இப்போதெல்லாம் வரலாற்றை சொல்லஆண்டுக்கணக்காக கி பி ,கி மு என்று கிறிஸ்துவை அடையாளமாகக்கொண்டு சொல்லுகிறோம் .பெரும்பாலும் இத்தகைய முறையே உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது
இது கிருஸ்துவுக்குப்பிறகுதான் நடைமுறைக்கு வந்தது .
உலகில் பரவலாக பலரும் கிமு, கிபி என கிறிஸ்துவ ஆண்டையே பயன்படுத்தி வருகின்றனர். முதன்முதலில் ஒலிம்பிக் நடந்த கிமு 776ஐ கிரேக்கர்கள் தேர்ந்தெடுத்து, கிமு 776லிருந்தும், ரோமானியர்கள் கிமு 753ல் இருந்தும் இந்த ஆண்டுக்கணக்கை தொடங்குகின்றனர்.
முகம்மது நபிகளார் மெக்கா விட்டு மதினா சென்ற அந்த பயணத்தை (கிபி 622) ஹிஜிரா ஆண்டாக முஸ்லிம்கள் கணக்கிடுகின்றனர்
ஆனால் தமிழ் நாட்டின் பண்டைய கல்வெட்டுகளிலும் ,பட்டயங்களிலும் வேறு வகை ஆண்டுக்கணக்குகள் பயன்பாட்டில் இருந்திருப்பதை நாம் காண்கிறோம் .
அவைகள் சக ஆண்டு ,கலியாண்டு ,கொல்லம் ஆண்டு ,விக்கிரம ஆண்டு போல இன்னும் பல பயன்பாட்டில் இருந்திருக்கிறது .அவைகளை பற்றிய செய்திகளையும் ,ஆந்த ஆண்டுக்கணக்கை எப்படி தற்போதைய கி மு ,கி பி க்கு மாற்றுவது என்பதை பார்ப்போம் .
சக ஆண்டு
சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும். என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.
பண்டைய கல்வெட்டுகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ள ஆண்டுமுறை இதுவே ஆகும் .ஏன் இத்தகைய ஆண்டுமுறை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது ? தங்களுக்காக ஏன் ஒரு தனி ஆண்டுமுறை அப்போது ஆண்ட மன்னர்கள் ஏற்படுத்தவில்லை என்பது கேள்விக்குறிதான் .கௌதமிபுத்ர சதகர்ணி கி.பி. 78-102) சாதவாகனர் அரச வம்சத்தில் 23ஆம் அரசராக திகழ்ந்தார். சதவாகனர்களில் மிகப்பெரும் மன்னராக இருந்த கௌதமிபுத்ரன் தன் தந்தை சதகர்ணிக்கு பின் அரசன் ஆனார்.
கௌதமிபுத்திர சதகர்ணி தன் பேரரசை பெரிதளவில் விரிவடைய வைத்து இரு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர். இவரது ஆட்சிக் காலத்தில் சகர்கள், கிரேக்கர்கள், மற்றும் பகலவர்கள் சாதவாகனப் பேரரசின் மீது படையெடுப்புகளை முறியடித்து சாதவாகனப் பேரரசை விரிவு படுத்தினார்.
கௌதமிபுத்திர சதகர்ணியின் ஆட்சிப் பகுதியில் தக்கான பீடபூமி, சௌராஷ்டிரம், அவந்தி, இருந்ததாக நாசிக் கற்சிற்பங்கள் எடுத்துரைக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் காஞ்சியையும் வென்றுள்ளார்.
ஆனால் சதகர்ணிவ்ன்பவர் யார் என்பதில் இன்னமும் நூற்றுவர் யார் என்பதைக்குறித்து சர்ச்சைகள் உண்டு . தமிழ் நாட்டின் அதிக கல்வெட்டுகளில் காலத்தைக்குறிப்பிட சக ஆண்டு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது .எனவே இந்த சக ஆண்டுவரலாறுஅப்போதைய தமிழ் மக்கள் அறிந்த வரலாறாகவே இருந்திருக்க வேண்டும் .
நமது மன்னர்கள் சக ஆண்டுக்குறிப்புடன் ஓர் அரசன் எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக் கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர். ஓர் அரசன் ஐந்தாம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில் கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால் ‘ஐந்தாவதுக்கு எதிராமாண்டு’ என்று எழுதப்படும்.
இத்தகையசக ஆண்டு முறையை இன்றையவழக்கில் உள்ள கி பி கி மு முறைக்கு மாற்றவேண்டுமானால் அந்த ஆண்டுடன் 78 ஐ கூட்டவேண்டும்
உதாரணமாக சக ஆண்டு 792 ஐ குறிக்கும் கல்வெட்டு ஒன்று இருந்தால் .அதில் வரகுண பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .இதை கி பி ஆண்டு முறைக்கு மாற்றும் போது 792+ 78 கி பி 870 என்று கணக்கிடலாம் .
இப்போதே கட்டுரை நீண்டுவிட்டது மீதி ஆண்டு கணக்குகளை அடுத்துப்பார்க்கலாம் .நன்றி !
தொடரும் ......
#அண்ணாமலைசுகுமாரன் 21/11/19
REPOST 21/11/2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக