மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால் பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுது போல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 சாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உஷ்ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.
இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோக சாதனையை செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 8903635949, 04258-226495
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக