொருள் களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவந்த தகவலினையும் கூறினார்.
பாண்டிச்சேரிக்கடலில் பெரிய கடற்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது மிகவும் பழமையானதும் என்றார்.
குமரிக் கண்டத்தினை பற்றிய ஆராய்ச்சிக்கு  மீனவர்கள் பெரிதும் உதவியதாக   கூறினார்

தமிழர்கள்  பல இடங்களில் வாழ்ந்திருந்த காரணத்தால்  தமிழ் வார்த்தை கள்  பல இடங்களில் பயன் படுத்தப்படுத்தபடுகிறது.  ..
ஆமைகள் பற்றிய  அவரது ஆராய்ச்சிபற்றி.விரிவாக விளக்கம்அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை போன்று வெளிநாடுகளில் இருப்பதன் மூலம் பண்டைய தமிழரின்   இடம் பெயர்வை நாம் அறியமுடியும் என்றார்.
நம் நாட்டின் வளத்தினை கண்டே அன்னியர் படையெடுத்து வந்தனர். என்றார்.
மேலும் நம் தமிழக விளையாட்டுகள் இன்றும் வெளிநாடுகளில்  விளையாடப்பட்டு வருகிறது..என்றுரைத்தார்.
இவரது உரையின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் தமிழினத்தினைப்பற்றியும் குமரிக்கண்டத்தினைப் பற்றியும் தெளிந்த அறிவினைப் பெற்றோம்.
ஜாண்ரபிகுமார் நன்றிகூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவிய துர்க்கதிரவியம் அவர்களுக்கு அனைவரும் நன்றியறிதலைத்தெரிவித்தனர். பாலகிருஷ்ணன் பேராசிரியர் சஜிவ் ஜாண்சன் எட்வின்சாம் திருவேங்கடம் சைனிஏஞ்சல் கனகம் விமலா பபிதா ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.ஒரு வரலாற்று ஆய்வாளருடான கலந்துரையாடல் இளையதலைமுறையினருக்கு ஆய்வு சிந்தனையை ஏற்படுத்தியது.
தொகுப்பு:
காயத்திரி
ஜானிகா.

தென்புலத்தார் குழுமத்தின் தொல்லியல் பயில்வோம் குழுவில் பாலு ஐயா  பகிர்ந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக