வியாழன், 7 அக்டோபர், 2021

தமிழில் அரபுச் சொற்கள்

அசல்   أصل மூலம்

மாஜிماضي  முந்தைய

அத்து حد வரம்பு

முகாம்مقام  தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம்ملام  மேற்பூச்சு

அமுல் عمل  நடைமுறை

ரத்துرد  விலக்கு/நீக்கம்

அனாமத்أنعمت கேட்பாரற்ற

ரசீதுرصيد  ஒப்புப் படிவம்

அல்வாحلوه  இனிப்பு

ராஜிراضي  உடன்பாடு

ஆஜர்حاظر  வருகை

ருஜுرجوع  உறுதிப்பாடு

ஆபத்துآفت  துன்பம்

ருமால்رمال  கைக்குட்டை

இனாம்انعام  நன்கொடை

லாயக்لائق  தகுதி

இலாகாعلاقة  துறை

வக்கீல்وكيل  வழக்குரைஞர்

கஜானாخزانة  கருவூலம்

வக்காலத்துوكالة  பரிந்துரை

காலிخالي  வெற்றிடம்

வகையறாوغيره  முதலான

காய்தாقاعدة  

தலைமை/வரம்பு  

வசூல்وصول  திரட்டு

காஜிقاضي  நீதிபதி

வாய்தாوعده  தவணை

கைதிقيد  சிறையாளி

வாரிசுوارث  உரியவர்

சவால்سوال  

அறைகூவல்/கேள்வி  

சர்பத்شربة குளிர்பானம்

ஜாமீன்ضمان  பிணை

சரத்துشرط  நிபந்தனை

ஜில்லாضلعة  மாவட்டம்

தகராறு تكرار வம்பு

தாவாدعوة  வழக்கு

திவான்ديوان  அமைச்சர்

பதில்بدل  மறுமொழி

பாக்கிباقي  நிலுவை

மஹால்محل  மாளிகை

ஜமாபந்தி ஒன்றுகூடல்

ஃபிர்கா அலகு

மகசூல்محصول  அறுவடை

மாமூல்معمول  வழக்கம்

கீரனூர் அருகே 2000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு.

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களுக்கு இடையே இரும்பு காலத்தை சேர்ந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இரும்பு உருக்கு உலைகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இரும்பு உருக்கு உலைகள்

இது குறித்து கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-

பெரியமூளிப்பட்டி கிராமத்திலிருந்து விளாப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பழமையான பானை ஓடுகள் குமியலாக காணப்படுகின்றன. அதனை ஒட்டி மண்ணில் புதைந்த வண்ணம் சுடுமண்ணால் செய்யப்பட்ட பழமையான இரும்பு உருக்கு உலைகள் இருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.


சிதைவுற்ற நிலையில் உலை

சேதமடைந்த நிலையில், மண்ணில் புதைந்த வண்ணம் ஐந்திற்கும் மேற்பட்ட உலை அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த உலைகளை சுற்றிலும் பல்வேறு இரும்பு கழிவுகள் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்த கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக உருக்கப்பட்ட இரும்பு கட்டிகளாக வார்க்க பட்டதற்கு அடையாளமாக உடைந்த இரும்பு கட்டிகள் இங்கு கிடைக்கின்றன.


இரும்பு துண்டுகள்

மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழில் தொடர்ந்து நடைபெற்றதற்கு அடையாளமாக, ஆலங்க்குடி தாலுகா பொற்பனைக்கோட்டையில் கிடைத்தது போல பத்திற்கும் மேற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல் துருத்திகள் உலையினை சுற்றிலும் காணப்படுகின்றன. முக்கிய அம்சமாக அவை முதுமக்கள் தாழிகளை போல உட்புறமாக செம்மண் மற்றும் வெளிபுறம் களிமண் என இரட்டை அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன.


சுடுமண் ஊதுகுழல்கள்

பொதுவாக இரும்பு உருக்குதல் என்பது அதிக வெப்பநிலையில், கிட்டத்தட்ட 2000 டிகிரி செல்சியஸில் நிகழ கூடிய செயல்முறையாகும். இந்த அதிகபட்ச வெப்பநிலையை நிலைநிறுத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைகள் மற்றும் துரித்திகளை பயன்படுத்தி இங்கு இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் சுண்ணாம்பு தாது படிவுகள் அதிக அளவில் கிடைக்கிறது. இரும்பு உருக்கு முறைகளில் கழிவுகளை நீக்க சுண்ணாம்பு முக்கிய பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

உலைகளினை சுற்றிலும் பலவகை பானை ஓடுகள் குவியல்களாக காணப்படுகின்றன. குறிப்பாக பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மெல்லிய கருப்பு நிற பானை ஓடுகள் இங்கு கிடைக்கப் பெறுகிறது. அவற்றில் முக்கிய அம்சமாக வெளிப்புறம் வளவளப்பான மேற்பூச்சு கொண்ட பானை ஓடுகளும் இவ்விடத்தில் கிடைக்கப் பெறுகின்றன.


பானை ஓடுகள்

இந்த பானை ஓடுகள் பல்வேறு அளவுகளில் பயன்பாட்டிலிருந்த மண்பாண்டங்களின் எச்சங்களாக அமைந்துள்ளன. மேலும் பண்டைய காலங்களில் திண்ணை விளையாட்டுகளில் பயன்படுத்தும் சுடுமண் சில்லுகளும் இங்கு காணப்படுகிறது.

விளாப்பட்டிக்கு அருகில் ஆதனப்பட்டி கிராமத்தில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குத்துக்கற்களுடன் கூடிய முதுமக்கள் நினைவுசின்னங்கள் அமைந்துள்ளன. அங்கு காணப்படும் பானை ஓடுகளை போன்றே இந்த இரும்பு உருக்கு உலைகளை சுற்றி கிடைக்கபெறும் பானை ஓடுகளும்  அமைந்துள்ளன. ஆகவே இந்த இரும்பு உருக்கு உலைகளும் அதே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

ஆதனபட்டி நீத்தார் நினைவு சின்னங்கள்


மண்ணரிப்பு மற்றும் மனித செயல்பாடுகள் காரணமாக பழமையான இந்த உலை அமைப்புகள் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. எனவே இங்கு கிடைக்கும் உலை மிச்சங்கள், சுடுமண் ஊதுகுழல் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்து அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


இரும்பு உலை பொருட்கள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

*********************************

வணக்கத்துடன்,

பா. முருகபிரசாத், 

கால்நடை ஆய்வாளர்,


நா. நாராயணமூர்த்தி,

உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்),


மு. ராகுல்பிரசாத்,

இளங்கலை (விலங்கியல்) மாணவர்,


கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம்.


#பகிர்வு 


#புதுக்கோட்டைநம்மஊரு

புதன், 29 செப்டம்பர், 2021

கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா.

 

இது தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.


கவரிமான் எங்கு வசிக்கிறது?. முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?. எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”

என்கிறார் திருவள்ளுவர் (969-ஆம் குறள்)

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானமிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.


ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே?. குழப்பமாக இருக்கிறது அல்லவா?. அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது 'கவரி மான்' அல்ல. கவரிமா.


புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது.

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்". 

இமயமலைப் பகுதியில் கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள். 


இந்த கவரிமா குறித்து பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன. முடி, சடை போல தொங்கக் கூடிய விலங்கு தான் கவரிமா. இந்த முடியை வெட்டியெடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். 'கவரி' என்பதில் இருந்துதான் 'சவரி முடி' என்ற இன்றைய சொல் உருவானது. 'மா' என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.


சரி... இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?. பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். 


அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,

அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை. ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஜெயகாந்த் கருத்து #தமிழர் என்றால் ஏன் எரிகிறது?



உண்மையிலேயே ‘தமிழ் களஞ்சியம்’,’திராவிட களஞ்சியம்’ சர்ச்சை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கள யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணம்.


இந்த சர்ச்சை தொடங்கும்போதே தெரியும் திராவிட சார்பாளர்களின் வாதங்கள் எப்படி அமையும் என்பது. 


வழமைபோல தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம் என திரிபடைந்த விதம், திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரர் அழைத்தது, அயோத்திதாசர் அந்த பெயரில் பத்திரிகை நடத்தியது என சுற்றி சுற்றி வருவார்கள் என்பது எதிர்ப்பார்த்ததுதான்.


இந்த வரலாற்று நிகழ்வையெல்லாம் நான் மறுக்கவில்லை. 


ஆனால் திராவிட சார்பாளர்கள் ‘வேண்டுமென்றே’ இதில் இருக்கும் ஒரு விடயத்தை ஒளிக்க முயல்கிறார்கள்.


• #ஒளிக்க முயலும் விடயம்


திராவிட சார்பாளர்கள் மேலே சொன்ன வரலாற்று உதாரணங்கள் எல்லாமே நடந்தவைதான்.


#ஆனால் அது பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை குறிப்பதற்காக பயன்படுத்திய சொல்லாடல்கள்.நாம் ‘நம்மை’ அழைக்க பயன்படுத்திய பெயர் அல்ல என்பதுதான் அந்த ஒளிக்க முயலும் விடயம்.


• #திராவிட சார்பாளர்களுக்கு உதவ கூடிய இன்னும் சில வரலாற்று உதாரணங்களை தருகிறேன். 


“அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.  


இக் கல்வெட்டின் 13 வது வரியில்  113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது.


இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. 


அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. 


இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும்.  


`தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். 


அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.


லலிதாவசுத்திர ` Lalitavistara` ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது.  


இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும்.


ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த  சமயவங்கா (“Samavayanga Sutta” )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை.   


அதில்  `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். 


மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன.


(வி.இ.குகநாதன் எழுதிய ‘திராவிடம்` என்றால் என்ன? எனும் கட்டுரையிலிருந்து)


மேலேயுள்ள பந்தி விவரிக்கும் வரலாற்று உதாரணங்களும் தமிழை, தமிழரை குறிக்க பிறமொழியாளர்கள் பயன்படுத்திய சொல்லாடலாகதான் ‘த்மிர’ (Dramira), கிரேக்கர்கள் பயன்படுத்திய ‘Damirica’, லலிதாவசுத்திர குறிப்பிடும் ‘திராவிட லிபி’( Dravidalipi ), சமயவங்கா என்ற சமண நூல் குறிப்பிடும் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) என்பவை வருகின்றன.


ஆக `தமிழ்` என்ற சொல்லை உச்சரிக்க முடியாத பிற மொழியிலாளர்கள் த்மிர,திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருக்கிறார்கள்.


• #இனி நம்முன் உள்ள கேள்வி


பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை உச்சரிக்க முடியாமல் பயன்படுத்திய சொற்கள் என் இனத்திற்கான பெயராக மாறுமா அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழராகிய நாம் நம்மை அழைக்க பயன்படுத்திய சொல் நமக்கான பெயராக மாறுமா? 


இன்னும் எளிமையாக உங்களுக்கு புரியவைக்க வேண்டுமானால், ஒரு வேடிக்கையான உதாரணத்தை தருகிறேன்.


இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை வெள்ளைக்கார வர்ணணையாளர்கள் ‘முட்றையா முட்டளிடரன்’ என்றுதான் அழைப்பார்கள். காரணம் ஆங்கிலம் பேசும் வெள்ளைக்கார வர்ணணையாளர்களுக்கு இருந்த உச்சரிப்பு சிக்கல்.


இப்பொழுது திராவிட சார்பாளர்களின் வாதத்தின்படி இதை அணுகுவோம்.


‘முட்றையா முட்டளிடரன்’ எனும் சொல்லாடலும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது. 


‘முத்தையா முரளிதரன்’ எனும் பெயரும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது.


அதனால் நாம் ‘முட்றையா முட்டளிடரன்’ என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என்பதாக இருக்கிறது.


• #திராவிட சார்பாளர்கள் இது அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமல் செய்கிறார்களா?


இது தெரிந்தே, வேண்டுமென்றே நுண்ணரசியல் நோக்குடன் செய்யப்படும் காய் நகர்த்தல்.


இன்னும் உடைத்து சொன்னால், ‘மேலேயுள்ள வரலாற்று உதாரணங்களை’ எல்லாம் சொல்லி தமிழரை ‘திராவிடர்’ என அழைப்பதுதான் சரி என வாதிடுபவர்களில் 80% பிறமொழியினராக இருக்கிறார்கள். தங்களின் பெயரை தூய தமிழில் வைத்திருப்பார்கள். ஆனால் அதை முகமூடியாக வைத்துக்கொண்டு இந்த நுண்ணரசியலை செய்கிறார்கள். மீதியுள்ள 20% தமிழர்கள்தான். ஆனால் இவர்கள் இந்த வரலாற்று உதாரணங்களில் உள்ள சாமர்த்தியமான வாதத்தை நம்பி ஏமாந்தவர்கள், அதிகார,பண ஆதாயத்திற்காக கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் என்பதாக இருக்கும்.


ஆனால் தமிழர்களில் 80% கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள் ‘நாங்கள் தமிழர்’, ‘எமது மொழி தமிழ் மொழி’ என்று.


காரணம் இந்த உணர்வு உளப்பூர்வமாக வருவது.


சங்ககால இலக்கியங்களை ‘திராவிட களஞ்சியம்’ என சொல்லும்போது எங்கோ இலங்கையில் பிறந்து,வளர்ந்த எனக்கு ஏன் பொத்து கொண்டு கோபம் வருகிறது? 


காரணம் இந்த சங்ககால இலக்கியம் என்னுடையது.என் இனத்தினுடையது.இது எனது பெருமிதம்.எனது தாய் மொழியின் செழுமையை,வளமையை கூறுவது.எனது வரலாற்று சொத்து. இதுதான் அந்த உளப்பூர்வமான உணர்வு.


• #இது ஒரு அவலம்


உலகமெங்கும் பரந்து வாழும் சில பத்து லட்சம் மக்களையே கொண்ட எங்களுக்கு எங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளமுடிகிறது.


தமிழின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளவே திணற வேண்டியிருக்கிறது.

இது ஒரு பெரும் அவலம்.


க.ஜெயகாந்த்

புதன், 18 ஆகஸ்ட், 2021

பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

 பாண்டியரும் ராவணனும்


ராவணனின் காலத்தில் பாண்டிய மன்னன் வலிமையாக இருந்தமையால் அவனோடு போரிட்டு வெல்ல முடியாத ராவணன் அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டான் என்று அவர்களுடைய தளவாய்புரச் செப்பேடு கூறுகிறது. 


தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர்

படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும்


என்று ராவணனோடு சந்து செய்தியையும் மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு எதிராகப் படைசெலுத்தியமையும் கூறப்பெறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் திடீரென்று வந்துவிடவில்லை. காளிதாஸன் தன்னுடைய ரகுவம்சத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.


அஸ்த்ரம் ஹராதா³ப்தவதா து³ராபம் 

யேன இந்த்³ரலோகாவஜயாய த்³ருப்த꞉ .

புரா ஜனஸ்தா²னவிமர்த³ஶங்கீ 

ஸந்தா⁴ய லங்காதி⁴பதி꞉ ப்ரதஸ்தே² . . 6.62 . .


எவரும் வெல்லவொண்ணாத ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பாண்டிய வேந்தன் சிவபெருமானிடமிருந்து பெற்றவன் என்பதனால் ஜனஸ்தானத்தை அழித்து விடுவானோ என்றஞ்சி பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

சனி, 24 ஜூலை, 2021

சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கையின் வணிகம்

 செல்வமலி  தமிழ் நாடு -2 


உள்  நாட்டு வணிகம் ! 


ஒரு நாட்டின்‌ வரலாறு  அந்நாட்டை அரசாண்ட மன்னர்களுடைய 

 வரலாறு மட்டும்‌ அன்று, அந்நாட்டில்‌ வாழ்ந்த 

குடிமக்களின்‌ வாழ்க்கை சமூக  வரலாறும்‌ சேர்ந்ததே. உண்மையான வரலாறு ஆகும் . 


சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கை 

வரலாற்றில்‌ ஓரு பகுதி வாணிகத்தைச்‌ சார்ந்தது.நெய்தல் தினை வணிகம் பற்றியதே .அவர்களே நெடு நாட்கள் கடற்கரையில் ,கடலுக்கு அண்மையில் வாழ்ந்தார்கள் 


தென்னாடு அதிக பரப்பு மூன்று திக்கும் கடலால் சூழப்பட்டது அதில் நெய்தல் தினை என்னும் கடலின் அருகில் வாழ்ந்த மக்கள் .கடலின் தன்மையை அருகில் இருந்து நெடு நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர் .. கடலுடன் நெருங்கி இருந்ததால் கடலிடத்தில் இருந்த அச்சன் சிறுக சிறுக அவர்களிடம் இருந்து விலகியது .


கடலுடன் நட்பு  கொண்டார்கள் .அதை அன்பாக நோக்கினார்கள் .கடலும் அவர்களிடம் காதல் பூண்டது 


சிறுக சிறுக  தைரியம் கொண்டு முதலில் கரையோரம் சென்று பார்த்தனர் .பிறகு ஆழ்கடல்கடந்து  சென்று பல நாடுகளைக்கண்டு திரை மீளர்கள் ஆனார்கள் .


அவர்களே பெரு வணிகர்களாகவும் கடல் கடந்த தொடர்பால் ஆயினர் . இதுவே மிக சுருக்கமான நெய்தல் வரலாறு .


அந்தப்‌ பழங்கால வாணிகத்துக்கும்‌ இக்காலத்து 

விஞ்ஞான உலக வாணிகத்துக்கும்‌ பெருத்த வேறுபாடுகள்‌ 

உள்ளன. ஆனால்‌, அந்தப்‌ பழங்காலத்தவர்‌, அக்காலத்து 

 சூழ்நிலைகளுக்கும்‌ தக்கபடித்‌ 

கரை வாணிகத்தையும்‌ கடல்‌ வாணிகத்தையும்‌ நடத்தினார்‌கள்‌. 


அவர்கள்‌ கூட்டாகச்‌ சேர்ந்து “சாத்து அமைத்துப்‌ 

பெரிய வாணிகத்தை நடத்தினார்கள்‌.

 தரை வாணிகஞ்செய்த வாணிகத்‌ தலைவர்‌ மாசாத்துவர்‌ என்று பெயர்‌ பெற்‌ றனர்‌. கடல்‌ வாணிகத்‌ தலைவா்‌ மாதாய்கர்‌ (மாநாவிகர்‌) 

என்று பெயர்‌ கூறப்பட்டனர்‌. அக்காலத்‌ தமிழகத்திலே பல மாசாத்துவர்களும்‌ பல மாநாய்கார்களும்‌ இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள் .


சங்ககாலத்துத்‌ தமிழரசர்கள்‌ முதலாக அண்மைய மன்னர்கள் வரை  தங்களுடைய நாடுகளில்‌ 

வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள்‌; 

அவர்கள்‌ தங்களுடைய நாடுகளில்‌ வாணிகக்‌ கப்பல்கள்‌ 

வந்துபோகவும்‌ ஏற்றுமதி இறக்குமதி செய்யவும்‌ துறைமுகப்‌ பட்டினங்களை அமைத்தார்கள்‌.

 

இராக்காலத்தில்‌  இருளில் கடலில்‌ 

வருகிற கப்பல்கள்‌ திசை தப்பிப்‌ போகாமலும்‌, துறைமுகத்‌ தை அடையாளப்படுத்திக் காட்டவும்‌ கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள்‌. 


துறைமுகங்களில்‌ உள்ள வாணிகப்‌ பொருள்கள்‌ களவு 

போகாதபடி தாக்கல் காவல்‌ வைத்தனர்‌. வாணிகஞ்‌ செய்து பெரும்‌பொருள்‌ ஈட்டின வணிகப்‌ பெருமக்களுக்கு “எட்டி” என்னும்‌ 

சிறப்புப்‌ பெயரும்‌, “எட்டிப்பூ' என்னும்‌ பொற்‌ பதக்கத்‌தை யும்‌ அளித்துச்‌ சிறப்பினைச்‌ செய்தார்கள்‌


.அப்படி எட்டிப்பாட்டம் வாங்கியர்களே செட்டிகள் ஆனார்கள் .


 தரை வாணிகமும்‌ கடல்‌ வாணிகமும்‌ பெருகவே, அவற்றைச்‌ சார்ந்து 

பயிர்தொழில்‌ வளர்ச்சியும்‌ கைத்தொழில்‌ வளர்ச்சியும்‌ 

பெருகிப்‌ பொருள்‌ உற்பத்தி அதிகப்பட்டது. 

பொருள்‌களின்‌ உற்பத்தியினாலும்‌ வாணிகத்தினாலும்‌ பொருளா தாரம்‌ உயர்ந்து நாடு செழித்து மக்கள்‌ நல்வாழ்வு வாழ்ந்‌ தாரர்கள்‌. நாட்டு மக்களின்‌ நல்வாழ்வுக்கும்‌ நாகரிக வாழ்க்‌ கைக்கும்‌ கலைகள் வளர்ச்சிக்கும் ,கோயில்கள் பெருகவும் வாணிகம்‌ முக்கிய காரணமாக இருந்தது. 


 பண்டைய நாட்களில் கொற்கை, தொண்டி, பூம்புகார்‌, சோபட்டினம்‌ மாமல்ல புரம் அரிக்க  மேடு  முதலான தமிழ்‌ நாட்டுத்‌ துறைமுகப்‌ பட்டினங்களிலிருந்து 

நாவாய்களில்‌ புறப்பட்டுச்‌ சென்ற தமிழ வாணிகர்‌ கிழக்குக்‌ கடல்‌ ஓரமாகவே நாவாய்களைச்‌ செலுத்தி 


நெல்லூர்‌, கலிங்கப்‌ பட்டினம்‌, தம்ரலிப்தி (வங்காள தேசத்‌ துறைமுகப்‌ பட்டினம்‌) முதலான பட்டினங்களுக்குச்‌ சென்றனர்‌. .

பிறகு கங்கையாறு கடலில்‌ .கலக்கிற வாங்க புகர்‌ முகத்தின்‌ ஊடே கங்கையாற்றில்‌ நுழைந்து கங்கைக்‌ கரையில்‌ இருந்த பாடலிபுரம்‌ , 

காசி (வாரணாசி) முதலான அவர்களில்‌ வாணிகஞ்‌ செய்து பெரும் பொருள் ஈட்டினார்கள் .

 

“கங்கை வங்கம்‌ போகுவர்‌ கொல்லோ, 

என்று நற்றிணை (/89:5) கூறுகிறது. 


கங்கைக்‌ கரையில்‌ 

பாடலிபுரத்தில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த போது, கி மு . 

4 ஆம்‌ நூற்றாண்டில்‌ மகத நாட்டையரசாண்ட நந்த 

அரசர்‌, தங்கஞ்டைய தலைநகரமான பாடலிபுரத்தில்‌ கங்கை யாற்றின்‌ கீழே பெருஞ்‌ செல்வத்தைப்‌ புகைத்து வைத்திருந்‌ குதைப்‌ பற்றி  அவர்கள் அறிந்தனர்‌. 


அப்போதைய தமிழ் வணிகர்கள் இந்த நாட்டின் பரந்த பரப்பில் எங்கும் பரவி வணிகம் செய்தனர் .அங்கு நிலவும் செய்திகள் அனைத்தையும் அறிந்திருந்தனர் 

 தமிழக வாணிகரின்‌ மூலமாக நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைத்‌. தமிழ்‌ நாட்டவர்‌ ௮க்‌ காலத்தில்‌ அறிந்திருந்தார்கள்‌. 

மாமூலனார்‌ என்னும்‌ சங்கப்‌ புலவர்‌ தம்முடைய செய்யுளில்‌. நந்தருடைய நிதியைக்‌ கூறுகிறார் 


“பல்புகம்‌ நிறைந்த வெல்போர்‌ நந்தர்‌ 


சீர்மிகு பாடலிக்‌ குழீஇக்‌ கங்கை 


நீர்முகற்‌ கரந்த நிதியங்‌ கொல்லோ ” 


(அகம்‌, 265: 4-6) 


நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைப்‌ பற்றிய இந்தச்‌ செய்‌தியை இந்தச்‌ செய்யுளில்‌ இருந்து அறிகிறோம்‌, வடநாட்டுப்‌பழைய நூல்களில்‌ இந்தச்‌ செய்தி கூறப்படவில்லை,கங்கைக்கரை புதையலைப்பற்றி தமிழ் இலக்கியம் மட்டுமே பேசுகிறது .  


தமிழ வாணிகர்‌ கலிங்க நாட்டிலே போய்‌ வாணிகஞ்‌ 

செய்தார்கள்‌. அந்த வாணிகச்‌ சாத்து கி மு .மூன்று 

நூற்றாண்டிலிருந்து கி .மு., 750 வரையில்‌ நூற்றைம்பது 

ஆண்டுகள்‌ அங்குக்‌ தங்கி வாணிகம்‌ செய்தது. அவர்களு 

டைய வாணிகம்‌ நாளுக்கு நாள்‌ பெருகிச்‌ செல்வாக்கும்‌ 

பலமும்‌ அடைந்தது. 

அக்காலத்தில்‌ கலிங்க தேசத்தை 

யரசாண்ட காரவேலன்‌ என்னும்‌ அரசன்‌ குமிழ வாணிகரால்‌ 

தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும்‌ என்று அஞ்சி 

அந்த வாணிகச்‌ சாத்து அழித்து விட்டான்‌. 


அந்தச்‌ செய்தியை அவ்வர௪ன்‌ எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக்‌ 

கல்வெட்டெழுத்துச்‌ சாசனத்திலிருந்து அறிகிறோம்‌. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டமுக்கிய  கல்வெட்டு இது  ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது.


 பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது


அதில் உள்ள மிக முக்கிய செய்தி இது ஆகும் 


 எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். 


யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார் இதில் ஆவா அரசர்கள் யார் என்று தெரியவில்லை 


பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் அல்லது 130 ஆண்டுகளாக  தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.என்று பெருமை  கொள்கிறது .


அத்தைய தமிர  சங்காத்தம் எனும் கூட்டணி தமிழ் வணிகர்களின் கூட்டணியாக இருக்கவே சாத்தியம்  உண்டு .


கலிங்கதேசத்தில்‌ வாணிகஞ்‌ செய்த தமிழர்‌ கலிங்க நாட்டுப்‌ பொருள்களைத்‌ தமிழகத்துக்கும்‌ தமிழகத்துப்‌ சாத்துகளைக் 

கலிங்க .நாட்டுக்கும்‌ கொண்டு போய்‌ விற்றார்கள்‌. 

கலிங்கநாட்டிலிருந்து தமிழ்‌ நாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்ட முக்‌ யமான பொருள்‌ பருத்தித்‌ துணி. பெருவாரியாகக்‌ . சுலிங்கத்‌ துணி தமிழ்‌ நாட்டில்‌ இறக்குமதியாயிற்று. 


கலிங்‌கத்திலிருந்து வந்தபடியால்‌ அத்துணி கலிங்கத்‌ துணி என்‌.று சிறப்பாகப்‌ பெயர்‌ பெற்றது.

 

பிறகு காலப்போக்கில்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ பெயர்‌ துணிகளுக்குப்‌ பொதுப்‌ பெயராக வழங்கப்‌ பட்டது. 


சங்க நூல்களில்‌ துணிக்குப்‌ பெயராகக்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ சொல்‌ வழங்கப்பட்டிருக்கிறது. 


கலிங்க நாட்டு.லிருந்து அக்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள்‌ சந்தனக்‌ கல்‌. “


வடவர்‌ தந்த வான்‌ கேழ்‌ வட்டம்‌.' என்று கொண்டாடப்பட்டிருக்கிறது .


இப்போதைய ஆந்திர நாட்டிலே பேர்‌ போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்‌) சங்க காலத்திலே தமிழ்‌ வாணிகர்‌ சென்று வாணிகஞ்‌ செய்தனர்‌. 


அங்கிருந்த அமராவதி பெளத்தக்‌ 

தூபி இ.மு. 200 இல்‌ தொடங்கி கி.பி. 200 வரையில்‌ 

கட்டப்பட்டது. 


அந்தக்‌ கட்டிடத்தைக்‌ கட்டுவதற்குப்‌ பலர்‌ 

பல வகையில்‌ உதவி செய்தார்கள்‌. 

அப்போது அங்குவாணிகஞ்‌ செய்து கொண்டிருந்த தமிழ்‌ வாணிகரும்‌ அக்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கு உதவி செய்தனர்‌. 

தமிள (தமிழ)கண்ணன்‌ என்னும்‌ வாணிகனும்‌ அவனுடைய தம்பியாகிய 

இளங்கண்ணனும்‌ அவர்களுடைய தங்கையாகிய நாகையும்‌ 

அமராவதி தூபி கட்டுவதற்கருக்‌ கைங்கரியம்‌ செய்துள்ளனர்‌ . 


கண்ணன் என்ற பெயர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்து இப்போது வரை தொடர்ந்து தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது . இதுவே தமிழின் சீரிளமைக்கு ஒரு சான்றாகும் .


இந்தச்‌ செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல்‌ சாசனத்தினால்‌ 

தெரிகிறது. 8$ அடி உயரமும்‌ 8 அடி. 8 அங்குல அகலமும்‌ 

உள்ள ஒரு கல்லில்‌ பிரஈமி எழுத்தினால்‌ எழுதப்பட்ட ஒரு சாசனம்‌ இதைக்‌ கூறுகிறது. 


இப்போது இந்தக்‌ கல்வெட்டு  இங்கிலாந்து நாட்டிற்குக்  கொண்டு போகப்பட்டு அங்கு இலண்‌டன்‌ மாநகரத்துக்‌ காட்சி சாலையில்‌ வைக்கப்பட்டிருக்கிறது. 


இதனாலும்‌ கலிங்க நாட்டில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த செய்தி அறியப்படுகிறது.” 


 இவாறெல்லாம் பரந்த பாரதமெங்கும் பரவி  உள்  நாட்டு வணிகம் செய்த  அந்த இனம் எங்கே போனது  ? என்றால் அதுவே இப்போது உள்நாட்டு மீனவர் அல்லது செம்படவர் எனும் சிவன் படையினராக மிஞ்சி இருக்கிறார்கள் .


நெடுங்கடல் தாண்டி இங்குவணிகம் செய்யவந்த பிறகு நம்மை ஆண்டவர்கள்  ஆன  அயல் நாட்டவர் அனைவரும் தங்களின் முக்கிய எதிரியாக இங்கு நினைத்தது இங்கு வாழ்ந்த சிறந்த மாலுமிகளான தொல் தமிழ் நெய்தல் நிலத்தவரை  மட்டுமே அவர்களின் திறமை க்குறித்து அஞ்சினர் .அவர்களை அழித்தால் இன்றி தங்கள் வணிகம் வளராது என்று புரிந்திருந்தனர் .

.அது மூர்கள் எனும் முகமதியர் முதல் அத்தனை ஐரோப்பியர்களுக்கு பொருந்தும் 


.அவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு நசுக்கப்பட்ட அவர்கள் பலவாறு  சிதறினர் பல்வேறு வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டனர் 


.அப்படியும் தைரியமாக தங்களை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்கள் இப்போதைய உள் நா ட்டு மீனவர்கள்  இதுவே கடற்கரை ஓரம் வாழும் மீனவர்களுக்கும் பொருந்தும் .இப்போது உள்நாட்டு வணிகத்தைப்பற்றிக்கூறுவதால் உள்நாட்டு பரதவரைக் க்குறிப்பிடுகிறேன்  கடல்பரதவரை ப்பற்றி முழுக்க முழுக்க பின்னல் வருகிறது .


உள்நாட்டு பரதவரில்  செட்டிகள் உண்டு மணியக்காரர் உண்டு ,நா ட்டார்கள் உண்டு நாயக்கர்கள் உண்டு .

அவர்கள் பொதுவாக இப்போது சிவன்படையினர்  என்றும் பர்வத ராஜகுலம் என்றும் இப்போது அ டையாளப்படுத்தப்படுகிறார்கள் .


இதைபற்றி  சொன்னால் பெரிய கதை நீளும் இப்போதைக்கு இதை மட்டும்  இப்போது குறிப்பிட்டு தமிழ் நட்டு வணிக வரலாற்றிற்கு திரும்புவோம் .அடுத்து தொல்  தமிழ் நாட்டின் துறைமுகங்கள் பற்றி காண்போம் .


அண்ணாமலை சுகுமாரன் 23/7/2021

சனி, 10 ஜூலை, 2021

துபாய்கு ஏற்றுமதி

 50 வகையாக   சர்வதேச  இயற்கை வேளாண்மை  சான்றிதழ் பெற்ற பொருட்கள்   துபாய்க்கு தொடர்ந்து  ஏற்றுமதி செய்து வருகிறோம்..


இயற்கை வேளாண்மை செய்யும் உழவர் கள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு தெரிய படுத்தவும். அவர் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்.


 நன்றி  நம்மண் 


தொடர்புக்கு : 

 

info@nammann.com,

nammannorganic@gmail.com,

www.nammann.com

Whatsapp : +919092098811,  9787305169


நன்றி.