சனி, 5 அக்டோபர், 2019

கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!

கிராம நத்தத்தை பற்றி புரியாமல் அவதிப்படும் இளையதலைமுறையினர்களுக்கான விளக்கங்கள்!
June 22, 2019 No Comments

நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது.அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான் வீட்டு மனைகள்!வெள்ளையர்கள் தமிழகத்தை ஒட்டு மொத்தமாக சர்வே செய்து நிலத்தை வகைபடுத்தும்போது பயிர் செய்யும் நிலங்கள் நஞ்சை,புஞ்சை,மானாவாரி,தரிசு என வகைப்படுத்தி விட்டு, அப்பொழுது அங்கு இருந்த பூர்வீக குடியிருப்புகளையும்,அதனை சுற்றி எதிர்காலத்தில் குடியிருப்பு தேவை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு
காலியாக உள்ள இடங்களையும் சேர்ந்தது “நத்தம்” என்று வகைப்படுத்தி வைத்தனர்.
2.சிஎம்டிஏ,டிடிசிபி உருவாகவில்லை என்றால் நத்தம்தான் இன்றுவரை வீட்டு மனை தேவைகளை நிறைவேற்றி கொண்டு இருக்கும்.ஒன்றே ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நத்தம் என்றால் குடியிருப்புக்கான நிலம் ஆகும்.

நத்தத்தை பொதுவாக கிராம நத்தம் என்று சொல்வார்கள்.இன்னும் ஆழமாக கவனித்து பார்த்தால் ஊர் தெருவில் இருப்பது ஊர் நத்தம் என்றும் சேரியில் இருப்பதை சேரி நத்தம் என்றும் இன்றளவும் மக்களிடையே புழங்கி வருவதை காணலாம்.
கிராமத்தில் உள்ள நத்தம் இடம் அனைத்தையும் ஒரே புலபடமாக வரைந்து அதற்கு ஒரு சர்வே எண்ணை கொடுத்தோ அதிக பரப்பு இருந்தால் 2,3 சர்வே எண்களை கொடுத்து வகைப்படுத்தி இருப்பார்கள். பெரும்பாலும் 1ஹெக்டேர் இல் இருந்து 10 ஹெக்டர் பரப்புவரை நத்தம்நிலங்களை பிரித்து இருப்பர்
உதாரணமாக திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் பழைய குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நத்தமாக வகைபடுத்தி சர்வேஎண் 625 என்றும் அதன் விஸ்தீரணம் 6ஏக்கர் என்றும் வைத்து கொள்வோம்.
மேற்படி 6ஏக்கர் பரப்பில் 50 குடும்பம் தனது வீடு , தோட்டம் வழி என 2.5ஏக்கரில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மீதி இருக்கிற இடங்கள் 3.5 ஏக்கர் காலியாக இருக்கும். இப்படி ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை “நத்தத்தில் புறம்போக்கு” என்று கூறுவார்கள் விட்டனர்.
இப்படி நத்தத்தில் புறம்போக்காக இருக்கிற பகுதிகள் அரசினுடையது ஆகையால் ஆரம்ப பள்ளி , சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம், நூலகம் ரேசன்கடை, பால் உற்பத்தியாளர் சங்கம் என்று அரசு உயர் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளும்.இன்னும் மீதம் இருக்கிற இடங்கள் யார் கைபற்றிலும் இல்லாமல் காலியாகவே இருக்கும்
8.மேற்படி 625 சர்வே எண்ணில் 2.5 ஏக்கரில் 50 குடும்பங்கள் இருப்பதாக சொன்னேன் அல்லவா, அந்த 50 குடும்பங்களும் 2.5 ஏக்கர் நத்தம் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து தலா 5 சென்ட் என்று கைப்பற்றுதலில் வைத்து இருக்க மாட்டார்கள். ஒருவர் 10 சென்டுக்கும் , ஒருவர் 8 சென்ட் மற்றொருவர் 4 சென்ட் இன்னொருவர் 1 சென்டுக்கு இன்னொருவர் 2 சென்ட் என்று ஆளுக்கு ஒரு விதமாய் கைப்பற்றுதலிலும் அனுபவித்தலிலும் இருப்பார்கள்

மேற்படி 50 நபர்களும் ஆளுக்கொருவிதமாய் கிரய(விடுதலை/செட்டில்மெண்ட்
பாகபிரிவிணை) பத்திரங்கள் வைத்து வைத்திருப்பார்கள்.சில இடங்களில் கிரைய(விடுதலை/செட்டில்மெண்ட்/பாகபிரிவிணை) பத்திரங்களும் இல்லாமல் பூர்வீக அனுபவத்தில் இருப்பர்.
உங்க வீட்டுக்கு பத்திரம் இருக்கே பட்டா இல்லையா? என்று கேட்டால் இது கிராம நத்தம், பட்டா தேவையில்லை , பட்டா கிடையாது பத்திரம் மட்டும்தான் என்று எல்லாம் சொல்வார்கள்
11.. நத்தம் நிலத்தில ஆரம்ப காலம் முதல் தொட்டே கிரயம், தானம்,விடுதலை, செட்டில்மென்ட் உட்பட அனைத்து சொத்து பரிமாற்ற பத்திரங்களும் சார்பதிவகத்தில் பதியப்பட்டது.அப்பொழுது நத்தம் நிலத்திற்கு பட்டா இருந்தால் பத்திரம் பதிவார்கள் என்ற நிலை இல்லை.இப்பொழுதும் நத்தம் சர்வே நடக்காத கிராமங்களிலும் பட்டா இல்லாமல் பத்திர பதிவு நடக்கிறது.

12.மேற்படி பத்திர பதிவுகள் எல்லாம் முழுபுலத்தின் சர்வே எண்ணை் வைத்துதான் நடக்கும். அதற்கு உட்பிரிவு சர்வே எணகள் இருக்காது.நான்கு மால் எல்லை (அ) ஜமாபந்தியில விவரிப்பதன் மூலமாக தான் ஒரு தனிப்பட்ட சொத்தை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.பிற சொத்துக்களில் உட்பிரிவு சர்வே எண்ணை வைத்து தெளிவாக அடையாள் கண்டு கொள்ள முடியும்.

13.கிராம நத்தத்தை பற்றி விவரம் தெரிந்தவர்கள் காலியாக இருக்கும் நத்தம் புறம்போக்கு இடங்களை மடக்கி அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.சில ஊர்களில் அதனை வீட்டு மனைகளாக பிரித்து ஊரில் இருப்பவர்கள் எல்லாம் சரிசமமாக பங்கு போட்டு கொண்டனர். ஒரு சில இடங்களில் அரசே காலியாக இருக்கும் இடங்களை பிரித்து நிலமற்றவர்களுக்கு , அடித்தட்டு மக்களுக்கு வீட்டு மனை ஒப்படையாக வழங்கி உள்ளது.

மேற்படி அரசு கொடுத்த ஒப்படைகள் ஆவணங்கள் கிராம அ.பதிவேடுகளில் நத்தம் கணக்குகளில் இன்று வரை ஏற்றபடவே இல்லை. எல்லா ஒப்படைகளும் முன்பு சொன்னது போல்தான் ஒரே முழுபுலசர்வே எண் தான்.ஒவ்வொரு நில ஒப்படைகளின் மனை உட்பிரிவு செய்து தனி எண்கள் கொடுக்கப்படவில்லை.புலபடத்தில் உட்பிரிவு (Fmb cut) வெட்டி வரையாமலே இருக்கின்றனர்.
15.சுதந்திரம் அடைந்த 1947ஆம் ஆண்டு முதல் 1990வரை கிராம நத்தம் என்றால் மேற்சொன்ன விஷயங்கள் தான் நடந்தது. 1990 to 1995 வரை தமிழக கிராமங்களில் உள்ள நத்த நிலத்திற்கு நத்தம் நிலவரித் திட்டம் கொண்டுவரப்பட்டது.

16.நத்தம் நிலவரி திட்டம் என்றால் இருக்கின்ற நத்தம் நிலங்களை துல்லியமாக அளந்து யார் யாரிடம் எவ்வளவு இடம் இருக்கிறது. என வரைப்படம் வரைந்து போது இடங்களை தனியாக வகைப்படுத்தி வழிகளை ஒழுங்குபடுத்தி அளந்து அதனை எல்லாம் ஒரு படமாக வரைந்து ஒவ்வொன்றுக்கும் உட்பிரிவு எண் கொடுப்பார்கள்.

உதாரணமாக முன் குறிப்பிட்ட திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், சேவூர் கிராமத்தில் சர்வேஎண் 625 க்கு 50வீடுகள் 2.5 ஏக்கர் பரப்பில் இருந்தது என்று சொல்லி இருந்தேன்.அவை நத்தம் நிலவரி திட்டத்திற்கு பிறகு 625/1, 625 /2, 625/3, 625/4…..625/49,625/50 வரை உட்பிரிவு செய்து நத்தம் புலப்படத்தில் மேற்க்கண்ட 50 உட்பிரிவுகளை குறிப்பிட்டு நத்தம் FMB தயாரிப்பர்.
சர்வே செய்ய வரும்போது யார் யார் நத்தத்தில் அனுபவத்தில் இருந்தார்களோ அல்லது யார் கிரயப்பத்திரங்கள் வைத்து இருக்கிறார்களோ அவர்களின் பட்டியல் தாயாரிக்கப்பட்டு நத்தம் பதிவேடு உருவாக்கப்பட்டு அந்த மக்களுக்கு நத்தம் பட்டாவும் வழங்கப்பட்டது.
மேலும் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா, நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா என இரண்டு படி நிலையான நடைமுறைகள் நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் பின்பற்றபடுகின்றன.
நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டாவில் , பிழைகள் ,தவறுகள் விஸ்தீரண அளவுகளில் சிக்கல்கள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள மனு செய்வதற்கு கால அவகாசம் கொடுப்பார்கள்.
21.மேலும் ஒருவர் நத்ததில் 10 சென்ட் அனுபவத்தில் இருந்தால் 10 சென்ட்டுக்கும் நத்தம் பட்டா கொடுக்கமாட்டார்கள்.3 செண்டுக்கோ அல்லது 4 செண்டுக்கோ நத்தம் தோராய பட்டா தருவார்கள்.மீதி இடத்தை அரசு இடமாக அறிவித்துவிடுவர்.அதனை ஆசேபிப்பவர்கள் அரசிடம் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மனு செய்யலாம்.இந்த பட்டா ஒரு தற்காலிக பட்டா ஆகும்.

தோராய பட்டாவில் முழுமையாக விவரங்கள் மக்களிடம் இருந்து வந்த பிறகு தவறுகள் எல்லாம் களைந்து இறுதியான பட்டாவாக கொடுப்பது நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா ஆகும். இந்த பட்டா தாயாராகும் போதே நத்தம் தூய அடங்கல் பதிவேடும் தயாராகிவிடும்.
1990 க்கு பிறகு தான், கிராம நத்த நிலத்திற்கு நத்தம் FMB நத்தம் தூய அடங்கல்,நத்தம் தோராய பட்டா, நத்தம் தூய பட்டா போன்ற ஆவணங்கள் உருவாகின. இதனால் தான் யார் யார் எந்த ஏந்த நிலத்தை வைத்து இருக்கிறார்கள் என துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டது. அதற்கென தனி சர்வே எண் உட்பிரிவுகளும் வந்ததால் புதிதாக பதியப்படும் கிரைய பத்திரங்கள் மற்றும் பிற பரிவர்த்தனைகளிலும் சர்வே எண்ணும் அதன் உட்பிரிவு எண்களும்ஆவணப்படுத்தபட்டன.
இதுவரை கிராம நத்தம் வரலாறு கோர்வை படுத்தி இருக்கிறேன். இனி கிராம நத்தம் நிலத்தில் என்னென்ன சிக்கல்கள் இருக்கிறது என்பதனை பார்க்கலாம்.
கிராம நத்த ஆவணங்களில் FMB தூய அடங்கல் தோராய பட்டா போன்றவை இன்றுவரை கணினி மயமாக்கப்படவில்லை. அதனால் இன்னும் ஆன்லைன் ஆகவில்லை. இன்றைய தலைமுறையினர் கிராம நத்த பட்டாவை ஆன்லைனில் தேடுகின்றனர். இவையெல்லாம் தற்போது ஆன்லைனில் கிடைக்காது என்பதே உண்மை.
இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப கட்ட நத்தம் நிலவரி திட்ட சர்வேக்களே செய்யாமல் இருக்கின்றனர். அதனால் நத்தம் FMB நத்தம் பட்டா இல்லாமல் வீட்டுகடன் வங்கிகடனுக்கு வாய்ப்பில்லாமல் அவதி பட்டு கொண்டு இருக்கினர்
மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தோராய பட்டா மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இறுதி பட்டாவான நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா நடைமுறை அப்படியே கிடப்பில் இருக்கிறது.
மேலும் பல கிராமங்களில் நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வந்தாலும், அதில் பல தவறுகள் இருக்கிறது. உரிமையாளர் பெயர் தவறுதலாக உள்ளது. உரிமையாளர் கிரைய பத்திரம் வைத்து இருந்தும், வேறு நபர் மீது தூய பட்டா கொடுக்கப்பட்டு இருக்கிறது. தூய பட்டாவில் எங்கள் இடத்தை சேர்த்து பக்கத்து வீட்டுக்காரர் தூயபட்டாவில் ஏற்றிவிட்டார்கள். என் இடத்தை புறம்போக்கு என வகைப்படுத்தி விட்டனர். என பல குளறுபடிகள் நத்தம் நிலவரிதிட்ட தூய பட்டா கொடுத்த சர்வேயிலும் இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தவறுதலாக நத்தம் பட்டாவில் பெயர் ஏறியவர் அல்லது பெயர் எறியவரின் வாரிசுகள் மேற்படி பட்டாவை வைத்து எங்களுடைய நிலம் என்று வழக்கு போடுகின்றனர். உண்மையான நில உரிமையாளர் மலங்க மலங்க முழித்துகொண்டு நீதிமன்ற வாயில் நின்று கொண்டு இருக்கிறார்கள்.
நத்தம் நிலவரி திட்ட சர்வே நடக்காத கிராமஙக்ளில் முழு புலத்தின் உட்பிரிவு செய்யபடாத ஒரே சர்வே எண்ணை வைத்து ஒரே இடத்திற்கு வேறு வேறு நபர் பெயரில் இரண்டுக்கு மேற்பட்ட பத்திரங்கள் பதியப்பட்ட்டு ஓர் இடம் இரு பத்திரங்கள் என்ற பிரச்சனையாகி இரண்டு நபரும் நீதிமன்றத்தில் மல்லுகட்டி கொண்டு இருக்கிறார்கள்.
31.நத்தம் நிலவரி திட்ட சர்வேயில் நிலத்துக்கான பத்திரங்கள் நில உரிமையாளர் வைத்து இருந்தாலும் புறம்போக்கு என நிலவரிதிட்ட சர்வேயில் வகைப்படுத்திவிட்டால் பட்டா இடமாக மாற்ற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தவம் இருக்கிறார்கள்.

32.பல கிராம நத்த இடத்தை அரசு இலவசமாகவோ பணம் வாங்கி கொண்டோ ஒப்படையாக வழங்கி இருக்கும்.நத்தம் சர்வே இதுவரை நடக்காத கிராமங்களில் மற்றும் சர்வே நடந்த கிராமங்களின் கிராம கணக்கில் குறிப்புகளாக கூட ஒப்படை பற்றிய விவரங்கள் இருக்காது. அரசு புறம்போக்கு ஆக்கிரமிப்பு என்று 10,20 ஆண்டுகளுக்கு பிறகு யாராவது வழக்கு தொடுத்தால் ஒப்படை நிலம்தான் என்று நிரூபிக்க அரசிடம் இது சம்பந்தப்பட்ட தனது BACK END கோப்புகள் தேடி எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கின்றனர்.

33.நத்தம் இடங்களில் உங்களுக்கு சிக்கல்கள் இருந்தால் முதலில் அங்கு நத்தம் நிலவரிதிட்ட சர்வே நடந்ததா? என்று பார்க்க வேண்டும்.அப்படி நடந்தால் தோராய பட்டாவில் உள்ளதா தூயபட்டாவில் உள்ளதா என பார்க்க வேண்டும்.நத்தத்தில் அரசு நில ஒப்படை கொடுத்து இருந்தால் அரசிடம் அது சம்மந்தபட்ட கோப்புகள் இருக்கிறதா என்று ஆராயவும்.அதன் பிறகு ஆவண நிலவரங்களுக்கு ஏற்றவாறு மாவட்ட ஆட்சியருக்கு மனுவோ நீதிமன்ற வழக்குககளுக்கோ செல்ல வேண்டும்


நன்றி வாட்சப் குழு குடிமராமத்து தென்புலத்தார்

சனி, 21 செப்டம்பர், 2019

வட்டெழுத்து பயிற்சி 1

தொல்லியல் கழகம் தஞ்சாவூர்
மற்றும்
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு
நடுவம் 
இணைந்து நடத்திய
கல்வெட்டுப் பயிற்சி17.07.2018 - 20.07.2018 வரை பயிற்சியில் கிடைத்த
நண்பர் திரு கோ. பெருமாள்  அவர்கள் 
உருவாக்கிய தொல்தமிழ் எழுத்து அறிவோம் என்னும் வாட்சப் குழுவில் பகிர்வதை இந்த ப்லாங்கில் பதிவேற்றம் செய்யப் போகின்றேன்

அட்டவனை 1













சனி, 2 மார்ச், 2019

மூக்கன், மூக்கையா, மூக்காயி, தவுடன் பெயர்க் காரணம்


மூக்கன், மூக்கையா, மூக்காயி
முதலில் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட, மூன்றாவதாகப் பிறந்த குழந்தைக்கு  மூக்குக் குத்தி, மூக்கையா, மூக்கன், மூக்காயி என்று பெயர் வைக்கின்றனர்.

தவுடன்
முதல் இரண்டும் பெண்ணாகப் பிறக்க மூன்றாவதாக ஆண் பிறந்தால், அல்லது முதல் இரண்டும் ஆணாகப் பிறந்து இறக்க,
மூன்றாவதாகவும் ஆண் பிறந்தால், மூன்றாவதாகப் பிறந்த அந்த ஆண்பிள்ளை நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டி, அவனைத் தானம் கொடுத்து விடுவார்கள்.  பின்னர் தவிட்டைக் கொடுத்து, பண்டமாற்று முறையில்  அவனை வாங்கிக் கொள்வார்கள்.
தவிட்டுக்கு வாங்கியபின் அவனுக்குத் தவிடன் (தவுடன்) என்று பெயர் வைப்பார்கள்.

நான்காவதாகப் பெண் பிறந்தால்
முதல் மூன்று குழந்தைகளும் பிறந்து உயிருடன் இருந்தாலும்சரி, இல்லாவிட்டாலும் சரி, நான்காவதாகப் பெண் பிறந்தால் நாதாங்கிக்கும் (  nā-tāṅki   n. நா² +. Hasp of alock, staple; clincher of a chain; பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையுறுப்பு.  )  வழி இருக்காது  என்று சொல்லி,  அதவாவது நாதாங்கிகூட இல்லாத வீட்டில் வாழும் நிலை ஏற்படும் என்கின்றனர்.
எனவே, நான்காவதாகப் பெண் குழந்தை பிறந்தவுடன், குழந்தை பிறந்த வீட்டின் நாதாங்கியைக் கழட்சி எடுத்து யாரிடமாவது விலைக்கு விற்றுவிடுகின்றனர்.

நான் கூறுவது சரியா?
ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?
இதற்கான காரண காரியம் என்ன?

https://kalairajan26.blogspot.com/2018/03/blog-post.html
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.அவர்களின் மகன் ஆறுமுகம் அவர்களால் சுதந்திரம் பெற்றதின் நினைவாக நடப்பட்டுள்ள கல்வெட்டு



நம் நாடு சுதந்திரம் அடைந்த பின் ஆறகழூரிரல் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பசும்பலூர் என்ற ஊரில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் மகன் ஆறுமுகம் அவர்களால் சுதந்திரம் பெற்றதின் நினைவாக நடப்பட்டுள்ள கல்வெட்டு.......

கல்வெட்டு வாசகம்



ஜெய்
ஹிந்
சுதந்திர
தின ஞா
ப கார்த்
தமாக க
ப்பல் ஓட்
டிய தமிழ
.ன் ஸ்ரீ வவு
பின்புறம்
-------------------
வ.வு.சி
ஆறுமு
கம் பிள்
ளை அவர்க
ளர் வந்(து) நாட்
ப்பட்டது
பசுவரை
யம் கல்
பசும்பலூ
ர் கிராமம்
நாட்பட்ட
----ர் வசி

நண்பர் திரு ஆறகழூர் வெங்கடேசன் பொன் அவர்கள் முகநூலில் பகிர்ந்தது (25/02/2019)

https://www.facebook.com/venkatesanpon/posts/1570335696403527

வெள்ளி, 19 அக்டோபர், 2018

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கேள்வியும் பதிலும்

வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் வசனம் தான் இது:

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…”

இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவே கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே,

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்…

அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்.

இது தான் சாக்குன்று யாராவது அந்த படத்தில் வரும் இன்னொரு விடுகதைக்கு விளக்கம் கேட்டால் என்ன செய்வது என பதறினேன். யாமிருக்க பயமேன் என மீண்டும் கூகிள் கைகொடுத்தது…

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”

இதற்கும் புராணத்தை வைத்து விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்னு நினைக்கிறேன்(!).

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை எதற்காக போடுகிறோம்? நெஞ்சை மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது, அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள் சரிதான்...??

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.

இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்பதற்கான சிறந்த விளக்கம்…
     
சீரியஸான வாழ்க்கைக்கு நடுவில் இந்த மாதிரி நகைச்சுவைகள் தரும் தெம்பே தனி.

புதன், 15 ஆகஸ்ட், 2018

கணிணி இயக்கத்திற்கு மூலம் தமிழ்

உலக உயிரியக்கத்திற்கு மட்டுமல்ல கணிணி இயக்கத்திற்கும் தொன்மைமிகு தமிழே மூலம் ஐயனே!

பரமேசுவரி

கணினி மொழியின் அடிப்படை விதிகள் நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்ற உண்மையை கண்டறிந்தேன் அதை உங்களோடு ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்வதில் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

விளக்கக் கட்டுரை:

யாப்பு இலக்கண விதி சீரும்,  கணினி மொழியின் அடிப்படை விதி
கீழேயுள்ள அட்டவனைப்படி ஒப்பீடு படித்தி பார்த்ததில் கணிமொழி அடிப்படை விதி நம் தமிழில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை
கண்டறிந்தேன்.

சான்றுகள்

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China, and India.

பண்டைய எகிப்து, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பண்பாடுகளில் பைனரி எண்கள் தொடர்பான அமைப்புகள் முன்னர் தோன்றியுள்ளன என்றுஆங்கிலேயர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் ஆனால் அது சமஸ்கிரத்தில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதைவிட  சமஸ்கிரதத்துக்கு மூத்த மொழியான நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதுதான் உண்மை தமிழனுக்கு பெருமை...நம் தமிழ் மொழியின் இத்தகைய சிறப்புகளை திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது என்று எனது இந்த ஆய்வின் மூலம் தெட்ட தெளிவாக தெறிகிறது.

கணினி மொழி bainary number யாப்பு இலக்கண விதியில் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது.
Computer programme language fundamental table matching as per below comparison

ஓர் அசைச் சீர் எ.கா single bit example
நேர் ( 0 )
 நிரை  ( 1 )
ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
• ஓரசைச்சீர்கள் . 1  bit binary .LOGIC NAME
1. நேர் 0 LOW
2. நிரை 1 HIGH
• ஈரசைச்சீர்கள் . 2 bit binary .LOGIC NAME
1. நேர்-நேர் 0-0 LOW-LOW
2. நிரை-நேர் 1-0 HIGH-LOW
3. நிரை-நிரை 1-1 HIGH-HIGH
4. நேர்-நிரை 0-1 HIGH-LOW
• மூவசைச்சீர்கள் . 3 bit binary logic name
1. நேர்-நேர்-நேர் 0-0-0  LOW–LOW-LOW
2. நேர்-நேர்-நிரை 0-0-1 LOW-LOW-HIGH
3. நிரை-நேர்-நேர் 1-0-0 HIGH-LOW-LOW
4. நிரை-நேர்-நிரை 1-0-1 HIGH-LOW-LOW
5. நிரை-நிரை-நேர் 1-1-0 HIGH-LOW-LOW
6. நிரை-நிரை-நிரை 1-1-1 HIGH-HIGH-HIGH
7. நேர்-நிரை-நேர் 0-1-0 LOW-HIGH-LOW
8. நேர்-நிரை-நிரை 0-1-1 LOW-HIGH-HIGH
• நாலசைச்சீர்கள் . 4 bit binary logic name
1. நேர்-நேர்-நேர்-நேர் 0-0-0-0 LOW-LOW-LOW-LOW
2. நேர்-நேர்-நேர்-நிரை 0-0-0-1 LOW-LOW-LOW-HIGH
3. நேர்-நேர்-நிரை-நேர் 0-0-1-0 LOW-LOW-HIGH-LOW
4. நேர்-நேர்-நிரை-நிரை 0-0-1-1 LOW-LOW-HIGH-HIGH
5. நிரை-நேர்-நேர்-நேர் 1-0-0-0 HIGH-LOW-LOW-LOW
6. நிரை-நேர்-நேர்-நிரை 1-0-0-1 HIGH-LOW-LOW-HIGH
7. நிரை-நேர்-நிரை-நேர் 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
8. நிரை-நேர்-நிரை-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
9. நேர்-நிரை-நேர்-நேர் 0-1-0-0 LOW-HIGH-LOW-LOW
10. நேர்-நிரை-நேர்-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
11. நேர்-நிரை-நிரை-நேர் 0-1-1-0 LOW-HIGH-HIGH-LOW
12. நேர்-நிரை-நிரை-நிரை 0-1-1-1 LOW-HIGH-HIGH-HIGH
13. நிரை-நிரை-நேர்-நேர் 1-1-0-0 HIGH-HIGH-LOW-LOW
14. நிரை-நிரை-நேர்-நிரை 1-1-0-1 HIGH-HIGH-LOW-LOW
15. நிரை-நிரை-நிரை-நேர் 1-1-1-0 HIGH-HIGH-HIGH-LOW
16. நிரை-நிரை-நிரை-நிரை 0-0-0-0 LOW-LOW-LOW-LOW

குறிப்பு: யாப்பு எப்போது தோன்றியது?
தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.

எனவே நண்பர்களே இனிமேல் தமிழ் மொழியில் இருந்ததுதான் கணினி மொழி தோன்றியது என்று நினைவில்கொள்வோம் நமது தமிழ் என்று பெருமைகொள்வோம்...!!!

இந்த தொகுப்பின் ஆய்வாளர்,

பி.மதியழகன்

சிங்கப்பூர்

தென்புலத்தார்2 வாட்சப் குழு   04/08/2018

யாழ்பாணர்கள் என்னும் ஆழ்வார்கள் - தமிழனின் தடயங்கள்

     சங்க தமிழ் வளர்த்த 12பாணர்கள்..

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக் கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்.


அக்காலத்தில் பக்தி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.


அதே போல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுகிறது.


63 நாயன்மார்களை தமிழ் இலக்கியம் காட்டும் நூல் சேக்கிழார் இயற்றிய

பெரிய புராணம்..


இவர் பெயர் பட்ட பெயரே மாடுகளை வைத்து உழவு புரிபவர் என்றே பொருள் படும்..

மாடுகளை 12நூற்றாண்டு வைத்திருந்த ஆயன்களின் (இடையர்) தலைவன்கள் தொகுப்பே இந்த நாயன்மார்கள்..


நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.


காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன.


இவர்கள் தலைவர்கள்.. ஒவ்வொரு குலத்திற்கு பின்னர் தலைவனாக மாறியவர்கள்.. பாட்டை எளிய நடையில் அனைத்து சமூகத்தினருக்கும் கொண்டு சேர்த்தனர்.. இவர்கள் பாடிய

திருத்தலம் ஊர்கள் வாழ்ந்தயிடமே..


நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர்ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.



தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம்(அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.


4000 பாடல் கொண்ட தெய்வீக பா ஸ்வரம் (பண் இசை குறுகள்)


குறிப்பாக அக்காலத்தில் பாயிரம் மற்றும் பிரபந்தம்  (ஸ்லோகம்) மாகவே செய்யுள் இயற்றப்பட்டது..



இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்


பொய்கையாழ்வார் - 100

பூதத்தாழ்வார் - 100

பேயாழ்வார் - 100

திருமழிசையாழ்வார் - 216

மதுரகவியாழ்வார் - 11

நம்மாழ்வார் - 1296

குலசேகராழ்வார் - 105

பெரியாழ்வார் - 473

ஆண்டாள் - 173

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55

திருப்பாணாழ்வார் - 10

திருமங்கையாழ்வார் - 1361


அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும்  வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.


ஆனால் யார் இவர்கள்?


நாகர் இன மக்களின் இடபெயர்ந்த இடையர் என்னும் ஆயர்களே இந்த யாழ் பாணார்கள்..


குறிப்பாக இவர்கள் பாக்கள் சுரமாக வகைபடுத்தபட்டு அதனை எளியமுறையில் கொடுத்துள்ளனர்..


இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.  இவை தவறாக புகுத்தியதாகவே தெரிகிறது காரணம் இவர்கள் பிறந்த காலத்தை பக்தி இலக்கியம் வடித்த புராணம் பெயரோடு தொடுத்துள்ளனர்..


மேலும் சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.


புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள்காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள்என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.


சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தார் இவரே 12 ஆழ்வார்களை வரிசைபடுத்திய நாதமுனி..


இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர்.


 அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.


நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.


தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக் கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக் கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.


 திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றும் உள்ளது.


1000.. வருடங்கள் பழமையான {காந்திஸ்வரம்} சிவன் கோயில், எட்டு சித்தர்கள் தவம்செய்த விலாங்காய்மரங்கள், எட்டு சித்தர்கள் வழிபட்ட லிங்கம் ராமர் காலடி பாதம் பதித்த பழமையான கல்வெட்டு இப்படி பல சிறப்புகளை கோண்டது ஆழ்வார்தோப்பு..


ஆழ்வார் தோப்பு நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இராமசுவாமி திருகோயில். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமை கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெரும். இந்த திருவிழாவை காண அனைத்து ஆழ்வார்தோப்பு வெளியூர்வாசிகளும் குடும்பத்தாருடன் வந்து இந்த திருவிழாவை தவறாமல் கண்டுகளித்து எம்பெருமான் ராமனின் அருளை பெற்று செல்வார்கள்.

இன்றைய இக்குலபிரிவினர் அக்காலத்தில் வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே..


அதே போல் இராமனும் காடுகளில் வேட்டையாடும் மற்றும் வில்லடித்து அரங்கத்தில் பாடும் அரங்கநாதனே..


நாகர்கோவிலை ஆண்ட காரிமாறன் தம்பதினருக்கு பிறந்தவர் சடகோபன் என்னும் *நம்மாழ்வார்* இவரும் வில்லடித்து பாடும் வில்லுப்பாட்டு பாடும் ஈழவர் சமூகத்தின் வழி வந்தவர்..



 இவருக்கு பின்னர் இவர் மாணவனாகவும் சீடராகவும் மதுரகவி ஆழ்வார் வந்தார்.. இவர் மதுரை கவி ஆழ்வாரே..


மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் என்பது இன்றைய தூத்துகுடி (தூதுவர்கள் குடி புகுந்த இடமே) பாணார்கள் ஊர்கள் ஊராக செல்லும் போது தூதுவர் ஆனார்கள்...


திருவெக்கா என்னும் இன்றைய காஞ்சியில் பிறந்தவர் பொய்கையாழ்வார்..

திருமயிலை என்னும் இன்றைய சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் பேயாழ்வார்..


இன்றைய மகாபலிபுரம்  (மாமல்லபுரம் ) த்தில்

பிறந்தவர் பூதத்தாழ்வார்..


இவர்கள் மூவரும் வில்லடித்து பாடிய யாழிசை பாணார்கள்..


 திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு குலசேகராழ்வார்  பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.



இவர்களே யாழ் மீட்டிய பாணர்கள்.. இலக்கியத்தில் அல்லது கல்வெட்டுகள் யாரும் குறிப்புகள் எதுவும் எழுதவில்லையே.. யாழ்பாணார் இவர்களா?


ஆம் யாழ் பாணார்கள் இவர்கள்.. ஆதிகாலத்தில் இலங்கையில் இருந்து இடபெயர்ந்த இடையர்கள்..

இவர்கள் நாகர் இன மக்கள் இவர்களின் இரு பிரிவினர் சேர்ந்த இடமே இன்றைய நாகர்கோவில் மற்றும் நாகப்பட்டினம்..


தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியேபள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.


இவர் பிறந்த ஊர் திருமண்டகுடி இப்போதைய சோழநாடு..


இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார்.

இவரை கல்லால் அடித்த கதைகள் உண்டு.. இவர் பிறந்த ஊர் இன்றைய திருச்சி.. அமலனாதிபிரான் என்ற பெயர் இவருக்கு உண்டு.. அனாதையாக சுற்றி திரிந்து பாடுபவர் என்றே பொருள்..


பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர் முத்தரையர் இனத்தை சார்ந்தவர் . ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார்.  இவ்ஊரும் சோழ மண்டலத்தில் உள்ள சீர்காழி இவர் பிறந்த ஊர்..சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்க பாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார்.


பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விதணு சித்தர்' என்பது இவர் இயற்பெயர்.


இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.


கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன. இவர் பெரிய யாழ் வகையில் மீட்டும் வல்லமையுடையோர்..


அவ்வாறிருக்க இவர் பிறந்த ஊர் இவரின் அடையாளம் இன்றைய திருவில்லிபுத்தூர்..

குறிப்பாக நாகர் இனமக்களை  குடிபுகுந்தயிடம் நாகங்கள் புத்தில் வசித்து வருவதால் நாகர்  இனமக்கள் வாழும் இடத்தை புத்தூர் என்று அழைக்கப்படும்.. வில்லிபுத்தூர் என்னும் வில்லடித்து பாடும் நாகர் இனமக்கள் வாழ்ந்த இடமே..


ஆண்டாள் திருவில்லிபுத்தூர் ஊரில் பெரியாழ்வார் ல் வளர்க்கபட்டவர் ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழிஎன்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.


தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.


தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.


இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.


திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.


திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:


கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:


 நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.


இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.


முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.


இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.


கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது..

 மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.


நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை..


 ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள்..


 ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.


ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.


மேகவிடுதூதாக அமைந்தவை..


 எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.


ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.


மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.


திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.



பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.


அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.


பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.


சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.


அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.


ஆனால் இளவயதில் இவருக்கு கண்ணன் பற்றிய பாடல்கள் பின்னாளில் முழ்கி சிறகை விரித்தாலும்.. ஏன் திருவரங்கம் அழைத்து வந்து அரங்கநாதனை மணக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது?


இவர் கருவறை சென்ற படி முக்தியடைந்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் அருகிலேயே கிருஷ்ணன் கோயில் இருக்க திருவரங்கம் வரவேண்டும்..


பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர் தேவரடியர்கள்..


அரையர் என்போர் வைணவக்கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். *இவர்கள் அனைவரும் ஆடவரே.*


 இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.


இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை  திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.


அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை 9 ம் நூற்றாண்டில் கட்டாயமாக்கியுள்ளனர்..

 


இவர்கள் ஏன் பெருமாள் மற்றும் கிருஷ்ணனை பாடவேண்டும்?


சக்கரத்தாழ்வார் -மயன் என்னும் மாயோன் இவரே..

ரதம் வடித்த முதல் தச்சன் என்னும் தச்சரதன் மயன் என்னும் மாயோனே ..


வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே மயனின் மகன் இராமன் என்ற இராகவன்.. கிருஷ்ணன் லட்சுமணன் -ஊர்மிளை  மகன்.. திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் பிறந்த ஊரே.. ஆயர்பாடியில் என்பது திருவில்லிபுத்தூரே இன்றும் பால்கோவா விற்கு பெயர் கொண்டுள்ளது.


சொல்ல போனால் பாபாணர்களே (பாடல் பாடியவரே) பார்பனர்கள்..

இராமனுக்கு பின்பு சாத்தனர் என்ற (சாஸ்தா) குருக்களே பிராமணர்.. பிரம்மன் என்பவர் ராமனே..


வில்லடித்து பாடும் ராமன் துணைவி வீனை மீட்டும் கலைவாணியே. .


***** *சுபம்* ******

கவுரியர் வாட்சப் குழு   20/06/2018

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏