வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழ் மாமன்னர்களின் வெற்றி

கண்ணகிக்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க

பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிரங்கி, யானைமீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து

கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் சேரன் செங்குட்டுவனை நான் கண்டதில்லை.

* மௌரிய மன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் இளஞ்சேட் சென்னியை கண்டதில்லை

* குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியை பதிந்த, கடாரம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை கண்டதில்லை.

*பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் பெருஞ்சோற்றுதியனை கண்டதில்லை

*நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி சோழனை கண்டதில்லை

*சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு

எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் கரிகால் பெருவளத்தானை கண்டதில்லை

* கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய நெடுஞ்சேரலாதனை கண்டதில்லை

* புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மனை கண்டதில்லை...

* நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை (63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை

* இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் நரசிம்ம பல்லவனை கண்டதில்லை

*இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் விஜயாலய சோழனை கண்டதில்லை

* காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட மாமன்னன் இராசராசனை கண்டதில்லை.

* தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த பழுவேட்டரையரை கண்டதில்லை
* 12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை மிஞ்சிய வீரமகன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய இராசேந்திர சோழனை கண்டதில்லை.

சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய குலோத்துங்க சோழனை கண்டதில்லை

பிற்கால பாண்டியர்கள் நெல்லூரில் வெற்றி மாமுடியும் வீரமாமுடியும் சூடிய சுந்தரபாண்டியனை கண்டிருக்கவில்லை

மார்க்கோ போலோ வியந்த குலசேகர பாண்டியனை கண்டிருக்கவில்லை இன்னும் பலர் உண்டு

ஆனால் இவர்களை இவர்களின் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை ஒருங்கே கொண்ட எம் தலைவன் பிரபாகரனை, அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.

காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் கரிகால் பெருவளத்தான்.

தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.

இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

 வரலாறென படிக்கும் எம் குழந்தைகள் இந்த மாவீரர்களின் வெற்றிக்கதைகளை படிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக